Saturday, December 31, 2011



புத்தாண்டு தினத்தில் என்ன மாதிரியான தீர்மானம் (New Year's Resolutions) எடுக்க வேண்டும்

வணக்கம் அவர்கள்...உண்மைகள் வலைத்தள வாசகர்களே & நண்பர்களே !இந்த  பதிவின் வழியே உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இந்த வலைப்பக்கத்திற்க்கு அன்பும் ஆதரவும் அளித்து உற்சாகப்படுத்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி. உங்கள் அனைவருக்கும் எனது இதயம்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

பொதுவாக ஓவ்வொரு ஆண்டின் ஆரம்ப நாளில் சில தீர்மானங்கள்(New Year's Resolutions) எடுக்கின்றோம். ஆனால் நாட்கள்  செல்ல செல்ல நாம் எடுத்த தீர்மானங்கள் மாதம் முடிவுதற்குள்  காற்றோடு காற்றாய் கரைந்துவிடுகிறது. இந்த பதிவில் உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை வழங்குவதோடு இந்த புத்தாண்டில் எடுக்கிற தீர்மானங்களில் நாம் கடைசி வரை கடைபிடிக்க கூடிய தீர்மானத்தை தேர்ந்தெடுக்கும்  சில வழிகளை பார்ப்போம்.

1. இந்த வருடம் கண்டிப்பாக 15 KG எடை அதிகரிக்க முயற்சி செய்வோம்.
2. உடற்பயிற்சி செய்வதற்கான நாட்களை குறைத்து கொள்வோம்.
3. குறைந்த அளவு புத்தகம் படிப்பதால் சிந்தனை வளரும் என்பதை புரிந்து அதை கடை பிடிப்போம்
4 .பக்கத்து வீட்டுகாரிக்கு போட்டியாக நான் பொருட்களை வாங்க மாட்டேன். அதற்கு பதிலாக நான் வாங்குவதை பார்த்து அவள்     பொறாமை படும்படி நடந்து கொள்வேன்.
5. இந்த வருடம் டிவியில் வரும் சிரியல் மட்டுமல்லாமல் அதில் வரும் விளம்பரங்கள் அனைத்தையும் கண்டிப்பாக பார்ப்போம்.
6. அடுத்த ரூமில் வேலை செய்து கொண்டிருக்கும் மனைவிக்கு அடிக்கடி இமெயில் அனுப்புவதை நிறுத்துவோம்
7. நாம் எதற்கு 10க்கும் மேற்பட்ட இமெயில் ஐடி வைத்திருக்கிறோம் என்பதற்கான காரணத்தை இந்த வருட இறுதிக்குள் கண்டுபிடிக்க முயற்சி செய்வோம்
8. வேலைக்கு செல்லும் போது வீட்டில் இருந்து மதிய உணவு எடுத்து செல்ல மாட்டோம் என்பதை கடைப் பிடிப்போம்
9 .மனைவி ஆசையாக மதிய உணவு கட்டி கொடுத்தால் அதை தெரு முனையில் இருக்கும் நாய்க்கு போட்டு புண்ணியம் தேடி கொள்வோம்
10 .தண்ணி அடித்தால் கண்டிப்பாக ஐந்து ரவுண்டுக்கு மேலாக அடிக்கமாட்டோம் என்று சபதத்தை 6வது ரவுண்டுக்கு அப்புறம் ஏற்போம்
11. பதிவுகள் படிப்பதை குறைத்து கொண்டு பின்னூட்டம் அதிகம் இடுவோம்.
12. முதல் வடை, சூப்பர் மச்சி, கலக்கிட்டிங்க, சூப்பர் என்ற பின்னுட்டங்களை காப்பி & பேஸ்ட் செய்ய மாட்டோம் அதற்கு பதிலாக புதிய வரிகளை சேமித்து வைத்து அதை காப்பி & பேஸ்ட் பண்ணுவோம்

என்ன மக்காஸ் இந்த மாதிரி நல்ல  தீர்மானங்களை நாம் எடுத்தால் ஆண்டு முழுவதும் கடைபிடிக்கலாம்.  அதைவிட்டு விட்டு சில கெட்ட பசங்க  சிகரெட் குடிப்பதை நிறுத்துவோம், மது அருந்துவதை நிறுத்துவோம், வேலையில் இருந்து வீட்டுக்கு சிக்கிரம் செல்வோம், தினசரி உடற்பயிற்சி செய்வோம், அதிகம் படிப்போம், டிவி பார்ப்பதை குறைத்து கொள்வோம், மனைவியிடம் அன்பாக நடந்துகொள்வோம், மற்றவர்களுக்கு உதவுவோம் என்று பல கெட்ட பழக்கவழக்கங்களை கடைபிடிப்போம் என்று பல அற்ப தீர்மானங்களை  சொல்லுவார்கள் அதையெல்லாம் நம்மால் ஆண்டு முழுவதும் கடைபிடிக்க முடியாது.

அதனால் நீங்கள் உங்களால் எதை செய்ய முடியுமோ & வேண்டுமோ  அதை தீர்மானமாக எடுத்து கடை பிடிக்க முயற்சி செய்து வெற்றி பெறுங்கள். மேலே நான் எழுதியவை எல்லாம் நகைச்சுவைக்காக எழுதியது அது படித்து நகைக்கவே அதனால் அதை சிரியஸாக எடுத்து பதில் அளிக்க வேண்டாம்.

உலகின் பல நாடுகளில் வசிக்கும் மக்கள் புதிய ஆண்டில்(2012) அடி வைத்து நடக்க தொடங்கி இருக்கிறீர்கள் ஆனால் நான் இன்னும் பழைய ஆண்டில்( 2011) ல் தான் இருக்கிறேன்.(புதிய ஆண்டில் அடி எடுத்து வைக்க இன்னும்  நாலரை மணி நேரம் இருக்கிறது) உங்களுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து இதுதான் 2011 ல் இறுதியில் இட்ட பதிவு என்று கூறி விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்



8 comments:

  1. மாத்தி யோசித்து இடப்பட்ட நகைச்சுவைப் பதிவு
    ரசிக்கும் படியாக ருசியாகவும் இருந்தது
    அடிக் கருத்தைப் புரிந்து கொண்டதால்
    பயனுள்ளதாகவும் உள்ளது
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்
    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அருமையான நகைச்சுவைப் பதிவு. புது வருடத்தில் நான் வாசித்த முதல் பதிவும் கூட. :)

    பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  3. புதுவருட ஆரம்பத்தில் நான் முதன் முதலாக படித்தபதிவு இதுதான் நல்லா சிரிக்கவச்சதுக்கு நன்றி. இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள் உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும்.

    ReplyDelete
  4. MTG அண்ணே ,
    இன்னும் உங்களுக்கு புத்தாண்டு பிறக்க
    4.5 மணி நேரம் உள்ள நிலையிலேயே '...........'
    .[அவரவர் வசிதிக்கு ஏற்ப fill -up செய்து கொள்ளவும்]
    ஆ...ரம்பமாகி விட்டதே ......
    அந்த அக்ஷயபாத்திரத்தில் இருந்து நிறைய
    அள்ளிக் கொண்டாயிற்று இன்றைக்கு friutsalad செய்ய.
    நன்றியுடன் வாழ்த்துக்களும். பல உண்மைகள் வெளி வந்ததில்
    சிரித்து மகிழ்ந்தோம் . .

    ReplyDelete
  5. ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழரே

    ReplyDelete
  6. //நாம் எதற்கு 10க்கும் மேற்பட்ட இமெயில் ஐடி வைத்திருக்கிறோம் என்பதற்கான காரணத்தை இந்த வருட இறுதிக்குள் கண்டுபிடிக்க முயற்சி செய்வோம்// ரொம்ப நாளா நானும் இதை கண்டுப்பிடிக்கதான் முயற்சி பண்ணிகிட்டு இருக்கேன், நண்பரே....முடியலை...

    ReplyDelete
  7. இங்கு வந்து கருத்து சொன்ன அனைவருக்கும் மற்றும் வாழ்த்து சொன்ன அனைவருக்கும் எனது நன்றிகள் & வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. மதிப்பிற்குரிய அண்ணா,
    ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

    By : Selvam

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.