உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Saturday, May 19, 2018

வெற்றிக் கொண்டாட்டத்தை தன் முகம் மீது கரி பூசிக் கொண்டாடி இருக்கிறது பாஜக.

@avargalunmaigal
வெற்றிக் கொண்டாட்டத்தை தன் முகம் மீது கரி பூசிக் கொண்டாடி இருக்கிறது பாஜக..


தேசமெங்கிலும் இருக்கும்  மோடி மற்றும் பாஜகவின் அபிமானிகள் பலரின் அதிருப்தியை சம்பாதித்த பெரும்பிழையை கர்நாடகத்தில் பாஜக செய்து இருக்கிறது


தன் சாம்ராஜ்யத்தை இந்தியா முழுவதும் விரிக்க அதிகார வெறி கொண்ட மோடி முயற்சித்தார். அந்த முயற்சியின் காரணமாக தென் இந்திய கோட்டையை பிடிக்க அதன் நுழைவு வாயிலான கர்நாடக்த்தில் களம் இறங்கினார். அதன் காரணமாக வெளிநாட்டிலே  தன் நேரத்தை செலவிடுவதையும் குறைத்தார் ஏன் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பை படித்து பார்த்து அதன் படி செயல்பட கூட நேரம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டிற்கே பதில் அளித்துவிட்டு கர்நாடகம் முழுவதும் தன் அதிகாரத்தை முழுவதும் பயன் படுத்தி சுழண்ரு வந்தார். இப்போது வீசுவது மோடி அலை அல்ல ,அது சுறாவளி என்றும் சொல்லி சுழன்றார். அவர் முயற்சியும் தோல்வி அடையவில்லை மற்ற கட்சிகளை விட அதிகம் இடம் பிடித்து வெற்றியும் அடைந்தார். ஆனால் அப்படி அடைந்த வெற்றி தான் நினைத்ததை சாதிக்கும் அளவிற்கு கிடைத்த வெற்றி அல்ல என்ற போது அதிகார வெறி அவர் கண்னை மறைத்தது என்றே சொல்ல வேண்டும். அதனால் அவர் எடுத்த முயற்சி யானைக்கும் அடி சருக்கும் என்று சொல்வது போல மோடிக்கும் சறுக்கும் என்பதை நிறுபித்துவிட்டது

Thursday, May 17, 2018

ஆண்மை இல்லாதவனுக்கு ஆண்மையை நிருபிக்க 15 நாளில் வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறதா?

ஆண்மை இல்லாதவனுக்கு ஆண்மையை நிருபிக்க 15 நாளில் வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறதா?


ஜனநாயக நாடாக இருந்து வரும் இந்தியா சர்வாதிகார நாடாக மாறிவருகிறது. அதை எதிர்ப்பவர்கள் மட்டுமன்றி ஆதரிப்பவர்களும் வருங்காலத்தில் மிகவும் பாதிக்கப்படப் போகின்றனர்... அப்படி தாங்கள் பாதிக்கப்பட்டு அழிகிறோம் என்று உணரும் போது எல்லாம் நம் கைவிட்டு போய் இருக்கும்..தங்களது வருங்கால சந்ததியினர் நாசமாக போனாலும் பரவாயில்லை என்று நினைப்பவர்களாகவே இந்த கால மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் அய்யோ...

Wednesday, May 16, 2018

கர்நாடக தேர்தலும் அதன் எதிரொலியும்!


@avargal unmaigal
கர்நாடக தேர்தலும் அதன் எதிரொலியும்! karnataka election detailed analysis

இரண்டு நாட்களுக்கு முன் முடிந்த கர்நாடக தேர்தல் ஒட்டுமொத்த இந்தியர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

தென் இந்தியாவில் தங்கள் இருப்பை ஆரம்பிக்கவும், தக்கவைத்து கொள்ளவும் பிஜேபிக்கு இதை விட நல்லதோர் சந்தர்ப்பம் கிட்டாது என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த தேர்தலில் முடிவுகளுக்கு முன் சென்ற தேர்தலில் பிஜேபி ஏன் தோற்றது என்று அலசி பார்த்தோம் என்றால்.. அது கட்சியின் பிளவே . எடுயூரப்பா மற்றும் இன்னொரு தலைவர் கட்சியை விட்டு வெளியேறி தனி தனியாக நிற்க காங்கிரஸ் பெரும்பான்மையோடு ஆட்சிக்கு வந்தது. அந்த தேர்தலில் BJP ஒன்றாக இணைந்து நின்று இருந்தால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து இருக்குமா என்பதே சந்தகேம்.

Sunday, May 13, 2018

தி கிரேட் சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி

@avargal unmaigal

தி கிரேட் சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி


சேலம் மாவட்டத்தின் முதல் பெண் மாவட்ட ஆட்சியர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் ரோகினி பாஜிபாகரே. சேலம் மாவட்டம் இதுவரை 171 மாவட்ட ஆட்சியர்களைப் பார்த்துள்ளது. அதில், 170 மாவட்ட ஆட்சியர்கள் ஆண்கள் தான். இந்நிலையில், 171-வது மாவட்ட ஆட்சியராக கடந்த 28-ஆம் தேதி பொறுப்பேற்ற ரோகிணி தான், அம்மாவட்டத்தின் முதல் பெண் மாவட்ட ஆட்சியர்.

Saturday, May 12, 2018

தமிழக போலிஸும் எஸ்.வி,சேகரும்

@avargalunmaigal @avargal Unmaigal
தமிழக போலிஸும் எஸ்.வி,சேகரும்


பேஸ் புக் மூலம் தவறான கருத்துகளை பரப்பிய எஸ்,வி,சேகர் சட்டத்திற்கு பயந்து ஒழியவில்லை மறையவில்லை சட்டத்தை கேலி செய்து கோயில் கோயிலாக சென்று வந்து கொண்டிருக்கிறார். என்ன அவர் சமுக வலைத்தளங்களிலும் டிவி.சேனல்களில் மட்டும் தன் தலையை காட்டவில்லை.

நீதிபதிகள் கண்டணம் தெரிவித்தும் ..போலீஸ்சாரோ அவரை வலைவீசி தேடி வருவதாக சொல்லுகிறது

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog