Friday, April 17, 2015



சூடான தமிழகம் குளிர்ந்து போனதா?

ஏப்ரல் முதல் வாரத்தில் ஆந்திரவுக்கு மரம் வெட்ட சென்ற கூலி தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி பரவியதும்  தமிழக மக்கள் சூடாகினர் அதனால் சமுக வலைத்தளங்களும் அக்னி நட்சத்திர வெயில் போல சூடாகியது. அது மட்டுமல்ல அரசியல் கட்சிகளும் தங்கள் பங்குக்கு குரல் கொடுத்தனர்.

இப்படி சூடாகி போன தமிழகத்தை குளிர்விக்க ஆசிரியை ஒருவர் 10 ஆம் வகுப்பு மாணவர் உடன்  மறைந்து போனார் அப்படி போனவர் இவர்தா இன்று நெட்டில்  போட்டு ஒன்று கவர்ச்சிகரமாக ஒடியது. அதை பார்த்த வயதான ஆண்கள் நமக்கு  படிக்கும் போது இப்படி ஒரு சந்தர்ப்பம் வாய்க்கவில்லையே என்று பொருமிதான் போனார்கள் .. இன்றைய மாணவர்களும் இப்படிபட்ட ஆசிரியை நமக்கு வகுப்பு ஆசிரியையாக வரவில்லையே என்று ஏங்கிதான் போனார்கள். இதனால் 20 பேர் செத்த  விபரம் கொஞ்சம் அடங்கி போனது


அதன் பின் எலி பிடிப்பவர்கள் எல்லாம் விமர்சனம் செய்யவந்துவிட்டார்கள் என்று நடிக்க வந்த பெண் தன்னை ஒரு பெண் பெரியார் என்று நினைத்து அதிகப்பிரசங்கியாக பேச அதுவும் சமுக தளங்களில் இடம் பிடித்தது. இதனால் 20 பேர் செத்த  விபரம் மேலும் கொஞ்சம் அடங்கி போனது
.

இவ்வளவு நடந்தும்  20 பேர் செத்த  விபரம் பற்றி சிலர் பேசிக் கொண்டிருந்தனர்.

அதுவும் தப்புடா என்று நினைத்த தமிழக மக்கள் பகுத்தறிவு தந்தை என்று சொல்லப்படுபவரின் படத்தில் செருப்பால் அடிப்பதாக ஒரு படத்தையும் அதுக்கு எதிராக சிலர் கடவுள் படத்தின் மேல் சிறுநீர் கழிப்பது போலவும் போட்டோ இட்டு பிரச்சனையை திசை திருப்பினர்

அதன் பின் தர்மபுரியில் 5 மாணவர்கள் ஒரு பெண்ணை ப்ளாக் மெயில் செய்து பலத்காரம் செய்த செய்தியும் கொஞ்சம் பரப்பரப்பாக வந்ததும்

ஆனால் இது எல்லாத்தையும் தூக்கி சாப்பிடும் படியாக சென்னையில் ஒரு நிகழ்ச்சி நடந்தது அதுதாங்க கல்யாண் ஜுவல்லர்ஸ் திறப்புவிழா நிகழ்ச்சி நடந்தது அதில் கலந்து கொள்வதற்காக சிவாஜியின் தம்பியும் ரஜினியின் அண்ணனுமான அமிதாப்பும் தமிழகத்தின் மருமகளுமான ஐஸ்வர்யாராயும் வந்தனர்.

அதன் பின்  20 பேர் செத்த  விபரம் அந்த செத்தவர்களின் உயிரைப் போல அடங்கி போய்விட்டது.

டிஸ்கி : அப்படின்னா இறந்து போனவர்களுக்காக நீதி கிடைக்கும் வரை போராடியவர்களுக்கு சொல்ல விரும்புவது எல்லாம் நீதி எல்லாம் கிடைக்காதுப்பா நான் மேலே சொன்ன செய்திகள் மட்டும்தான் கிடைக்கும்...  சரி வேற எங்காவது தமிழர்கள் கொத்து கொத்தாக சாகும் போது நாம் நீதி கிடைக்க போராடுவோம் என்ன நான் சொலவது சரிதானே


அன்புடன்
மதுரைத்தமிழன்

7 comments:

  1. தமிழா...

    சூடானாதானே குளிருவதற்கு .. இவங்க தான் அனாலும் இல்லாமல் குளிரும் இல்லாமல் வாந்தி எடுத்து வைச்ச போல இருகாங்க..இருந்தாலும்.... ;)

    ReplyDelete
  2. Arumaiyaana analysis. I also thought the same when social media diverted from 20 people mass killing to actress Suhasini's comments.

    ReplyDelete
  3. மறதி ஒன்றுதான் தமிழர்களின் நிலையான சொத்து!

    ReplyDelete
  4. நாங்கள் சுனாமியையே மறந்தவங்களாக்கும்!

    ReplyDelete
  5. ஒரு நிகழ்வு வந்து மற்றொரு நிகழ்வினை மறக்கடித்துவிடுகிறது என்பதைவிட முக்கியமான நிகழ்வுகள் பின் தள்ளப்படுவது வேதனையானதாகும். நன்கு கூர்ந்து சிந்தித்து எழுதியுள்ளீர்கள்.

    ReplyDelete
  6. நடப்பு செய்திகளை நையாண்டிதனத்தொடு வடித்துள்ளீர்கள்.
    என்ன செய்வது தனிக்குடித்தனத்தில் சிக்கித் தவிக்கும் தமிழனுக்கு அன்றாடப் பொழுதை நர்த்துவதே பெரும் பாடு. இதில் எங்கே சூடாகி போராடுவது.
    த ம 2

    ReplyDelete
  7. மிசச் சரியான பதிவு! நம்ம ஊடகங்ககள் எப்போதுமே அந்த நேரத்திற்கு மட்டுமே கூக்குரல் போடும்..பின்னர் அவ்வளவுதான். ஒரு வேளை பாலச்சந்தரின் இருகோடுகள் தத்துவத்தைப் ஃபாலோ சசெய்றாங்க போல.!!!

    ஆனா எனன்ன்னா மிக் அமிக முக்கியமான, உடனடித் தீர்வுகள் வேண்டி நிற்கும் பிரச்சினைகள் கூட புறம் தள்ளிவிடஅப்படுகின்றன என்பதுதான்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.