Monday, April 4, 2011


திமுகவின் இறுதிநேர அதிரடிதிட்ட ரகசியங்கள் அம்பலம்


தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்று கடுமையாக உழைக்கின்றனர் திமுகவினர். அதிமுகவின் கடும் போட்டியை சமாளித்து கொண்டு வருகின்றனர். தேர்தல் கமிஷன் எடுக்கும் கடுமையான நடவடிக்கைகளால் பணத்தை கொடுத்து ஒட்டுவாங்கும் முறைக்கும் பெருத்த அடி விழுந்துவிட்டது. இருந்தபோதிலும் எப்படியும் மக்கள் மனதை கவர்ந்து ஒட்டுகளை பெற்றுவிட வேண்டும் என்று கடுமையாக சிந்தித்து அதற்கும் ஒரு வழி கண்டுபிடித்து விட்டனர். அதை பிரச்சார கடைசி நாளில் அறிவிப்பதாக உள்ளனர்.

வழக்கம் போல அதையும் அவர்கள்..உண்மைகள் ப்ளாக்கின் துப்பறியும் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

அதை உங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

எதையும் பணமாகவோ அல்லது பொருளாகவோ கொடுத்தால் தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துவிடும் என்பதால் புதிய கடைசி நேர வாக்குறுதிகளை அளிக்க முடிவு செய்துள்ளது. இதை கடைசி நேரத்தில் அறிவித்தால் அதிமுக அதை காப்பி அடிக்க முடியாது என்பதால் அதை இப்போது அறிவிக்கவில்லை.

அந்த வாக்குறுதிகள் இங்கே வந்து படிக்கும் நண்பர்களுக்காக இப்போதே நான் வெளியிடுகிறேன்.

வாக்குறுதிகள் :

1. தமிழகத்தில் இருந்து திருப்பதி கோயிலில் சென்று மொட்டை போடுபவர்களுக்கு இலவச பஸ் வசதியும். கோயிலில் முதலில் சென்று வழிபட V.I.P பாஸ் வழங்கப்படும்.

2. வயதான இந்துகளுக்கு காசி, ராமேஸ்வரம் சென்று வர இலவச வசதியும், முஸ்லிம் மதத்தினருக்கு ஹஜ் சென்றுவர இலவச வசதியும். கிறிஸ்துவர்களுக்கு வாடிகன் சென்று வர வசதியும். மத நம்பிக்கை இல்லாதவர்களுக்கு விரும்பும் நாடு சென்று வர வசதியும் செய்து தரப்படும்.

3. ஏழைகளுக்கும் மத்திய வர்க்கத்தினருக்கும் மூன்று வேளையும் உணவு அவரவர் வீடுகளுக்கே இலவசமாக கொண்டு வந்து தரப்படும்.!மேனு :

காலை உணவு: இட்லி, தோசை, பூரி, உப்புமா, காபி

மதிய உணவு: சாதம், காய்கறி இறைச்சி, மீன், கோழி , ஐஸ் க்ரிம்

இரவு உணவு: சப்பாத்தி காய்கறி, பழம் ,பால்

இந்த உணவு பிடிக்காதவர்கள். பிட்ஸா, பர்கர், பாஸ்தா போண்ற வெளி நாட்டு உணவுவகைகள் மட்டும் விரும்புவர்களுக்கு சலுகைவிலையில் உணவுகள் வழங்கப்படும்.

4. சொகுசு மெத்தை, ஏர் கண்டிஷன், பொழுது போக்கிற்கு கலர் டெலிவிஷன் (இதுவரை வாங்கதவர்களுக்கு), இலவசமாக கேபிளில் புதிய படங்களும் ஒளிபரப்பப் படும்!

5. குடும்பத்துக்கு ஒரு பிளாட் இலவசம், வீட்டுக்கு ஒருத்தருக்கு அரசு வேலை,

6. இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல்ல படிக்கிற பசங்களோட ஸ்கூல் பீஸ அரசாங்கமே கட்டும்,

7.வாடகை வீட்டுல குடியிருக்கறவங்க வாடகையை ஹவுஸ் ஓனர்களோட பேங்க் அக்கவுண்ட்ல அரசாங்கமே போடும்

8. வெளியில் சென்று வர விரும்பும் அனைவருக்கு பஸ் பாஸ் இலவசமாக தரப்படும்.

9. பஸ்ஸில் சென்று வர விரும்பாதவர்களுக்கு மிக குறைந்த விலையில் கார்களில் சென்று வர ஏற்பாடு செய்து தரப்படும்.

10. வாக்கிங்க் செல்ல விரும்பும் முதியோர்களுக்கு துணையாக செல்ல இளம் அழகிகளும், அழகர்களும் அரசாங்க செலவில் நியமிக்க படுவார்கள்.

11. பாரின் சரக்குகளை டாஸ்மார்க்கிலும், டாஸ்மார்க்கில் கிடைக்கும் சரக்குகளை ரேஷன் கடைகளிலும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

12. புதிய குடி வரி சட்டம் இயற்றி அதன் மூலம் குடிக்காதவர்களிடம் இருந்து மட்டும் வரி வசூலிக்கப்படும்.

13. ப்ளாக் வைத்து பதிவுகள் போடும் தமிழ் மக்களுக்குஇலவச கம்பியூட்டர் மற்றும் இண்டர்நெட் வசதி செய்து தரப்படும். பதிவுகளை டைப் பண்ண மற்றும் பின்னுட்டம் போட சோம்பேறி படும் பதிவர்களுக்காக அரசாங்க உதவியுடன் ஆங்காங்கே கம்யூட்டர் மையம் அமைத்து அங்கிருந்து உங்கள் பதிவுகள் வெளியிட ஏற்பாடு செய்யபடும். பதிவாளர்கள் போன் செய்து செய்திகளை சொன்னால் மட்டும் போதும் வரத் தேவையில்லை.



இதையெல்லாம் தந்துவிட்டு வரிகள் அதிகம் வசூலிக்க மாட்டோம்.வரிகள் மிகவும் குறைந்த அளவு மட்டும்தான் அப்படியென்றால் இதற்கெல்லாம் வருமானம் எப்படி வருமேன்று நினைக்கிறீர்களா? நாங்கள் பக்கத்து மாநிலங்கள் வசிக்கும் மக்களிடம் அதிக வரிவிதித்து அதில் இருந்து கிடைக்கும் வருமானத்தை தமிழ்கத்திற்கு கிடைக்க காங்கிரஸ் அரசிடம் ஒப்பந்தம் போட்டுள்ளோம். காங்கிரஸ் ஆட்சி மாறினாலும் தொடர்ந்து அந்த வருமானம் கிடைக்க சட்டம் செய்து அதில் நமது தலையாட்டி பொம்மைகளான ஜனாதிபதியிடமும், பிரதமரிடம் கையெழுத்து வாங்கி சட்டத்தை உறுதி செய்வோம்

குறிப்பு: நாங்கள் அடிக்கடி உங்களை வந்து தொந்தரவு செய்யமாட்டோம் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் வாக்கு கேட்க உங்கள் வீடு தேடி வருவோம்!




கடைசி...கடைசி....அறிவிப்பு :இறுதியாக எதிர்கட்சி வேட்பாளர்கள் தேர்தலில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்தால் அவருக்கு 10 கோடியும் + அமெரிக்காவில் ஒரு வீடும் இலவசமாக தரப்படும்

 இந்த வாக்குறுதிகள் போதுமா? இன்னம் கொஞ்சம் வேணுமா?


இதுதான் திமுக கட்சியின் கடைசி நேர வாக்குறுதிகள். இப்ப சொல்லுங்க திமுக ஜெய்க்க வாய்ப்பு உள்ளதா இல்லையா என்று









 


6 comments:

  1. 13th point ...... சூப்பரோ சூப்பர்!

    ReplyDelete
  2. பெண்னை பெற்றவர்கள் திருமணத்துக்காக கவலை பட தேவை இல்லை அரசே வரதட்சனையாக 50 பவுன் நகை, பல்சர் வண்டி திருமண மண்டப வாடகை, சீர்வரிசை சாமன், திருமண ஆடைகள், திருமண விருந்தை சரபவண் அண்ணாச்சி தலமையில் ஏற்பாடு செய்து தரப்படும். தேனிலவு செல்ல 1 எலிகாப்டர் + எலிகாப்டர் டைவர் ப்ரிஇ

    ReplyDelete
  3. 14. இந்த பதிவை எழுதியவர் கைது செய்யப்பட்டு தூக்கில் இட படுவார்

    ReplyDelete
  4. ப்ளாக் வைத்து பதிவுகள் போடும் தமிழ் மக்களுக்குஇலவச கம்பியூட்டர் மற்றும் இண்டர்நெட் வசதி செய்து தரப்படும். பதிவுகளை டைப் பண்ண மற்றும் பின்னுட்டம் போட சோம்பேறி படும் பதிவர்களுக்காக அரசாங்க உதவியுடன் ஆங்காங்கே கம்யூட்டர் மையம் அமைத்து அங்கிருந்து உங்கள் பதிவுகள் வெளியிட ஏற்பாடு செய்யபடும். பதிவாளர்கள் போன் செய்து செய்திகளை சொன்னால் மட்டும் போதும் வரத் தேவையில்லை.

    என் நெஞ்சில பால வார்த்திங்க சார் !

    மேல சொன்ன வாக்குறுதிகளை செய்யிறேனு எழுதிகொடுத்தால் நான் தமிழகம் வந்து ஓட்டுப்போடுகிறேன் சார்.


    உண்மைவிரும்பி,
    மும்பை

    ReplyDelete
  5. யப்பா...பின்னீட்டிங்க ...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.