Sunday, June 3, 2012


ஆயுள் கைதி வரைந்ததை கலைஞருக்கு  பிறந்த நாள் பரிசாக தரும் மதுரைதமிழன்

ஜூன் 3 ,2012 இன்று . கலைஞர் அவர்களின் 89ம் ஆண்டு பிறந்த தினம். அவரை வாழ்த்துபவர்கள் ஒரு பக்கமும் வசை பாடுபவர்கள் ஒரு பக்கமும் உள்ளனர். பல பதிவுகளில் கலைஞரை நான் கிண்டல் பண்ணி இருந்தாலும் எனது சிறுவயதில் எனது மனதில் பதிந்த தலைவரில் இவர் ஒருவர் என்பதாலும் வாழ்த்தும் நேரத்தில் வாழ்த்துவதுதான் மனித இயல்பு என்பதால்  அவரை நான் வாழ்த்துகிறேன்.

என்னை போன்ற பலருக்கு தமிழ்மொழியை நேசிக்க கற்று கொடுத்தது கலைஞர்தான். படிக்காதவர்தான் கலைஞர் ஆனால் அவர் எழுதியவைகளை வைத்து ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்கள் அநேகம் அநேகம். அவரிடம் பிடித்தது மொழி மட்டுமல்ல அவரின் சுறுசுறுப்பும்தான் இந்த வயதிலும் அவரின் சுறுசுறுப்பு என்னை வியக்க வைக்கிறது. தமிழகத்தின் தலைவராக பல்லாண்டு வலம் வந்த சாணக்கியர் இவர். அது மட்டுமல்லாமல் இப்போது உள்ள தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிதலைவர்களுக்கும் தலைவராக இருந்த ஒரு தலைவர் இவர் மட்டும்தான் இருக்க முடியும்.


யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல இப்போது அவர் வாழ்விலும் சறுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தின் தலைவராக இருந்தவர் இப்போது குடும்ப சூழ்நிலையால் குடும்பத்திற்கு மட்டும் தலைவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலமை மாறி அவரின் இறுதி காலத்தில் தமிழகமே பாராட்டும் செயலை செய்து முடிக்க அவரது பிறந்த நாளில் வாழ்த்துகிறேன்.


என்னடா இவன் கலைஞரை வாழ்த்துகிறேன் என்று நினைக்கிறிர்களா? அது ஒன்னும் இல்லைங்க. நமக்கு எந்த உபயோகமும் இல்லாத நடிகர் நடிகைகளுக்கும் நல்ல சாமியாராக வேஷம் போட்டு கொண்டு இருப்பவர்களுக்கும் வாழ்த்துக்களை சொல்லி வருகிறோம். அப்படிபட்ட நிலையில் தமிழகத்தின் தலைவராக இருந்தவருக்கு வாழ்த்து சொல்வதில் தவறு ஏதும் இல்லை என்பதால் நான் இந்த வலைதளத்தின் மூலம் வாழ்த்து தெரிவிக்கின்றேன்.


அதுமட்டுமல்லாமல் அவருக்கு அவரை நேசிக்கும் ஒரு ஆயுள் தண்டனை கைதி வரைந்த ஒவியத்தை அவருக்கு அறிமுகப்படுத்துவதையே அவர் பிறந்த நாள் பரிசாக தருகிறேன்


இந்த ஆயுள் கைதி என்ன தவறு செய்துவிட்டு சிறையில் இருக்கிறார் என்பது எனக்கு தெரியாது . ஆனால் அந்த கைதியிடம் ஒரு திறமை மட்டும் உள்ளது அதுதான் அழகாக ஒவியம் வரைவது. அவரின் படைத்தைதான் இங்கே நீங்கள் காண்கிறீர்கள்.


டிஸ்கி : . சிறுவயது முதல் நான் தமிழகத்தில் இருந்த வரை என் மனதை கவர்ந்த தமிழக தலைவர்கள் 2 பேர் ஒருவர் கலைஞர் மற்றொருவர் வை.கோ. இங்கு கலைஞரை வாழ்த்தி பதிவிடுவதால் எனக்கு அவரால் எந்த வித பலனும் இல்லை என்பதை உங்கள் நினைவுக்கு கொண்டு வருகிறேன். இந்த தலைவர்களை பற்றி உங்களுக்கு மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். அதை மறுக்கவில்லை. அதே நேரத்தில் இவர்களின் சில செயல்கள் என் மனதுக்கு பிடித்ததால்தான் இந்த பிறந்தநாள் பதிவு


அன்புடன்,
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன் எழுதிய கிறுக்கல்கள் உங்கள் பார்வைக்காக



2 comments:

  1. தூற்றுவது மிக எளிது அதை தான் அதிகம் பேர் செய்து வருகிறார்கள், ஆனால் வாழ்த்துவதற்கு என்று பக்குவம் இருக்க வேண்டும், அந்த பக்குவம் உங்களிடம் இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      தூற்றும் நேரத்தில் தூற்ற வேண்டும் வாழ்த்தும் நேரத்தில் வாழ்த்த வேண்டும். பிறந்த நாள் அப்போது யாராக இருந்தாலும் அவர் நலமுடன் இருக்க வாழ்த்த வேண்டும் என்பது என் எண்ணம்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.