Thursday, March 8, 2012



மேலைநாட்டு கலாச்சாரத்தை கேலி செய்யும் தமிழகமே திரும்பி பார்



மேலைநாட்டு கலாச்சாரத்தை கேலி செய்யும் தமிழகமே திரும்பி பார் மேலை நாட்டை அல்ல உனது தமிழகத்தை.கலாச்சாரம் கலாச்சரம் என்று எதற்கு எடுத்தாலும் கூவும்  நீ செய்வது என்ன என்று உனக்கு புரியவில்லையா?

மேலைநாட்டில் பார்களில் குடித்துவிட்டு ஆடுபவர்கள் சில பேர் அதை பார்ப்பவர்கள் சில பேர். ஆனால் அனைவரும்  வயது 21 க்கு மேல்தான். ஆனால் தமிழகத்தில் பாருக்கு பதிலாக கோயில் திருவிழாக்களில் ஆடும் ஆட்டத்தை பார். இதுதான் நம் தமிழக கலாச்சாரமா?


கலாச்சார காவலர்கள் காதலர் தினதன்று மட்டும்தானா வந்து எதிர்ப்பு தெரிவிப்பார்கள் இந்த மாதிரி நடக்கும் நிகழ்ச்சியை தடை செய்ய முயற்சி எடுக்க மாட்டார்களா என்ன? ஏன் இந்த தயக்கம்.இந்தக் கலாசாரக் காவலர்கள்  இந்த கோயில் கோயில் திருவிழாக்களில் இந்த மனதை கெடுக்கும் டாண்ஸ்கள் , மிட்நைட் மசாலாக்கள், மற்றும் தொப்புள் குலுக்கல் ஆட்டங்ககளையும் நமது இல்லத்தின் வரவேற்பு  அறைக்கே வந்து ஆபாசத்தை அவிழ்த்துக் காட்டும் பத்திரிகைகள், தொலைக்காட்சி போன்ற மிடியாக்களையும் எதிர்த்து எதுவும் பேசாமல் வாய்மூடி இருப்பதும் வெட்கக் கேடு.


கலாசாரம் ஏன் செலக்டிவ் அம்னீஷியாவாக அவ்வப்போது இவர்களுக்குத் தோன்றுகிறது என்று தெரியவில்லை. சின்ன வீடா வரட்டுமா பெரிய வீடா வரட்டுமா? எப்படி எப்படி சமைஞ்சது எப்படி? ஓடிப்போயி கல்யாணம் கட்டிக்கலாமா? என்று தலைவிரித்தாலும் ஆபாசத்தினை ஏன் இவர்கள் கண்டுகொள்ளவில்லை. இவையெல்லாம்தான்  தமிழ்க்கலாச்சாராமா  கொஞ்சம் யோசித்துதான் பாருங்களேன்.

கிழேயுள்ள வீடியோ பாருங்கள் உங்கள் நியாமான கருத்தை சொல்லுங்கள்.

மாரியம்மன் கோவில் விழா டான்ஸ்


ஆடி பெருக்கு விழா டான்ஸ்


பார்த்தீர்களா இந்த டான்ஸ் ஆடுபவர்களை இவர்களுக்கு அதிகம் போனால் 18 வயதுக்கும் மேல் இருக்காது. இவர்கள் வயிற்று பிழைப்புக்கு வேண்டிய பணத்திற்காக ஆடுகிறார்கள். கோயில் திருவிழாவுக்கு பணம் வசூலித்தவர்கள் தாங்கள் வசூலித்த பணத்தை இவர்களுக்கு கொடுத்து இவர்களை டான்ஸ் ஆடாமல் வேறு வழியில் இவர்களை திருப்பி இருந்தால் அவர்களை பாராட்டலாம். ஆனால்  சாமி பேரை சொல்லி பணம் வசூலித்து அதை தம் கேடுகெட்ட ஆசைகளுக்காக அதை செலவழிக்கின்றனர். இதை தட்டி கேட்டக ஆள் இல்லை. ஆனால் மேலை நாட்டை நக்கல் செய்ய மட்டும் இவர்களால் முடிகிறது.

மேலை நாடுகளில் சர்ச்சுகளில் கோயில்களில் அல்லது மசூதிகளில் வசூலிக்கும் பணம் எவ்வளவு நல்ல விதமாக செலவழிக்கபடுகிறது என்பதை இவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

அடுத்தாக நம இந்திய கல்யாண நிகழ்ச்சி எவ்வளவு பாரம்பரியானது & மிக அர்த்தமுள்ளதாகும். அதை பாராட்டாத உலகத்தினரே இல்லை எனலாம். அந்த நல்ல கலாச்சாரத்தை கெடுத்து ஆடும் ஒரு தமிழ் குடும்பத்தை பார்த்து நான் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை.
அதையும் உங்கள் பார்வைக்கு இங்கே வைக்கிறேன்.
  http://www.videofy.me/v/408198

13 comments:

  1. அதிக பட்ச ஆபாசம் அது நடுத்தெருவில்
    தங்கள் கோபம் நியாயமானதே
    கலாச்சாரக் காவலர்களுக்கு சரியான சவால்
    அவர்கள் பதில் சொல்கிறார்களா பார்ப்போம்

    ReplyDelete
  2. இங்கே வைக்கிறேன் என்பதை சொடுக்கினால்

    not found என்று வருகிறது

    ReplyDelete
  3. your article shows reality.temples are fully commercialsed now.

    ReplyDelete
  4. அய்யா கலாச்சார மேட்டர பதிவுல போட்டுபுட்டு..பிட்டு ரேஞ்சுக்கு அந்த வீடியோக்கள் தேவையா...எதுக்கும் கேட்டு வச்சேன்..தவறாக இருந்தால் சகித்துகொள்ளவும்!

    ReplyDelete
  5. வ்யிற்றுக்காக ஆடும் ஒரு கூட்டம் அதை சதைக்காக பார்க்கும் கூட்டம்
    இதை எங்கு போய் சொல்வது.

    அழகான பதிவு வாழ்த்துகள்

    ReplyDelete
  6. வ்யிற்றுக்காக ஆடும் ஒரு கூட்டம் அதை சதைக்காக பார்க்கும் கூட்டம்
    இதை எங்கு போய் சொல்வது.

    அழகான பதிவு வாழ்த்துகள்

    ReplyDelete
  7. தமிழகத்தில் கலாசாரம் பற்றி பேசினால் பைத்தியக்கார பட்டம் தான் கிடைக்கும்.
    தெருக்கூத்து ஆடுபவர்கள் வயித்துக்கு ஆடுபவர்கள்.
    தயவு செய்து தமிழ் தொல்லைக்காட்சிகளைப்பாருங்கள்.
    அதில் வாராத ஆபாசமா?
    "கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா/
    இல்ல ஓடிப்போய் கல்யாணம் கட்டிக்கலாமா
    பிள்ளைகுட்டி..................."
    " இது மாதிரி எத்தனை தத்துவ பாடல்களுக்கு பள்ளிக்கூட பிள்ளைகள்
    ஆடும் எத்தனை நிகழ்ச்சிகளை பள்ளிகளிலும்
    தொல்லை காட்சி நிகழ்ச்சிகளிலும் ஆடுகின்றனர்.
    அதையும் வெட்கமில்லாமல் பெற்றோர் பார்த்து
    ரசிக்கின்றனர்.......
    ஒரு தாசியின் ஓலத்தை காட்டும் பாடல்
    " ஒரு ஜான் வயித்துக்காக எல்லாத்தையும் விக்கிறேன்"
    இந்த பாடலுக்கு ஒரு குழந்தை ஆடுவதை தொல்லை காட்சியில்
    கண்டபோது வயிறே எரிந்தது.இதையும் பெற்றோர் ரசித்ததையும்
    தமிழினத்துக்காகவே வாழும் தலைவரது குடும்ப தொல்லை காட்சியில்
    தான் பார்த்தேன்.
    தமிழினத்துக்காகவே வாழும் இயக்கத்தினரது வருகைக்குப்பின்
    தமிழ் திரைப்படம் தமிழக மக்களது கலாசார வளர்ச்சி
    எப்படியெல்லாம் போனது என்பது உலகத்துக்கே தெரியும்.
    அது கிடக்கட்டும்.சாம்பிளே இப்படி என்றால்
    நேரில் எப்படி இருந்திருக்கும்.
    வாழ்க தமிழகம்.
    வளர்க தமிழ்க்கலாசாரம்.

    ReplyDelete
  8. இந்த கன்றாவிலாம் பார்க்கக்கூடாதுன்னுதான் நான் திருவிழா அன்னிக்கு கொயிலுக்கே போறதில்லை.

    ReplyDelete
  9. இந்த கண்ராவிங்கள்ளாம் அங்கிருந்துதான் வந்து இறக்குமதியான கலாச்சாரம்தான்...

    ReplyDelete
  10. அப்படியே புட்டுப் புட்டு(பிட்டுப் பிட்டு)வைக்கப் பட்டுள்ளது பிரச்சனை. மிக மிக மோசமாகப் போகிறது நாடு(உலகம்)திரு திரு என்று நாம் முழித்தபடி உள்ளோம் எதுவுமே புரியவில்லை....வாழ்த்துகள் சகோதரா.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  11. தற்பொழுது அதிகரித்து வரும் ஒரு மிக பெரிய பிரச்சனையை ரொம்பவும் சிறப்பாக தந்துள்ளீர்கள்.மிக்க நன்றி சகோ.

    Falling Down (1993) - ஹாலிவுட் "இந்தியன்" தாத்தா (திரைப்பார்வை)

    ReplyDelete
  12. ஒரே ஆறுதல்! இவர்கள் தமிழ் பட நாயகிகளை விட ஆபாசமாக உடை அணியவில்லை. நமது தலைவர் செய்யாததைய இவர்கள் செய்கிறார்கள். நமது "தமிளர்களும்" இதைத்தான் விரும்மபுகிரர்கள்!

    இந்த தடை மாரியம்மன் மற்றும் இதற கிராமத்து சாமி கோவில்களுக்கு மட்டும் தான். சிவன் கோவில்களுக்கு (ரிஷப வாகன சேவை; எம் பெருமான் நடனம்) இந்த ரெகார்ட் டான்ஸ் தடை கிடையாது!

    வாங்க, நான் பிறந்து அதுவும் வளர்ந்த சென்னைக்கு. அதுவும், சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலுக்கு இரண்டு பெருமைகள்: ஒன்று மிக பழமையான கோவில்; இரண்டு ரெகார்ட் டான்சில் அந்த கோவில் ரெக்கார்டை அடிக்க உன்னொரு கோவில் தான் வரணும்.

    பத்துப்பாட்டு எட்டுத்தொகை மாதிரி ஒரு பது சினிமாப் பாட்டு எட்டு விதமான நடனங்கள் உண் டு. ஆனால், அசைவுகள் ஆட்டங்கள் சினிமா அளவிற்கு ஆபாசமாக இருக்காது!

    இதைப் பற்றி பல பதிவுகள் நான் எழுதிருக்கிறேன் எனது வலையில்...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.