Friday, October 21, 2011


பார்த்து பார்த்து சாப்பிடுபவர்களா நீங்கள்?அப்ப நீங்க இதை கண்டிப்பா படிங்க

எந்தெந்த உணவுகள் சாப்பிட்டால் உடல் நலத்திற்கு நல்லது & கெட்டது என்று மருத்துவ உலகில் எப்போதும்  மாறுபட்ட கருத்துக்கள் பல காலமாக இருந்து வந்தது. அதற்கு முடிவு கட்டும் விதமாக அண்மையில் ஒரு தமிழனின் தலைமையில் நடந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்தன. அதை பற்றிய செய்திதான் இந்த பதிவு.



1. அமெரிக்கன், பிரிட்டிஷ், ஆஸ்திரேலியாகாரனை விட ஜப்பான் காரன் மிக குறைந்த அளவு கொழுப்பு சத்துள்ள உணவை சாப்பிட்டு வந்ததால் அவர்களுக்கு மிக குறைந்த அளவுதான் மாரடைப்பு வந்தது.



2. அமெரிக்கன், பிரிட்டிஷ், ஆஸ்திரேலியாகாரனை விட மெக்ஸிகன்  மிக அதிக அளவு கொழுப்பு சத்துள்ள உணவை சாப்பிட்டு வந்தபோதிலும் அவர்களுக்கு மிக குறைந்த அளவுதான் மாரடைப்பு வந்தது.



3. அமெரிக்கன், பிரிட்டிஷ், ஆஸ்திரேலியாகாரனை விட ஜப்பான் காரன் மிக குறைந்த அளவு ஒயினை மட்டும் அருந்தி வந்ததால் அவர்களுக்கு மிக குறைந்த அளவுதான் மாரடைப்பு வந்தது.



4. அமெரிக்கன், பிரிட்டிஷ், ஆஸ்திரேலியாகாரனை விட இத்தாலியன் மிகமிக அதிக அளவு  ஒயின் அருந்தி வந்தபோதிலும் அவர்களுக்கு மிக குறைந்த அளவுதான் மாரடைப்பு வந்தது.



5. அமெரிக்கன், பிரிட்டிஷ், ஆஸ்திரேலியாகாரனை விட ஜெர்மன் காரன் மிக அதிக அளவு பீர் மற்றும் கொழுப்பு சத்துள்ள உணவை சாப்பிட்டு வந்த போதிலும் அவர்களுக்கு மிக குறைந்த அளவுதான் மாரடைப்பு வந்தது.



இதிலிருந்து நம் தமிழ் ஆராய்ச்சியாளர் வந்த இறுதி முடிவு . நீங்க விரும்பியதை எல்லாம், எதை வேண்டுமானாலும் எந்த அளவு வேண்டுமானலும் சாப்பிடலாம். எது மனிதனை அதிக அளவு கொல்கிறது என்றால் இங்கிலிஷில் பேசுவது மட்டுமே. அதனால் இங்கிலீஷில் பேசுவதை குறைத்து கொள்ளூங்கள்.



அந்த ஆராய்சியாளர் யார் என்ற கேட்கிறிர்களா ?அவர் வேறு யாருமில்லை நம் பதிவர் Madurai Tamil Guy-தான்



எப்படி என் ஆராய்ச்சி??????? என்ன டபூள் டாக்டர் பட்டம் தரப்போறீங்களா? ரொம்ப நன்றிங்க அப்ப நான் தான் அடுத்த தமிழக முதல்வர்...


2 comments:

  1. ஆஹா முதல்வர் ஆசை உங்களையும் விட்டு வைக்கலையா...!!!

    ReplyDelete
  2. நாம ஆங்கிலம் பேசினா நாம எப்படி சாவோம்? எதிர்ல இருக்கிறவன் தானே சாவான்? எப்படியோ சாவராங்கலான்னு கேக்கிறீங்களா? நம்ம பய புள்ளைங்க சுய நல வாதிங்க, இது தெரிஞ்சுகிட்டு இனிமேல் ஆங்கிலத்திலேயே பெசிப்புடுவானுங்க... ஆமா நீங்க முதல்வர் அம்மாவை பற்றி சொல்லல இல்ல

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.