Thursday, May 2, 2013


காதல் கல்யாண பலன்கள்


நான் பேஸ்புக்கில் ஃப்லோ செய்யும் பெண்மணி திருமதி.ராத்திகா பவளமல்லி - அவர் பேஸ்புக்கில் இடும் தகவல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் அவர் கருப்பு என்ற தலைப்பில் எழுதியவை எனக்கு மிகவும் பிடித்தவை. அவரின் அனுமதி பெற்று அவரின் பேஸ்புக் தளத்தில் வெளிவந்தவைகளை.... உங்கள் பார்வைக்காக இங்கு வெளியிட்டுள்ளேன். நிச்சயம் அது உங்களுக்கும் பிடிக்கும்.

நன்றி திருமதி.ராத்திகா பவளமல்லி

அன்புடன்
மதுரைத்தமிழன்






Raththika Pavazhamalli added a photo from April 6, 2013 to her timeline.
காதல் திருமணங்கள் -
 
1. ஜாதகம் கேட்பதில்லை.
 
2. நாலுல குரு, ஏழுல சனி என்றெல்லாம் பிரிப்பதில்லை.
 
3. பத்துப்பொருத்தம் பார்ப்பதில்லை.
 
4. பெண்பார்க்கும் படலம் நடத்துவதில்லை.
 
5. முப்பதுபேர் வீட்டுக்கு வந்து பஜ்ஜி, சொஜ்ஜி என்றெல்லாம் மூக்குப் பிடிக்கத் தின்றுவிட்டு, 'போய்க் கடுதாசு போடுறோம்' என்று காக்க வைப்பதில்லை.
 
6. டூ வீலர், ஃபோர் வீலர்,கட்டில், மெத்தை, தலையணை,பீரோ, மிக்சி, கிரைண்டர், அண்டா, குண்டா, தட்டுமுட்டுச்சாமான்கள் என்றெல்லாம் சீர் செனத்தி கேட்பதில்லை.
 
7. வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி பணம் சேமித்து நிதி நிறுவனங்களுக்குத் தாரை வார்த்ததில்லை,
 
8. மண்டபத்திற்காக லோல்பட வைப்பதில்லை.
 
9. பத்திரிக்கையில் என் பெயர் போடவில்லை, உன் பெயர் போடவில்லை என்ற அங்கலாய்ப்புகள், முணுமுணுப்புகள், வருத்தங்கள், கோபங்கள், சண்டைகளை ஏற்படுத்துவதில்லை.
 
10. சாப்பாடு சரியில்லை, சாப்பாடு போதவில்லை என்ற குறைகள் இருப்பதில்லை.
 
11. ஐயர்கள் வளர்க்கும் ஓமப்புகையில் கண்கலங்கி உட்கார வைப்பதில்லை.
 
12. அடுத்தநாள் கன்னி கழிந்துவிட்டதா? என்ற ஆராய்ச்சிக்கு இடம் தருவதேயில்லை! ...
 
(ஒரு நிமிடம் யோசித்ததில் உதித்தவை! ஒருநாள் உட்கார்ந்து யோசித்துப் பாருங்கள்! ஆயிரம் நன்மைகள் தென்படக்கூடும்)

திருமதி.ராத்திகா பவளமல்லி

போதனைகள் அடுத்தவர் குடும்பத்திற்கு மட்டுமா?
 
பத்துப்பதினைந்து பாஸ்டர் குடும்பங்களில் பார்த்துவிட்டேன். தம் மனைவிகளை மிகவும் அசிங்கமாக, கேவலமாகத் திட்டுகிறார்கள்; அடிக்கிறார்கள்; உதைக்கிறார்கள்; குடும்பங்களில் அடிக்கடி சண்டைகள் நடந்துகொண்டே இருக்கின்றன. என் தோழியின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் பாஸ்டர் குடும்பத்திலும் இதே நிலைதானாம். என் மகளுடன் படிக்கும் அவள் தோழியும் தன் குடும்பத்தில் தினமும் சண்டை என்றும், தன் நிம்மதி போய்விட்டதாகவும் கூறுகிறாளாம். (அவள் தந்தையும் பாஸ்டர்தான்).

ஆனால் போதனைகளுக்குக் குறைவேயில்லை.

கருப்பு - 67
**********
கருப்பு தனக்குள் வருத்தப்பட்டுக்கொண்டது:

'ஆளாளுக்கு அருவாளத் தூக்கிட்டு அலஞ்சா

நம்ம அருவாளுக்கு

மதிப்பு

மருவாத

மவுசு

எப்பிடி கிடைக்கும்?

 

நேத்து நம்ம அருவாளையே

ஒருத்தன் புடுங்கப் பாத்தான்

நல்லவேளை

கொத்தனார் காங்கிரீட்குள்ள

திணிச்சி வெச்சிருந்ததால புடுங்க முடியல.

ஆனா பாவம்

பங்காளிக் கருப்பு வெச்சிருந்த அருவாவ

எவனோ சுளுவா புடிங்கிட்டுப் போயிட்டானாம்

 

இப்போ யாருக்கும்

சாமி தேவயில்ல

சாமியோட அருவாதான் தேவப்படுது.'
 
==================================
கருப்பு - 51

 

கருப்பு புலம்பியது:

 

"கால்நடைங்க கிட்டயிருந்து

பயிர்களப் பாதுகாத்த காலம் மாறிப்போயி

இப்ப

கட்டிடங்களப் பாதுகாக்கும்

செக்கியூரிட்டியா ஆக்கிட்டீங்களேப்பா!

 

இதத்தான்

முன்னேத்தம் முன்னேத்தம்னு சொல்றீங்களோ?

 

யூனிபாமாவது கொடுங்கடா!

புள்ளைங்க 'பூச்சாண்டி மாமா'ன்னு

அசிங்கமா கேலி பண்ணுதுங்க!"

=======
கருப்பு - 45
 
பழனியப் பாரு
அப்பா அம்மா கிட்ட
கோவிச்சுக்கிட்டு
கோவணத்தோடு
மலமேல போயி குந்திக்கிட்டவன்
 
வெள்ளியில தேரென்ன
தங்கத்துல தேரென்ன
வைரத்துல கிரீடமென்ன
உண்டியல்ல பணமென்ன
பல்லக்குல பவனியென்ன
 
பொண்டாட்டி தாலிய அடகு வெச்சு
குடிக்கிறவனுங்கெல்லாம்
நமக்கு பக்தனுங்க
 
எங்க உருப்படுறது?

2 comments:


  1. தங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் பிடித்தது!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.