Tuesday, February 19, 2013





 மானமுள்ள விவசாயிகள் ஜெயலலிதாவிற்கு சொல்லுவது


எனக்கு வந்த இந்த கடிதம் சி.எம் செல்லுக்கும் பல நீயூஸ் மிடியாவிற்கும் அனுப்பபட்டுள்ளது..பதிவுலகத்தின் குரல் இப்போது உலகெங்கும் ஒலிக்க ஆரம்பிப்பதால்   பாரதிய கிசான் சங்க துணை தலைவர் கிசான் சுப்பையா அவர்கள் எனக்கு அனுப்பிய கடிதம் இங்கு பதிவாக வெளியிடப்படுகிறது



1 லட்சம் விவசாயிகள் பங்கேற்ற வேளாண் கருத்தரங்கு - அலட்சியபடுத்திய தமிழகஅரசு

பெறுனர்:
செல்வி ஜெ ஜெயலலிதா, தமிழக முதல்வர் அவர்கள்
தலைமை செயலகம், செயின்ட் ஜார்ஜ் கோட்டை
சென்னை 600009

கருத்து சுருக்கம்: 1 லட்சம் பேர் பங்கேற்ற திருச்சி, பொன்மலை வேளாண்மை கருத்தரங்கு  - விவசாயிகளை கண்டு கொள்ளாத அதிமுக அரசு. விவசாயிகளை பிச்சைகாரர்களாக நினைக்க வேண்டாம்

ஆதாரம்: திருச்சி பொன்மலையில் பிப்ரவரி 15,16,17 ல் நடந்த கருத்தரங்கு

மரியாதை மிக்க தமிழக முதல்வர் செல்வி ஜெ ஜெயலிதா அவர்களுக்கு, 

எனது அதிகாலை வணக்கங்கள்.

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த நான் ஒரு விவசாயி. 20 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். தமிழ் நாடு விவசாய சங்கத்தில் உறுப்பினரும் கூட. கடந்த 3 நாட்களாக திருச்சி பொன்மலையில் புதிய தலைமுறை டிவி சார்பில் வேளாண்மை கருத்தரங்கம் நடந்தது. ஒரு விவசாயி என்ற வகையில் புதிய தலைமுறை டிவியை என் நெஞ்சார பாராட்டுகிறேன். சுற்று வட்டார மாவட்டங்களில் இருந்து சுமார் 1 லட்சம் விவசாயிகள் பங்கேற்றனர். இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் முதற்கொண்டு பல வேளாண்மை வல்லுனர்கள் பங்கேற்றனர். என் நண்பர் சிவசூரியன்பேட்டி கூட புதிய தலைமுறை டிவியில் வந்தது. ஒரு தனியார் தொலை காட்சி இவ்வளவு சிரத்தை எடுத்து விவசாயிகளுக்கு கருத்தங்கு நடத்தும்போது, மாநில அரசு 65 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்து கொண்டுள்ளது. பொதுப்பணி அமைச்சர் கே.வி. ராமலிங்கம் மகள் கல்யாணத்துக்கு 10 கோடி செலவானது, அதை ஒரு காண்டிராக்டர் ஏற்றுக்கொண்டார் என்று தினமலர் செய்தி வந்துள்ளது. இங்கே விவசாயிகள் செத்து கொண்டிருக்கும்போது, இப்படிப்பட்ட கல்யாணம் தேவையா? இந்த லட்சணத்தில் நிதி அமைச்சர் விவசாயிகள் தற்கொலை செய்யவில்லை, இயற்கை மரணம் சென்று பொய் சொல்கிறார். இவரெல்லாம் எப்படி மந்திரி ஆனார்? வேளாண்மை கருத்தரங்கத்துக்கு வந்த ஒரு சிலர், தமிழ் நாடு வேளாண்மை துறை மற்றும் திட்டக்குழுவை அணுகி ஆதரவு கேட்டதாகவும், அவர்கள் சிறிதும் கண்டு கொள்ளவில்லை என்று குறிப்பிட்டனர். இந்த அதிகாரிகளுக்கு மண்டையில் எதுவுமே இல்லையா? சட்டசபையில் விராலிமலை எம்.எல். விஜயகாந்தை பற்றி கிண்டல் செய்து பேச தெரிகிறது, ஆனால் எங்கள் பிரச்சினையை எந்த எம்.எல்.ஏவும் கண்டு கொள்வதில்லை. சட்டசபையா இல்லை சினிமா கொட்டயா?

அதிமுக அரசில் விவசாயிகளை முட்டாளாக எண்ணி கொண்டுள்ளனர். கருத்தரங்கத்துக்கு வந்த பலர் அரசு ஏன் இது போன்ற கருத்தரங்குகள் நடத்தாமால் 65 ஜோடி கல்யாணங்கள் நடத்துவதும், பொங்கலுக்கு 100 ரூபாய் கொடுத்து மக்களை பிச்சை காரர்களாக வைத்திருப்பதும் பற்றி குறை சொல்லிவிட்டுதான் சென்றனர். அதிமுக நாடாளுமன்ற குழு கூட்டம் போட்டால் காசு, சாராயம், பிரியாணி கொடுத்தால்தான் கூட்டம் வரும். அதுவும் சில ஆயிரம்தான். ஆனால் சொந்த கை காசை போட்டு 1 லட்சம் விவசாயிகள் திருச்சியில் திரண்டுள்ளது ஆட்சியாளர்களுக்கு சொல்லும் மறைமுக செய்தி. மக்கள் வரிப்பணத்தை வீணடித்து இலவச கல்யாணத்தை நடத்துவதும், இலவசம் கொடுத்தால் மட்டும் ஓட்டு விழாது. புதிய தலைமுறை டிவி முயற்சி செய்தது போல், புதிய சிந்தனைகளில் இந்த அரசாங்கம் இறங்கலாமே? ஒன்று மட்டும் உறுதி. முதல்வர் அருகில் உள்ள மந்திரிகள், அதிகாரிகள் தவறான தகவல்களை கொடுத்து தவறான பாதையில் அழைத்து செல்கின்றனர். இந்த அரசு விவசாயிகளுக்கு எதுவுமே  யோசிப்பதும் இல்லை. செய்வதில்லை.

எங்களுக்கு நீங்கள் வீசி எறியும் பிச்சை காசு வேண்டாம். எங்களுக்கு உதவி செய்ய நினைத்தால், விவசாயம் வளர தொழில் நுட்பம் கற்று கொடுங்கள். இது போன்று கருத்தரங்குகள் நடத்துங்கள். திருந்துங்கள். எங்கள் கோவத்திற்கு ஆளாக வேண்டாம். இல்லை வரும் தேர்தலில் எங்கள் பலத்தை காண்பிப்போம். 1996 ஆம் ஆண்டு, மொடக்குறிச்சி தொகுதியில் 1500 வேட்பாளர்கள் நிறுத்தியது போல், ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியிலும் 1000 பேரை வேட்பாளரை நிறுத்தினால் நாங்க சொல்றது உங்க காதில் விழும். அதுவ்ரை நாங்கள் சொல்வது ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் காதில் விழாது


இங்கனம்,
கிசான் சுப்பையா
துணை தலைவர், பாரதிய கிசான் சங்கம்

--------------------------------------------------------------------------------------------------------------------------

3 comments:

  1. நீங்க அமெரிக்கன் சிட்டிசன் ஆயிட்டா மாதிரி தெரியுது...!

    ReplyDelete
    Replies
    1. அமெரிக்க சிட்டிஷன் ஆகி பல ஆண்டுகளாகிவிட்டன.

      Delete
  2. இதை நாம் படித்து என்ன பயன்?

    படிக்க வேண்டியவர்கள் படிக்க வேண்டும்.
    படித்தவர்கள் உரிமைக்குக் குரல் கொடுக்க வேண்டும்.

    “எங்களின் பலம் என்ன என்று சொல்வதைவிட...
    தங்களின் பலத்தைக் காட்டத் துணிய வேண்டும்.“

    (இதை விட முக்கியமானது... அன்னை தன் பலத்தை
    எப்படியெல்லாம் காட்டுவார் என்பதையும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.

    ஆக்கப்புர்வமான பகிர்வு.
    வாழ்த்தக்கள் “உண்மைகள்“

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.