Sunday, May 22, 2011

"இது'க்கும் வந்துவிட்டது இன்டர்நெட்டில் வசதி!

'இது என்றால் அது எது என்று  பார்க்க வந்துட்டீங்களா...தொடர்ந்து படியுங்க.

காதலர்களாகட்டும், கணவன் மனைவியாகட்டும், கள்ள காதலர்களாகட்டும் அல்லது ப்ளாக்கர் நண்பர்களாகட்டும் தங்கள் முத்த உணர்வுகளை ஒருவருக்கு ஒருவர் இன்டர்நெட் மூலம் பரிமாற்றம் செய்து கொள்ளும் வகையில், ஜப்பானில் புதிய நவீன கருவி ஒன்றை ஆராய்ச்சி செய்து உருவாக்கி உள்ளனர்.

மனித உறவுகளில், பல விதமான உறவுமுறைகள் உள்ளன இதில் பல தரப்பினரும், தங்கள் அன்பை பரிமாறிக் கொள்ள, முத்தம் கொடுத்துக் தருவது பழக்கத்தில் உள்ளது. இந்நிலையில், நெருங்கி பழகி, பின் பிரிந்து, நீண்ட தூரத்திற்கு பிரிந்து சென்று வசிக்கும் போது, முத்தப் பரிமாற்றத்திற்கு வாய்ப்பில்லாமல் போகிறது.

இவ்வாறு பிரிந்து துன்பப் படும் கணவன் - மனைவி, காதலன் - காதலிகளுக்கு முத்த மிடும் உணர்வை தரும் கருவி ஒன்று, ஜப்பானில் உள்ள எலக்ட்ரோ கம்யூனிகேஷன் பல்கலைக் கழகத்தை சேர்ந்த காஜி மோடோ ஆய்வு கூடத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கருவியின் மூலம் கருவியின் ஒரு பகுதியில் ஒருவர், தன் நாக்கை வைத்து உரசும் போது, அதில் உள்ள சாப்ட்வேர்  நாக்கின் இயக்கம், விடும் மூச்சு, சுவை, ஈரப்பதம் ஆகியவற்றை பதிவு செய்து, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள இணையதளம் மூலம் மற்றொருவருக்கு அனுப்புகிறது. இதன் மூலம்  மறுமுனையில் உள்ளவர், தன் துணை அனுப்பிய முத்த உணர்வுகளை பெறுகிறார்.

இயந்திர கதியில் இயங்கும் இன்றைய வாழ்க்கை முறையில், நெருங்கிப் பழகியவர்கள் ஒரே இடத்தில் இருப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகி விட்டது. இந்நிலையில், ஜப்பான் நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த முத்தக் கருவிக்கு, எதிர்காலத்தில் ஏகப்பட்ட வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிலும் தமிழ் நாட்டிலிருந்தும் கேரளாவிலிருந்தும் தன் துணையை விட்டு பிரிந்து அரபு நாடுகளில்  வசிப்பவர்களுக்கு இது மிகவும் உபயோகப்படும் என்று Madurai Tamil Guy- கருதுகிறார். ( மைண்ட் வாய்ஸ் : ஆமாம் இவர் பெரிய யோகி வருங்காலத்தை துள்ளியமாக கணிக்க கூடியவர். போடா புண்ணாக்கு..உனக்கு பதிவு போட வேற விஷயமே இல்லையா..அடுத்த பதிவு ஓழுங்கா போடலைன்னா உன்னை திகார் சிறையில் செல் நம்பர் 7 ல் போட்டுவாங்க)

இந்த நவின கருவியை பார்க்க விரும்புவர்கள் கிழேயுள்ள விடியோவை பார்க்கவும் (Internet Kissing Machine Invented in Japan  Watch Video Above for Extended Coverage )


இது ஒரு ஆரம்ப நிலையில் உள்ள கருவியாகும்.
A Japanese lab has created a device that may let you "kiss" someone over the internet. The kissing machine would effectively transmit the feeling of a kiss. |The prototype pucker machine looks like a large version of a kid's juice box, with a straw-like apparatus sticking out of the side. If you take one device in your mouth and turn it with your tongue, the other device turns in the same way. The tongue-twisting effect is achieved by motor rotations controlled by the user via computer. For now though, it may just be best to stick to the more simple "x"'s and "o"'s at the end of an email.


  
முத்தங்கள் பற்றி....
சிறுவயதில் நான் படித்த ஓரு சிறு கவிதை
முத்தம் தர தாமதம் செய்யாதிர்கள்
ஏனென்றால்
நீங்கள் பெற வேண்டிய ஏராளமான
முத்தங்ககளை வீணாக இழக்க நேரிடும்

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.