Thursday, January 8, 2015



இதயம் உள்ளவரா நீங்கள் அப்ப இதை கண்டிப்பாக படிங்க


பெண் பதிவர் அருணா செல்வம் என்பவர் பிரான்ஸ் நாட்டில் இருந்து கவிதைகள் கதைகள் கட்டுரைகள் எழுதி பதிவிடுவார். அவரது இன்றைய பதிவில் மாரடைப்பின் அறிகுறிகள்! (Heart Attack)   என்ற பதிவை இட்டு அதில் சில சம்பவங்களை குறிப்பிட்டு நம்மை அழுக வைத்துவிட்டு இறுதியாக மாரடைப்பின் அறிகுறிகள் என்று சிலவற்றை குறிப்பிட்டு இருந்தார்
அதை படித்த பின் அந்த அறிகுறிகள் எனக்கு இருப்பதாக அறிந்து டாக்டரிடம் போவதற்கு முன்னால் வலையுலக பதிவர் நண்பர் சொக்கனிடம் ஆலோசனை கேட்டேன் ( கற்பனையில்தான்) அந்த கற்பனை நகைச்சுவை ஆலோசனைதான் இந்த பதிவு

 அந்த அறிகுறிகள்

//சாதாரணமாக இருக்கும் போது உடம்பு அதிகமாக வலித்தாலோ, காரணமின்றி அதிக சோர்வு இருந்தாலோ, தொண்டையில் சளி போன்றோ அல்லது கற்று போன்றோ (ஏப்பம் வருவது போல்...) இருந்தாலும், மூச்சு விட சிரம்மாக இருந்தாலும், அதிகமாக வேர்த்தாலும்.... அதை அலட்சியமாக விடாமல் உடனடியாக தகுந்த மருத்தவரை கலந்து ஆலோசித்து நலம் பெறுங்கள்.///

நண்பர்களே  மேலே சொன்ன காரணங்களை வைத்து பார்க்கும் போது எனக்கு மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகள் மிக அதிகமாக இருக்கிறது அதனால் டாக்டரிடம் போவதற்கு முன்பு  பதிவர் நண்பர் சொக்கனிடம் ம் ஆலோசனை கேட்டேன் அதற்கு அவர் என்ன என்ன அறிகுறிகள் இருக்கிறது என்று சொல்லு என்று கேட்டார்

அதற்கு நான் உடம்பு அதிகமாக வலிக்கிறது என்று சொன்னேன்
அதற்கு அவர் மதுரைத்தமிழா உன் மனைவி உன்னை பூரிக்கட்டையால் அடித்து இருப்பார் அதனால் உனக்கு வலி ஏற்பட்டு இருக்கும் என்று சொன்னார்

அப்புறம் வேற என்ன அறிகுறி என்று கேட்டார்
உடனே நான் சோர்வு என்று சொன்ன்னேன்
அதற்கு அவர் முதலில் மாங்கு மாங்கு என்று  பதிவு எழுதுவதை நிறுத்திவிட்டு தூங்கு எல்லாம் சரியாகப் போய்விடும் என்றார்

அப்புறம் வேற என்ன அறிகுறி என்று கேட்டார் சொக்கன்.
சாப்பாடு சரியாக சாப்பிட முடியவில்லை என்று சொன்னேன்
அதற்கு அவர் சமைச்சது உன் மனைவியா என்று கேட்டார் அதற்கு நான் ஆம் என்று சொன்னதும் அத்ற்கு அவர் எந்த மனைவி கணவனுக்கும் வாய்க்கு ருசியாக சமைச்சு போட்டு இருக்காங்க. ஹெல்தியா சமைக்கனும் அப்பதான் உடம்புக்கு நல்லது என்று சமைப்பார்கள் அதானால் வாய்க்கு ருசியாக இருக்காது நீ வேண்டுமானல் அஞ்சப்பா செட்டி நாட்டில் சாப்பிடு சாப்பாடு நல்லா உள்ளே இறங்கும் என்றார்

வேற என்ன?
நான் அதிகமாக வேர்க்குது என்றேன்
உடனே அவர் உன் முன்னால் மனைவி நிற்கும் போதுதானே வேர்க்கிறது ஆமாம் என்றால் அது இயற்கைதானப்பா கவலைபடாதே என்றார்

வேற என்ன என்றார்
மூச்சு விட சிரமமாக இருக்கிறது என்றேன்
ம்ம்ம் இப்ப அங்கே குளிர்காலம் பீச்சுக்கு போறதுக்கு வாய்ப்பு இல்லை. ஹேய் நீ 'பார்'க்கு போகும் போதுதானே மூச்சு விட முடியவில்லை என்று கேட்டார்
அதற்கு நான் ஆமாம் என்றேன்
அதற்கு அவர் அதை நிப்பாட்டு என்றார்
அதற்கு நான் என்னால் குடிக்காமல் இருக்க முடியாதே என்றேன்
அவர் உடனே, உன்னை யாருய்யா குடிக்க வேண்டாம் என்று சொன்னது. நான் போக வேண்டாம் என்றுதான் சொன்னேன் குடிக்க வேண்டாம் என்று சொல்லவில்லையே என்று சொல்லி,  பாருக்கு போனால் அங்கு இளம் வயது பெண்கள் வருவார்கள் அவர்களை நீ பார்த்தால் இந்த வயதில் மூச்சு திணறல் ஏற்படாமல் என்ன செய்யும் என்று கேட்டார்

அதுவும் சரிதான் என்றேன்


இறுதியாக சொன்னார் இப்படிதான் பலரும் பலவித செய்திகளை நெட்டில் படித்து தனக்கு அந்த வியாதி இருக்கிறது  இந்தவியாதி இருக்கிறது என்று கவலைப்படுகிறார்கள் .மதுரைத்தமிழா பூரிக்கட்டையால் உன் மனைவி இந்த அடி அடித்தும் சாகாத நீயா மாரடைப்பில் சாகப் போகிறாய் என்று நக்கல் அடித்து சென்றார்.

அப்போது அங்கு வந்த மனைவி எதற்கு தனியாக சிரிக்கிறாய் என்றார் நான் நடந்தவைகளை சொன்னேன் அதற்கு அவரும் சொன்னார் உனக்கு ஹார்ட்டாக் எல்லாம் வராது என்றார்.
எப்படி இவ்வளவு உறுதியாக சொல்கிறாய் என்று கேட்டேன்

அதற்கு அவர் உனக்கு ஹார்ட்டுன்னு ஒன்று இருந்தால்தானே அட்டாக் வருவதற்கு என்று சொல்லி சென்றார்.

மக்களே உடனே என்னை ஹார்ர்ட் இல்லா மனிதன் என்று நினைத்துவிட வேண்டாம். எனக்கு ஹார்ட் இருக்கிறது ஆனால் அதை என் மனைவி எடுத்து வைத்துள்ளாள் என்றுதான் சொல்ல வந்தேன்.
இதை வைத்து உடனே என் மனைவி என் மேல் பாசம் வைத்து இருக்கிறார் என்றும் நினைக்க வேண்டாம் அவள் எடுத்து வைத்தற்கு காரணம் பார்க்கும் பெண்களிடம் எல்லாம் மனசை பறி கொத்துவிடாதே என்பதால்தான்

இப்படி ஒரு மொக்கை பதிவா என்று கேட்டு உங்களுக்கு அட்டாக் வந்தால் இந்த கம்பெனி பொறுப்பு ஏற்காது

அன்புடன்
மதுரைத்தமிழன்.



12 comments:

  1. ஹஹஹஹ!! நண்பர் சொக்கனா இந்தப் பதிவில்....அப்போ பூரிக்கட்டை அடி வாங்குபவர்களுக்கு எல்லாம் ஹார்ட் அட்டாக் வராது என்று சொல்கின்றீர்களா....அய்யோ! அப்ப எல்லா மனைவிகளும் உஷார் ஆகிடுவாங்களே ! தமிழ் சினிமா செண்டிமென்ட் தாலி செண்டிமென்ட் தமிழா......"மதுரைத் தமிழன் சொல்ட்டாரு....அடி வாங்கினால் ஹார்ட் அட்டாக் வராதுநு. எனக்கு மாங்கல்யம் கடைசிவரை நிலைக்கணும்ங்க அதனால அதனால " அப்படினு சொல்லி பூரிக்கட்டை பறக்குமே!

    ReplyDelete
  2. ஆஹா,இன்னைக்கு நான் மாட்டிக்கிட்டேனா.

    எனக்கு ஒரு சந்தேகம், நான் தான் போன பதிவுல உங்க கவிதையை ஆராய்ச்சி பண்ணலையே,அப்புறம் எப்படி எனக்கு நீங்க டாக்டர் பட்டம் தந்திருக்கீங்க.

    மனைவியிடம் அடி வாங்குவதால் ஹார்ட் அட்டாக் வராது என்று சொல்லமுடியாது. உங்களைப் போல யார் எல்லாம் தன்னோட இதயத்தை மனைவியிடம் கொடுத்து வைத்திருக்கிறார்களோ அவர்களுக்கு கண்டிப்பாக ஹார்ட் அட்டாக் வராது.

    ReplyDelete

  3. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    தைப்பொங்கலா? சிறுகதைப் போட்டியா?
    http://eluththugal.blogspot.com/2015/01/blog-post.html
    படித்துப் பாருங்களேன்!

    ReplyDelete
  4. சொக்கன் சிறப்பான ஆலோசனைகள்தான் கொடுத்திருக்கார்! டாக்டர் பீஸ் கொடுத்தீங்களா ?

    ReplyDelete
  5. எனக்கு நிச்சயம் இதயம் இருக்கிறது ,முதல் வாக்கை போட்டு விட்டேன் ,அய்யகோ ,எவ்வளவோ அடிபட்டு நீங்க போட்ட பதிவை ஆதரிப்பார் இல்லையா :)

    ReplyDelete
  6. அருமையான ரசிக்க வைத்த சிரிக்க வைத்த பதிவு . இதில் என்ன ஒரு விசேஷம்னா, உங்க
    ளுக்கு இருக்கும் எல்லா அறிகுறியும் எனக்கும் இருக்கு.

    ReplyDelete
  7. ஐயோ..... இதயம் இல்லாதவரா நீங்கள்.....?

    ReplyDelete
  8. அட கடவுளே ஆனை தன் கையால மண்ணள்ளிப் போடுகிற மாதிரி இருக்கே. ம்..ம்..ம்..அடி வாங்க என்றே பிளான் பண்ணுவீங்களா.ம்.ம்.. நாம என்ன செய்ய முடியும் பார்த்து ரசிக்க வேண்டியது தான். ஹா ஹா ....

    ReplyDelete
  9. இதயம் உட்பட முழுதாக கொடுத்து விட்டீர்கள் என்று சொல்லுங்க...!

    ReplyDelete
  10. ஹா... ஹா... பதில்களில் எல்லாம் குசும்பு...
    அருமை...

    ReplyDelete
  11. இந்த சிம்ப்டம்ஸ் எனக்கும் இருக்கே... என்ன அங்கே பூரிக்கட்டை இங்க கிடைக்கும் எல்லாமும்... அவ்வவ்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.