Friday, April 27, 2012



சிந்திக்க  வைக்கும் கேள்வி பதில்கள்

குடும்பம் :

கணவரை (முட்டாளை) சமாளிக்க சுருக்கமானமான வழி ஒன்று சொல்லவும்?
மெளனமாக இருப்பதுதான!

எத்தகையவர்களை நாம் நண்பர்களாக ஆக்க வேண்டும்?
நீ இறக்கும்போது உனக்காக அழக்கூடியவர்களை  உன் உயிர் இருக்கும் போதே நண்பர்களாக தேடி வைத்துக்கொள்வேண்டும்!

குடும்பத்தில் வரும் துன்பங்களுக்கு காரணம் என்ன?
மறக்க வேண்டியவைகளை மறக்காமல் நினைத்திருப்பதும் ,மறக்க வேண்டாதவகைகளை மறந்துவிடுவதும்தான் குடும்பத்தில் ஏற்படும் துன்பத்திற்கு காரணம்

எப்ப பார்த்தாலும் யாருக்காவது அட்வைஸ் பண்ணிக் கொண்டே இருக்கும் என் நண்பரின் செயலை எப்படி நிறுத்துவது?
அவனிடம் சொல்லுங்கள் மணிக்கணக்கில் அட்வைஸ் செய்வதைவிட ஒரு கணப்பொழுதாயினும் யாருக்காவது உதவி செய்வது மேல் என்று சொல்லி பாருங்கள்!



அரசியல் :

வைகோவிடம் இருந்து மற்றவர்கள் கற்று கொள்ள வேண்டியது என்ன?
ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது சாதனையல்ல விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் ! அதைத்தான் நாம் வைகோ அவர்களிடம் இருந்து நாம் கற்று கொள்ள வேண்டும்.

யார் உயர்ந்த மனிதர் கலைஞரா?ஜெயலலிதாவா?மன்மோகன் சிங்கா? அல்லது அப்துல்கலாமா?
யாருடைய குறைகளை எண்ணிவிட முடியுமோ அவர்தான் உண்மையில் உயர்ந்த மனிதர்!

அரசியல்வாதிகளுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
பதவி  இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பதவி இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது

கலைஞரிடம் இருந்தது ஆனால் இப்போது இல்லாமல் இருப்பது எது & ஏன்?
கலைஞரிடம் முன்பு ஒரு போர்க்குணம் இருந்தது ஆனால் அது இப்போது இல்லாமல் போய்விட்டது  அதற்கு காரணம் இன்று அவர் குடும்பம் என்ற சூழலில் சிக்கி நீர்த்துப் போகவிட்டதுதான்

புதுக்கோட்டை தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற  பிறகு  மக்களுக்கு ஜெயலலிதா  என்ன பரிசு வழங்குவார்?

இன்னும் அவர் ஏற்றாமல் இருப்பது வீட்டு வரி மட்டும் அதனால் அதை அவர் இரு மடங்காக  உயர்த்தலாம் என்று எதிர்பார்க்கலாம்.


சாதாரண மனிதர்களுக்கு இருக்கும் மான ரோஷம் எதுவுமே அரசியல்வாதிகளுக்கு இருக்காதா?
அரசியல்வாதியாவதற்கு முதல் தகுதியே மான ரோஷம் இல்லாமல் இருப்பதுதான்.மான ரோஷம் இருப்பவர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள். உதாரணமாக கருணாநிதி , ஜெயலலிதா, விஜயகாந்த், கம்யூனிஸ்ட்கள் , ராமதாஸ்திருமாவளவன், காங்கிரஸார் மற்றும் அநேக அரசியல் வாதிகளை கூறலாம் .இதில் ஒருதருக்கொருத்தர் சளைச்சவர் அல்ல என்பது மட்டுமல்ல அனைவரும் இதில் மட்டும்  ஒரே குணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் !

என்றென்றும் அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய "மதுரைத்தமிழன்"

8 comments:

  1. அணைத்து கேள்விகளும் அதன் பதில்களும் அருமை. வைக்கோ ஒரு சிறந்த மனிதர்.

    ReplyDelete
  2. சிந்திக்க ( உங்களை ) வைக்கும் கேள்வி பதில்கள்

    >>>
    இவரு ரொம்ப சிந்திச்சுட்டாராம் நாங்க கண்டுபிடிச்சுட்டோம்.

    ReplyDelete
  3. பதில்கள் சிறப்பு

    ReplyDelete
  4. கேள்வியும் அதற்கு தகுந்த பதில்களும் சிறப்பு .

    ReplyDelete
  5. அனைத்தும் அருமை! ஏற்றுக் கொள்ளத் தக்கன! சா இராமாநுசம்

    ReplyDelete
  6. //ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது சாதனையல்ல விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் ! அதைத்தான் நாம் நாம் கற்று கொள்ள வேண்டும்.//

    சரியாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    [இன்று என் 300 ஆவது பதிவு வெளியிடப்பட்டுள்ளது.]
    http://gopu1949.blogspot.in/2012/04/17.html
    Just for your information, please]

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.