Friday, October 8, 2010

சில பெண் சங்கங்கள் நயன்தாரவுக்கு எதிராக போரடுவதாக செய்தி படித்தேன் என்ன கொடுமையாடா...அந்த பெண் சங்கங்கள் பிரபு தேவாவிற்க்கு எதிராக அல்லவா போராட வேண்டும் அதற்கு பதிலாக நயன்தாரவுக்கு எதிராக போரடுகிறார்கள். என்ன செய்து பிரபு தேவா அந்தநயன்தாரவை மயக்கினாரோ அல்லது என்ன ப்ளாக் மெயில் செய்து அந்த பெண்னை தன் பக்கம் இழுத்து வைத்துள்ளாரோ...இதை எல்லாம் தெரியாமல் நயன்தாராவுக்கு எதிராக போராடுகிறார்கள். நான் நயன்தாராவுக்காக சப்போர்ட் பண்ணி பேசவில்லை. தவறு செய்பவர்கள் இரண்டு பேரும்தான் ஆனால் தண்டனை ஒருவருக்கு மட்டும்தானா என்பதுதான் என் கேள்வி.






சிறிது காலத்திற்கு முன்பு ஒரு தமிழ் பத்திரிக்கை நிருபர் ஒருவர் தமிழ் நடிகையை பற்றி எழுதியதற்க்காக தமிழ் சினிமா சங்கம் கூட்டம் கூட்டி கண்டனம் தெரிவத்தவர்கள் இதைப்பற்றி ஒரு கண்டண அறிக்கை கூட விடாதது ஏன்? பண்பு பண்பு என்று கூறும் தமிழ் திரையுலகத்தினர் கூறும் தமிழ் பண்பு இதுதானா? ஏன் தமிழ் திரை உலகத்தினர் இவர்கள் இருவரையும் தமிழ் திரை உலகத்தில் இருந்து விலக்கி வைக்க கூடாது.



குஷ்பு அவர்கள் ஏதோ சொன்னதற்காக வரிந்து கட்டி போராட்டம் நடத்திய அரசியல் கட்சிகளூம் அவரின் மேல் வழக்கு தொடுத்த அமைப்புகளும் எங்கே போயின இப்போது.?



நயன்தாரவை கண்டனம் செய்து எழுதும் செய்திபத்திரிக்கைகள் மற்றும் வலைத்தளங்கள் ஏன் பிரபுதேவாவை மட்டும் வாயில் கைவத்து சூப்பும் குழந்தையாக பாவித்து எழுதுகின்றன? முதலில் தண்டிக்க பட வேண்டியவர் பிரபு தேவா அதன் பின் நயன்தாரா..



நான் எட்டாம் வகுப்பு படிக்கையில் என் கூட படித்தவனின் தந்தை ஒருவர் அவரின் மனைவிக்கு தெரியாமல் இன்னொரு பெண்ணிடம் தொடர்பு கொண்டடிருந்தார் ஒரு நாள் அது அவரின் மனைவிக்கு அது தெரியவர அவர் என்ன செய்தார் தெரியுமா?



அவர் வீட்டிற்கு வந்ததும் கத்தி ஆர்பாட்டம் பண்ணாமல், சத்தம் போடமல் கத்தியை எடுத்து அவரின் ஆண் உறுப்பை வெட்டி விட்டாள்.அது போல நம் தமிழ் பெண்கள் செய்தாள் எந்த ஆணிற்க்காவது தன் மனைவியை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் வருமா?



இந்த மாதிரி தவறுகள் நாட்டிலேயே நடக்க வில்லையா என்று கேட்க கூடும். தப்புகள் எல்லா இடத்திலும் நடந்து கொண்டுதான்

இருக்கிறது..இவர்கள் பொதுவாழ்க்கையில் வந்துள்ளதால் இதைப் பற்றி பேச்சு எழுந்து உள்ளது. பிரபு ஒரு நல்லவராக இருந்தால் மனைவியிடம் உட்கார்ந்து பேசி அவர்களுக்குள்ள பிரச்சனைகளை பேசி தீர்த்து இருக்கலாம் அப்படியும் தீர்வு காண முடியாத பட்சத்தில் விவாகரத்து வாங்கிவிட்டு அவருக்கு பிடித்தவரோட கும்மாளம் அடிக்காலாம். என்ன நான் சொல்வது சரியா அல்லது இல்லையா என்பதை இங்கு வந்து படிப்பவர்கள் தெரிவிக்கலாம்

6 comments:

  1. பாஸ்..இது நல்லவரா..கெட்டவரா அப்படிங்கிறது விஷயமே இல்லை..என்னை கேட்டால் சினிமா காரனுங்களும் உணர்வுள்ள ஆளுங்க தான்...அவங்க செலேபிரட்டி ஆளுங்கனாலே நாறடிக்க படுது இந்த விஷயம் எல்லாம்...எனக்கு தெரிஞ்சு...நான் அன்றாட வாழ்க்கையில் பார்த்துட்டு இருக்கும் அன்றாட ஜனங்கள் வாழ்க்கையில் இது மாதிரி ஏகப்பட்ட கதை பார்த்துருக்கேன்...கேட்ருக்கேன்..என்ன அதெல்லாம் வெளிய தெரியிறதில்லை...நாம பிரபலங்கள் வாழ்கையை மட்டும் எட்டி பார்கிறது தான் இந்த விவாதம்...இது இப்போ இருந்து இல்லை..திரை வாழ்கைனால் இது மாதிரி சாக்கடை நிறையவே இருக்கும்..ஏன் ஜெமினி கணேஷன் தாத்தா அந்த காலத்திலேயே பண்ணாத கல்யாணங்களா...அப்போலாம் யாருமே சங்கங்களோ..திரை அமைப்பினரோ கேள்வி எழுப்பலையே..இப்போ பிரபுதேவா க்கு கேட்ருவாங்களா?அப்படிலாம் கேட்டாலும்..அவனுங்க வாழ்க்கையிலும் ஏகப்பட்ட ஓட்டை இருக்கும் பாஸ்...ஆனால் நீங்க சொன்ன நயன்தாராக்கு எதிரா பெண்கள் சங்கம் அடிக்கும் கூத்துக்கள் பற்றி நீங்க சொன்ன கருத்துகளை உறுதியா ஏத்துக்குறேன்..என்ன பண்ண சொல்றேங்க..நம்ம சமூக அமைப்பு அப்படி பெண்களை பேஸ் பண்ணியே கட்டம் கட்டுது.எய்தவன் இருக்க அம்பை பிடிக்கிறது தான் வாடிக்கை..பட்..பரஸ்பர பேச்சுக்கள் தம்பதிகளுக்குள் விட்டு போச்சுனால் தாம்பத்தியம் அவுட்..ரம்லத் கோர்ட் போய்ட்டாங்க...let us watch what will be going....அப்படி வேடிக்கை பார்ப்பது தானே நம்ம ஸ்டைலு..ஹீ..ஹீ..

    ReplyDelete
  2. இப்போ பிரபுதேவா க்கு கேட்ருவாங்களா?அப்படிலாம் கேட்டாலும்..அவனுங்க வாழ்க்கையிலும் ஏகப்பட்ட ஓட்டை இருக்கும் பாஸ்...ஆனால் நீங்க சொன்ன நயன்தாராக்கு எதிரா பெண்கள் சங்கம் அடிக்கும் கூத்துக்கள் பற்றி நீங்க சொன்ன கருத்துகளை உறுதியா ஏத்துக்குறேன்..என்ன பண்ண சொல்றேங்க..நம்ம சமூக அமைப்பு அப்படி பெண்களை பேஸ் பண்ணியே கட்டம் கட்டுது.எய்தவன் இருக்க அம்பை பிடிக்கிறது தான் வாடிக்கை..பட்..பரஸ்பர பேச்சுக்கள் தம்பதிகளுக்குள் விட்டு போச்சுனால் தாம்பத்தியம் அவுட்..ரம்லத் கோர்ட் போய்ட்டாங்க...let us watch what will be going....அப்படி வேடிக்கை பார்ப்பது தானே நம்ம ஸ்டைலு..ஹீ..ஹீ..

    ReplyDelete
  3. பாஸ் உங்களுக்கு என்ன கமெண்ட் போட்டாலும்..failed னு என் மெயில்கே ரிவிட் அடிக்குது எல்லாம்..ஒண்ணும புரியலே உலகத்திலே.. !!

    ReplyDelete
  4. ஆனந்தி அவர்களுக்கு நன்றி.. பாஸ் என்றால் தலைவர் என்று அர்த்தம். ஜாக்கிரதை அடிக்கடி நீங்கள் பாஸ் என்று அழைப்பதை நம் மதுரை அண்ணண் அழகிரி அவர்களுக்கு தெரிய வந்தால் உங்கள் பாடு திண்டாட்டம் தான். முதலில் வந்து கருத்து தெரிவித்தற்கு நன்றி. உங்கள் வலைப்பக்கத்தில் புதிய பதிவை எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் உங்கள் பாஸ்

    ReplyDelete
  5. அட பாஸ்..எங்க அஞ்சா நெஞ்சன் அண்ணாவை கவுத்த எனக்கு டெக்னிக் தெரியுமே..திருநகர் இல் ரெண்டு கட் அவுட்,சிம்மக்கல்லில் 10 போஸ்டர் ..ஹீ..ஹீ..இது போதும் ல..எப்பூடி...

    ReplyDelete
  6. பிரபு தேவா தண்டிக்கப்பட வேண்டியவர் என்பதில் எள்ளளவிலும், சந்தேகமில்லை! ஆனால், இந்த நயன தாரா ஏன், பொருந்தா நட்புகளையே விரும்புகிறார்? அந்த நட்புகள் ஏன் விரைவிலேயே முடிவுக்கு வந்து விடுகிறது? விரைவிலேயே ஏன் புது நட்பும் வந்து விடுகிறது? பிரச்சனை யாரிடம்? உப்பைத் தின்றால், தண்ணீர், குடித்தேயாக வேண்டும்!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.