Wednesday, July 2, 2014


exclusive interview with  modi.jpg




மோடியுடன் ஒரு எக்ஸ்குளுஸிவ் பேட்டி



மதுரைத்தமிழன் : ஹரே மோடி சாப் ! நமஸ்கார்
மோடி : வணக்கம் மதுரைத்தமிழா

மதுரைத்தமிழன் ; என்ன மோடி சாப் உங்க ஆட்சியில விலைவாசி எல்லாம் ஏறிக் கொண்டே போகுதே அதைப் பற்றி என்ன சொல்லுறீங்க.
மோடி : விலைவாசின்னா ஏறத்தான் செய்யும் ராமர் ஆண்ட காலத்தில் இருந்து மன்மோகன் சிங் ஆண்ட காலம் வரை விலைவாசியை உற்று நோக்கினால் விலைவாசி எல்லாக் காலங்களிலும் ஏறிக் கொண்டுதான் வந்திருக்கிறது அது இறங்கியதாய் சரித்திரத்தில் இடமில்லை நிலைமை அப்படி இருக்க நான் என்ன செய்ய முடியும் இதில்


மதுரைத்தமிழன் நீங்க வந்தா ஆட்சியில் மாற்றம் இருக்கும் என்று சொன்னீர்களே
மோடி :ஆமாம் நான் சொன்னேன் அது உண்மைதான் முன்பு மன்மோகன் ஆட்சி நடந்தது இப்போ என் ஆட்சி அல்லவா நடக்கிறது/


மதுரைத்தமிழன் :கட்ச தீவை மீட்பதாக சொன்ன நீங்கள் இப்போது பல்டி அடிக்கிறீர்களே?
மோடி :அதில் ஒரு சின்ன தவறு நேர்ந்துவிட்டது இந்த விஜயகாந்த் வைகோ ராமதாஸ் போன்றவர்கள் கட்சதீவை மீட்டு தாருங்கள் என்று சொன்னது என் காதில் கர்சீப்பை மீட்டுதாருங்கள் என்று சொன்ன மாதிரி என் காதில் விழுந்துவிட்டது. இதுக்குதான் எல்லோரும் ஹிந்தி கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறேன் அவர்கள் ஹிந்தியில் பேசி இருந்தால் இப்படி குழப்பம் ஏற்பட்டு இருக்காது அல்லவா


மதுரைத்தமிழன் :மோடி சாப் நீங்க கலைஞரைப் போலவே நல்லா பேசி சமாளிக்கிறீங்க... நீங்கள் தேர்தல் நேரத்தில் சொன்னது ஒன்று இப்போ நடப்பது ஒன்றாகவே இருக்கிறதே?
மோடி :மதுரைத்தமிழா நான் தேர்தல் நேரத்தில் ஒன்றை மட்டும்தான் திரும்ப திரும்ப சொன்னனேன் அதாவது காங்கிரஸ் அரசாங்கத்தை ஆட்சியில் இருந்து இறக்கி அங்கே நான் உட்காருவேன் என்று மட்டும்தான் சொன்னேன் அதன் படி சொன்னதை செய்துவிட்டேன்

மதுரைத்தமிழன் :ராமருக்கு கோயில் கட்டுவது எந்த நிலமையில் இருக்கிறது?
மோடி :அட ராமா அதை இன்னுமா நீங்க நினைவில் வைத்திருக்கிரீங்க.....இந்தியர்கள் அனைவரும் மறந்ததை நீங்கள் மீண்டும் நினைவுபடுத்திவிடாதீர்கள்

மதுரைத்தமிழன் :தமிழர்களின் பிரச்சனைகளான முல்லைப் பெரியாறு, மீனவ பிரச்சனை, காவிரி பிரச்சனை போன்ற பல பிரச்சனைகளை நீங்க தீர்த்து வைக்க என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்?
மோடி : அந்த பிரச்சனைகளை தீர்த்து வைச்சா நீங்க எனக்கு என்ன பண்னிடப் போகிறீங்க? ஒரு வேளை நான் தீர்த்து வைச்சால் அந்த பிரச்சனைகளுக்க்காக அந்த கால முதல் போராடி வருவதாக நாடகமாடிக் கொண்டிருக்கும் கட்சிகள் தாங்கள் ஆட்சியில்தான் தீர்த்து வைத்தாக சொல்லுவார்கள் நீங்களும் அதை நம்பி அவர்களுக்கே ஒட்டுப் போடுவீர்கள் அதனால் எனக்கு என்ன நன்மை.....


மதுரைத்தமிழன் : உங்களுக்கு விசா கொடுக்க மறுத்தது அமெரிக்கா ஆனால் இப்போது அமெரிக்க பார்லிமென்டின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றச் செய்ய வேண்டும்' என, அமெரிக்க மூத்த எம்.பி.,க்கள் மூவர், அந்நாட்டின் பார்லிமென்ட் சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அது பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

மோடி :மதுரைத்தமிழா நான் ஒரு ரகசியம் சொல்லுறேன் அதை மட்டும் வெளியே சொல்லிவிடாதே ஒகேவா.. இப்படி ஒரு வேண்டுகோள் விடுவித்தது அமெரிக்காவில் இருக்கும் வீணாப் போன எம்பிக்கள்தான் அவர்களிடம் அங்குள்ள என் குஜராத்தி நண்பர்கள் பணத்தை கொடுத்து லாபி பண்ணியதால்தான் அவர்கள் சபாநாயகருக்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள்... அதைத்தான் என் பேச்சை கேட்டு செயல்படும் இந்திய ஆதரவு ஊடகங்கள் பெரிது படுத்தி செய்திகள் வெளியிட்டு வருகின்றன... நல்லா கவனிச்சு பாருங்கள் அதிக அதிகாரம் படைத்த ஒபாமாவோ அல்லது சபாநயகரோ இது வரை இதைப்பற்றி கொஞ்சம் கூட வாயை திறக்கவில்லை இது உண்மை ஆனால் இதை மறைத்துதான் நான் பெரிய பில்டப் பண்ணிக் கொண்டிருக்கிறேன்

பிரதமர் எனக்கு ஒதுக்கிய நேரம் முடிந்துவிட்டதால் பேட்டியும் இத்துடன் முடிந்துவிட்டது

மோடி தனிப்பட்ட முறையில் என்னிடம் சொன்னது கடந்த தேர்தலில் நான் போட்ட பதிவுகளால்தான் தமிழக மக்கள் அவரின் கட்சிக்கு ஒட்டுப் போட்டவில்லை என்று கூறி வருத்தப்பட்டார். மேலும் அவர் கூறியது மதுரைத்தமிழா யார் ஹிந்தி கற்றுக் கொண்டாலும் பரவாயில்லை ஆனால் நீ மட்டும் கற்றுக் கொள்ளாதே நீ கற்றுக் கொண்டு ஹிந்தியில் பதிவிட்டால் அடுத்த முறை அவர் ஆட்சிக்கு வருவது மிக கடினம் என்று சொல்லி சென்றார். பாவம் அவர் பிழைச்சுகிட்டு போகட்டும் என்று நானும் சரி என்று சொல்லிவிட்டேன்


அன்புடன்
மதுரைத்தமிழன்



29 comments:

  1. நல்ல சிந்தனை :)

    ReplyDelete
    Replies
    1. நல்ல சிந்தனை என்பதைவிட கற்பனை அல்லது நக்கல் என்று வந்திருக்க வேண்டும் விக்னேஷ்

      Delete
  2. பேட்டி அருமை
    குறிப்பாக கர்சீப்
    இல்லையில்லை கச்சத்தீவு
    பேட்டிப் பதிவுகள் தொடர நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தலைவர் வாயால் அருமை என்று கேட்பதை விட வேற என்ன சந்தோஷம் இருக்க முடியும் ரமணி சார்

      Delete
  3. சிறந்த நேர்காணல்

    ReplyDelete
  4. ஆள்தான் மாறியிருக்கிறது ,தமிழனுக்கு எதிரான கொள்கையில் மாற்றமில்லை என்பது புரிந்தது ,நீங்கள் சொல்ல வந்ததும் அதுதானே ?
    த ம 2

    ReplyDelete
  5. நல்ல கற்பனைப் பேட்டி!!!!....அதிலும் கட்சத்தீவு....கர்சீஃப் அருமை! ரசித்துப் படித்தோம்! மதுரைத் தமிழன் ஹிந்தி கற்றுக் கொண்டால் மோடிக்குப், போட்டியாகிவிடுவீர்களோ என்ற "பேடி" (மலையாளத்தில் பேடி என்றால் பயம்) யால்தான் கற்றுக் கொள்ளாதீர்கள் ன்னு சொல்லியிருப்பார்!

    ReplyDelete
    Replies
    1. யான் கொறச்சு கொறச்சு மலையாளம் அறியும் சேட்டா

      Delete
  6. இன்றைய காலகட்டத்துக்கு தேவையான பதிவு.........

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      Delete
  7. நீங்கள் ஹிந்தி கற்றுக் கொள்ளாமல் இருக்க எப்படி எல்லாம் யோசிக்கிறீங்க!!!!!

    ReplyDelete
  8. அவரோட ஆங்கிலம் ரொம்ப மோசமாக இருக்கும்ன்னு சொல்லுவுங்க அப்புறம் பேட்டி எப்படி எடுக்க முடிந்துதது ??

    ReplyDelete
    Replies
    1. என் பேட்டிக்கு உதவியது டில்லியில் இருக்கும் நம்ம வெங்க்ட் ஜீ தான்

      Delete
  9. அருமையான பேட்டி! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  10. இதையெல்லாம் படிக்க மோடி அவர்கள் முதலில் தமிழ் கற்க வேண்டும்.

    நீங்கள் ஹிந்தி கற்றுக்கொண்டு பதிவிட்டால்
    உங்களின் நகைச்சுவைகளைப் படிக்க
    நாங்களும் ஹிந்தி கற்க வேண்டும்.
    அதனால் வேண்டாம் “தமிழரே“

    ReplyDelete
    Replies
    1. அழகான பொண்ணு கற்று தந்தால் மட்டும் ஹிந்தி கற்றுக் கொள்வது என்று முடிவு எடுத்து இருக்கிறேன் ஆனா அழகான ஹிந்தி பொண்ணு ஏன் இந்த தமிழனை பார்க்கப் போவது அதனால் தைரியமாக இருங்கள்

      Delete
  11. மோடி என்றாலே உங்களுக்கு நக்கல் பீறிட்டு வருகின்றதே. கலக்குங்க.

    ReplyDelete
    Replies
    1. மோடி மட்டுமல்ல அரசியல் தலைங்க என்றாலே நக்கல் வரும் மோடி எனது புது வரவு அவ்வளவுதாங்க

      Delete
  12. நல்ல கற்பனை.... ரசித்தேன் ம.த.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      Delete
  13. அருமையான கற்பனை பேட்டி மோ(ச)டி நல்ல விதமாகவே பதிலளித்துள்ளார்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      Delete
  14. Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      Delete
  15. நல்ல கற்பனை, நல்ல நேர்காணல் ஆனால் அனைத்தும் உண்மையே.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      Delete
  16. கேள்வியும் பதிலும் அருமை! இதுதான் உமக்குள்ள பெருமை!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.