Tuesday, January 4, 2011

கலைஞர் வாங்கப் போகும் (உலகத்தின் மிகப் பெரிய விமானம் தகவல்கள்)Antonov An-225 Mriya, a Russian plane


ஆமாங்க எலக்ஷன் வரப்போகுது இலவச வாக்குறுதிகளை அள்ளித் தர ரெடியாகி கொண்டிருக்கிறார். கல்யாண வீட்டு வாசலில் எச்சி இலைக்காக எதிர் பார்த்து கொண்டிருக்கும் பிச்சைகாரர்கள் போல தமிழக மக்கள் இலவசத்திற்க்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்ட வீட்டுக்கு துரோகம் பண்ணும் பழக்கம் இன்னும் தமிழக மக்களுக்கு வரவில்லை என்று நினைக்கிறேன். அதனால் அவர்கள் ஒரு வேளை ஓட்டு போட்டு மீண்டும் கலைஞர் அவர்கள் முதலைமச்சராக வந்தால் வேற என்ன செய்வார்? அவருக்கு வரும் பணத்தை வைத்து அவரின் பெரிய குடும்பத்திற்கு ஏற்றவாறு ஒரு பெரிய விமானம் வாங்க கூட முயற்ச்சி செய்வார். அதற்க்காக அவருக்கு உதவி செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் நான் அவருக்காக உலகத்திலேயே உள்ள மிகப் பெரிய விமானத்தை பற்றி இங்கே விபரம் தருகிறேன்.



Antonov An-225 Mriya, a Russian plane இதுதான் உலகத்தின் மிகப்பெரிய விமானம் ஆகும். இந்த விமானம் டிசம்பர் 21, 1988 லிருந்து பறக்க ஆரம்பித்தது.. இது மிகப்பெரிய & அதிக எடையுள்ள பொருட்களை ஏற்றி செல்லும் உலகத்தின் மிகப்பெரிய கமர்ஷியல் விமானம் ஆகும். இதில் 250,000 kg (550,000 lb) அளவு எடையுள்ள பொருட்களை எடுத்து செல்லலாம்.இது மிகப்பெரிய 6 எஞ்சின் களைக் கொண்டு உள்ளது. 32 வீல்களை கொண்ட ஒரே விமானம் இது மட்டும்தான். இந்த விமானம் ஒரு கால்பந்தாட்ட மைதானம் அளவுக்கு பெரியது. ஏழுமாடி உயரம் உள்ளது.

மேலும் விபரங்களுக்கு கீழேயுள்ள படங்களையும் ,வீடியோ க்ளிப்புகளை பார்க்கவும்.






ஒருவேளை தப்பித்தவறி தமிழக மக்களுக்கு சூடு சொரணை வந்து பணம் வாங்காமல் வேறு யாருக்காவது ஓட்டுபோடலாம். அப்படியே வந்தாலும் வேறு யாரு வருவார்கள் அம்மாதான் வருவார். அவர் என்ன செய்வார் கலைஞர் செய்து கொண்டிருப்பதைதான் அவரும் செய்வார். இதுதாண்டா தமிழகத்தின் தலைவிதி



பக்கத்து நாட்டில் உள்ள நம் சகோதர சகோதரிகள் துடிதுடிக்க செத்து மடிந்த போது வேடிக்கை பார்த்து இங்கு கூத்தும் கொண்டாடமுமாக இருந்தீர்களே அவர்களீன் சாபம் உங்களை சுட்டு பொசுக்கும் நாள்கள் வெகுதூரம் இல்லை. போட்டிபோட்டுக் கொண்டு எலகஷ்ன் வரும் முன்னர் தங்கள் பலத்தை காண்பிக்க 10 லட்சம் 20 லட்சம் என்று கூட்டம் கூட்டுகிறார்களே இந்த அரசியல் வாதிகள். நம் சகோதர சகோதிரிகள் செத்து மடியும் போது இந்த அளவு கூட்டத்தை கூட்டி ஏன் மத்திய அரசை எதிர்க்கவில்லை.



அந்த சகோதர சகோதரிகள் அழுவுவதை போல நாமும் கதறப் போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

4 comments:

  1. //க்கத்து நாட்டில் உள்ள நம் சகோதர சகோதரிகள் துடிதுடிக்க செத்து மடிந்த போது வேடிக்கை பார்த்து இங்கு கூத்தும் கொண்டாடமுமாக இருந்தீர்களே அவர்களீன் சாபம் உங்களை சுட்டு பொசுக்கும் நாள்கள் வெகுதூரம் இல்லை. போட்டிபோட்டுக் கொண்டு எலகஷ்ன் வரும் முன்னர் தங்கள் பலத்தை காண்பிக்க 10 லட்சம் 20 லட்சம் என்று கூட்டம் கூட்டுகிறார்களே இந்த அரசியல் வாதிகள். நம் சகோதர சகோதிரிகள் செத்து மடியும் போது இந்த அளவு கூட்டத்தை கூட்டி ஏன் மத்திய அரசை எதிர்க்கவில்லை//

    என்ன திடிர்னு சீரியஸ் ஆகிட்டிங்க...நீங்க முதல்வர் குடும்பத்தை மட்டும் கருவுங்களேன்...வீ ஆர் பாவம்..

    அப்புறம் அரிய தகவல்கள்...நன்றி..நன்றி..:)))

    ReplyDelete
  2. இந்த விஷயம் இப்ப தான் கேள்விபடுறேன்....

    சூப்பர்....

    வீடியோ க்ளீப்ல என்ன சொல்றாங்கன்னு கேக்க முடியல ;( உங்க ப்ளாக்ல வச்சுருக்குற பாட்டு தடுக்குது

    ReplyDelete
  3. நானும் இந்தவிஷயம் இப்பதான் கேள்விப்படரேன்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.