Tuesday, May 21, 2013



ரூபாய் 4,500 பரிசுப் போட்டி! நீங்களும் வெல்லலாம்  மிக எளிதாக!


நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். கிழே கொடுக்கப்பட்ட 2 படங்களுக்குள் 8 வித்தியாசங்கள் உள்ளன. அதனை கண்டு பிடித்து தினமலரின் பொறுப்பாசிரியருக்கு அனுப்பவும் அவர்தான் சரியாக விடை எழுதியவர்களில் சிலரை தேர்ந்தெடுத்து பரிசை வழங்குவார். விடையை வரும் வெள்ளிக்கிழமைக்குள் அனுப்ப வேண்டும்.


நான் எனது வலைதளத்தில் ஏதாவது ஒரு பரிசுப் போட்டியை நடத்த வேண்டும் என்று நீண்ட நாளாக திட்டமிட்டு இருந்தேன். ஒரு வேளை அப்படி நான் நடத்தி பரிசு கொடுத்து இருந்தால் நான் எனக்கு வேண்டிய பதிவாளருக்கு அதை கொடுத்துவிட்டேன் என்று குறை கூறுவார்கள் என்று கருதியதால் அதனை நான் செயல்படுத்த முடியாமல் இருந்து வந்தேன்.

தினமலரில் இந்த போட்டியை பார்த்ததும் அதையே நமது வலைத்தளத்தில் போட்டு போட்டியை அறிவித்து இடலாம் என்று கருதியதால் அதனை இங்கு வெளியிட்டு உள்ளேன். இப்போது நான் பரிசை எனக்கு தெரிந்தவர் யாருக்கும் கொடுத்துவிட்டேன் என்ற அவச் சொல் இனிமேல் எனக்கு வராது அல்லவா? எப்படி நம்ம ஐடியா?

கடைத்தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்த கதையாய் இருக்கிறதே என்று சொல்ல வருகிறீர்களா? அப்படியே வைச்சுகுங்க

இப்படியும் ஒரு மொக்கை பதிவு போடலாம்தானே?

ஹீ.ஹீ.ஹீ

Courtesy : Dinamalar
அன்புடன்
மதுரைத்தமிழன்.

டிஸ்கி :  பரிட்சையில் பிட்டு அடித்து பாஸானவர்களுக்கும் விடை தெரியாதவர்களுக்கு உதவுவதற்காக கிழேயுள்ள படம்.

|
|
|
|
|
V







எனது சிறு வயதில் குமுதத்தில் இதுமாதிரி ஆறு வித்தியாசங்கள் வரும் அது எனக்கு அப்போது மிகவும் பிடிக்கும். இன்னும் அது மாதிரி வருகிறதா என்று தெரியவில்லை.

5 comments:

  1. ஐடியா சூப்பரப்பு.... பரிசுப் போட்டிய என்னமா நடத்திப்புட்டீக...! குமுதம் ஆறு வித்தியாசங்கள் என் மாணவப் பருவத்தின் சுவாரஸ்யங்களில் ஒன்று. இன்றைய குமுதத்தை நான் படிப்பதில்லை.

    ReplyDelete
  2. அய் இது நல்லாயிருக்கே

    ReplyDelete
  3. சிறுவர் மலரில வருது. ஆர்வமா இப்பவும் நான் தேடுவேன்..

    ReplyDelete
  4. வணக்கம் நண்பரே.வாரமலரிலிருந்து ( அனுமதி பெற்று ) சுட்டாலும், சுட்ட பழம் சுவையாகத்தான் இருந்தது. எட்டுத் தப்பில் ஏழு தப்பு சரி ஆனால் ஒரு தப்பு, தப்புதான். அந்த தப்பு கையை சுற்றி சிவப்பு வட்டம் போட்டு உள்ளீர்கள், கை சரி ஆனால் அது பேச்சாளரின் கை அல்ல, உடகார்ந்து இருக்கும் தலைவரின் கை. எனவே இது நீங்களாக வட்டம் போடவில்லை, மண்டபத்தில் யாரோ சொல்லி கொடுத்த மாதிரி உள்ளதே?
    நன்றி. 'நவோதயா' செந்தில், புதுவை

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.