Wednesday, June 4, 2014



நீதிக்கு தலைவணங்கும் அன்னை : அரசியல் டிவிட்ஸ் படிக்க ரசிக்க



மோடி டிவிட்ஸ் :

அமெரிக்கா வர மோடிக்கு ஒபாமா அழைப்பு:ஒபாமாவின் கோரிக்கையை ஏற்றார் மோடி
இந்திய மக்களுக்கு சேவை செய்வதாக கூறி வெற்றிப் பெற்ற மோடி அமெரிக்காவிற்கு சேவை செய்யவதற்காக அனுப்பட்ட கோரிக்கையை ஏற்றார். இதற்குதானே இவ்வளவு பாடுபட்டாய்?

பிரதமர் பதவி ஏற்பு விழாவினை ஒட்டி தமிழ் மீனவர்கள் விடுதலை. மோடியின் ராஜ தந்திரத்திற்கு கிடைத்த வெற்றி. மோடி ஆட்சியில் அமர்ந்ததும் தமிழ் மீனவர்கள் மீண்டும் கைது இதுவும் மோடியின் ராஜ தந்திரத்திற்கு கிடைத்த வெற்றியா?

செய்தி : பிரதமர் மோடி அவர்கள் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்தார்.
மதுரைத்தமிழன் : ஊழல் பாடம் கற்றுக் கொள்ள சென்றாரோ

உலகிற்கு இந்தியாவின் பெருமையை உயர்த்தி காட்ட நினைக்கும் மோடி அவர்களே முதலில் உங்கள் குடும்ப பெருமையை உலகிற்கு காட்ட உங்கள் மனைவியை உடன் அழைத்து வாழுங்கள்

செய்தி :மோடியின் மனைவி ஜசோதா பென்னுக்கு பிரதமர் மனைவி என்கிற அடிப்படையில்
24 மணிநேர போலீஸ் பாதுகாப்பு.
Shahul Ilyas : தன் கணவனின் பராமரிப்பில் இருப்பதை விட ஒரு சிறந்த பாதுகாப்பு
எந்தவொரு பெண்ணுக்கும் இருக்க முடியாது.

மோடியை ஆதரிக்கிறவன்லாம் உத்தமனுங்களும் இல்ல.. மோடியை எதிர்க்கறவனுங்கள்லாம் கொடூரமானவனுங்களும் இல்ல...

மோடியின் பிச்சைகாரத்தனம்?டீசலுக்கு 50 காசு விலையேற்றி எங்களை பிச்சைகாரர்களை போல கேவலப்படுத்துகிறார்

ஈழத்தமிழர்களை விட தமிழக தமிழர்களை ராஜபக்சேவுக்கு அதிகம் பிடிக்கும் என்பதால்தான் என்னவோ தமிழக மீனவர்களை ராஜபக்சே விடுதலை செய்திருக்கிறாரோ என்னவோ

கொழும்பு சிறையில இருந்த தமிழ்நாட்டு தமிழர்களை ராஜ பக்சே விடுதலை பண்ணி இருக்கார் ஆனா இவங்கள விடுதல பண்ண சொல்லி வைகோவோ சீமானோ போராடல.ஏன்னா இவங்க ஈழத்தமிழர்கள் இல்லை அப்படி பார்க்கும் போது தமிழ்நாட்டு தமிழர்களின் நண்பன் ராஜ பக்சேன்னு சொல்லலாம்

தமிழில் ஒரு பழமொழி உண்டு புது துடைப்பம் நன்றாக பெருக்கும் என்று, நாட்கள் போக போக தான் தெரியும் பொருத்திருந்து பார்ப்போம் # மோடி


திமுக டிவிட்ஸ் :

//தி.மு..வினர் ஒவ்வொருவரும் சுய பரிசீலனை செய்துகொள்ள வேண்டும்: கருணாநிதி/// #உங்க குடும்பத்தினருக்கு சொல்ல வேண்டியதை ஏன் பப்ளிக்காக சொல்லுகிறீர்கள்


கலைஞர் :குறைந்த விலைக்கு வாங்கி நான் தற்போது வசிக்கும் தெரு வீட்டைக் கூட, என் வாழ்நாளுக்குப் பிறகு ஏழை யெளியோர் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், மருத்துவ மனையாக இயங்க எழுதிக் கொடுத்து விட்டேன். # மீதி சொத்துக்களை எப்பொழுது எழுதி வைக்கப் போகிறீர்கள்

சேவல் சண்டைக்கு தடை: தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு! # திமுகவில் நடக்கும் குடும்ப சண்டைக்கு தடை விதிக்க நீதிமன்றத்திற்கு தைரியம் உண்டா?

இந்தியா & சமுகம்

கற்பழிப்பு சம்பவங்களுக்கு ஐ.நா., அமெரிக்கா கண்டனம்
இதுக்குதான் அப்பவே சொன்னேன் கற்பழிப்பை தேசிய விளையாட்டாக அறிவித்து விடுங்கள் என்று

இந்தியாவில் பலாத்காரம் ஏன் நடக்கிறது? பேஸ்புக்கில் ஸ்டேடஸ் குறையும் போது அதை அதிகரிக்க பேஸ்புக் செய்யும் தந்திரம்

சமுக வளைத்தலைங்களில் ஸ்டேடஸ் போடுவதற்காகவே இந்தியாவில் பாலியல் பலாத்காரம் நடத்தப்படுகிறதோ? #சந்தேகம்

அமெரிக்கவில் IT யில் வேலைபார்ப்பவருக்கும் தமிழக் அமைச்சருக்கும் உள்ள ஒற்றுமை எந்த நேரத்திலும் பதவி காலியாகலாம் என்பதே

ரோட்டில் நமக்கு பிடித்த பெண்ணை பாலோ செய்தால் அநாகரிகம் அதை பெண்ணை பேஸ் புக்கில் பலோ செய்தால் நாகரிகம்

ரோட்டில் பார்த்த பெண் அழகாக இருந்து அதை நாம் பாராட்டினால் முதேவி அலையுது பார் என்றும் அதை பெண்ணை பேஸ்புக்கில் பார்த்து அழகை பாராட்டினால் யூ ஆர் ஸோ ஸ்வீட் என்றும் சொல்லுவார்கள் இந்த பெண்கள்


அன்புடன்
மதுரைத்தமிழன்

5 comments:

  1. கடைசி தான் சூப்பர்

    ReplyDelete
  2. நானே கேட்கலாம் னு நினைத்தேன். மழை வெயில் பாராமல் வரும் நம்ம சகாவின் மெயிலை காணாமேன்னு.
    //மத்த சொத்தை எப்போ//ஹ...ஹா...ஹா,,செம்ம.
    எப்பிடியோ faceசை பார்த்தோ facebook பார்த்தோ பாலோ பண்ணுறவங்க பண்ணிகிட்டே தான் இருங்காங்க:)
    ரொம்ப நாள் கழிச்சு மெயில் படிச்சது ரொம்ப சந்தோஷம் :)

    ReplyDelete
  3. எல்லாமே நல்லாத்தான் இருந்ததுன்னாலும்.......இறுதி டிவிட் தான் மிக "அழ்கான" ட்விட்!!!!!

    ReplyDelete
  4. கடைசி ட்வீட் கலக்கல் நண்பரே.......

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.