Friday, September 25, 2015



கலைஞருக்கு எதிராக உள்குத்து செய்தி வெளியிடும் திமுகவின் ஆதரவு பத்திரிக்கை.

திமுகவின் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படாதுமான, திமுக ஆதரவு பத்திரிக்கையான விகடனில் வெளிவந்திருக்கும் செய்தி எனக்கு உள்குத்து பதிவாகவே தெரிகிறது.

ஸ்டாலினிக்கு எதிராக உள்குத்து செய்திகள் போடுவது போல ஸ்டாலினின் இணைய தள பிரச்சார குழுவின் சார்பில் விகடனில் வந்திருக்கும் செய்திதான் இது . இதன் மூலம் ஸ்டாலினுக்கு சாமானியனின் கேள்வி என்று சொல்லியவாரே கலைஞரை இடித்துரைக்கும் பதிவாகவே இது இருக்கிறது. பதிவின் ஆரம்பத்தில் கலைஞரை மறைமுகமாக உள்குத்து குத்திவிட்டு அதன் பின் ஸ்டாலினை கேள்விகள் கேட்பது போல தந்திரமாக செய்தி வடிக்கப்பட்டு இருக்கிறது.

இங்கு விகடனில் வந்த சிவப்புகலரில் கலரிட்ட வரிகளை படித்துவிட்டு   அதற்கு  நீலக் கலரில் வந்திருப்பது எனது வரிகளை படித்தாலே சாமன்ய மக்களுக்கு விகடனில் வந்த செய்தி வடிவமைப்பின் நோக்கம் புரியும்
Courtesy : Vikatan 


ஊர் ஊராக சுற்றும் ஸ்டாலினுக்கு சாமானியனின் சில கேள்விகள்! http://www.vikatan.com/news/article.php?aid=52853


வருங்கால தமிழக முதல்வராக கனவு காணும் அரசியல்வாதிகளில் உங்கள் கனவுதான் நனவாக வாய்ப்பு அதிகம்.( இதுக்கு பெயர்தான் எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை என்பது)

உத்தரபிரதேசத்தில் 45 வயதில் அகிலேஷ் யாதவ் முதல்வராகிறார். அங்கே அவரது தந்தைக்கு விட்டு கொடுக்கும் மனப்பான்மை இருக்கிறது. இங்கே உங்கள் தந்தைக்கு விட்டு கொடுக்கும் மனப்பான்மை இருக்கிறதோ இல்லையா உங்கள் தமையனுக்கு தட்டிக் கொடுக்கும் மனப்பக்குவம் நிச்சயமாக இல்லை. 'நமக்கு நாமே...' என்று ஊர் ஊராக சென்று மக்களை சந்திக்கும்  நீங்கள்' உங்கள் வீட்டில் இருந்து அதனை தொடங்குவதுதான் சரியானதாக இருக்கும்.

கடந்த ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த உங்களுக்கு, துணை முதல்வர் என்ற சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. நிச்சயமாக தமிழக வரலாற்றில் அப்படியொரு பதவி அதுவரை இருந்தது இல்லை. உங்களுக்காகவே அது உருவாக்கப்பட்டது.( அப்படி செய்த உங்கள் தந்தையால் உங்களை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க மனமில்லைபாருங்கள் என்று கலைஞரை கேள்வி கேட்பது போல அல்லவா இருக்கிறது) அந்த காலக்கட்டத்தில் உங்களுக்கு பின்னால் 100க்கும் மேற்பட்ட கார்கள் அணிவகுத்தன. அந்த சமயத்தில் உங்களது அணிவகுப்பை பார்த்தபோது ஜெயலலிதாவே மேல் என்ற எண்ணம் சாமானியனுக்கு எழாமல் இல்லை. (இதுக்கு பேருதான் இகழ்வது போல புகழ்வது)

இப்போது தேர்தல் என்றவுடன் மதுவிலக்கு என்கிறீர்கள். தமிழத்தில் 'டாஸ்மாக்' என்ற குழந்தையை பெற்றெடுத்தது அதிமுக அரசுதான் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அந்த குழந்தை வளர்ந்து ,இன்று வீதிக்கு வீதி வில்லனாக நின்று கொண்டிருக்கிறது. அதற்கு உங்கள் ஆட்சியும் ஒரு காரணம் என்பதை உங்களால் மறுத்து விட முடியுமா?( இங்கே உங்கள் ஆட்சியில் என்று சொல்லப்பட்டிருப்பது கலைஞர் ஆட்சியை அதற்கு காரணகர்த்தா ஸ்டாலின் இல்லை அவர் புனிதமானவர் என்று காண்பிக்கப்பட்டு இருக்கிறது)

தி.மு.க ஆட்சியின் போது, உங்களைச் சுற்றி ஒரு லாபி, உங்கள் தமையனை சுற்றி ஒரு கூட்டம், சகோதரியை சுற்றி ஒரு அணி என்றெல்லாம் இருந்ததே... இதையெல்லாம் உங்களால் கட்டுப்படுத்த முடியாமல் போனது ஏன்? கடந்த காலத்தில் உங்கள் கட்சி, ஆட்சியை இழந்ததற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது உங்கள் குடும்ப உறுப்பினர்கள்  மக்களிடையே சம்பாதித்த வெறுப்புணர்வு என்பதை உங்களால் மறந்து விட முடியுமா?( இதுக்கு பேருதான் உசுப்பு ஏற்றுவது  என்று மதுரைக்காரர்கள் கூறுவார்கள் ஆட்சியை இழந்தது சகோதரர் மற்றும் சகோதரியால்தான் (குடும்பதினரால்தான்) ஸ்டாலினால் இல்லை என்று மக்கள் மனதில்  விதையை விதைக்கிறார்களாம் இந்த செய்தி தயாரிப்பாளர்கள்)
உங்கள் கட்சியினர், மத்திய அமைச்சராக பதவி வகித்தவர்கள், உங்களுக்கு நெருக்கமான உறவினர்கள்  மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்குகள் நடந்து வருகிறது. இந்தியாவையே உலுக்கி போட்ட அந்த வழக்கு, உங்கள் வீட்டை மையமாக வைத்துதான் உருக்கொண்டது என்பது உங்களுக்கு தெரியதா?

'கோபப்படுங்கள்' என்று இப்போது விளம்பரத்தில் வருகிறீர்கள். அடுத்த முதல்வராக யாருக்கு வாய்ப்பு அதிகம் என்று உங்கள் உறவினர் பத்திரிகையில் வெளி வந்த கருத்துக்கணிப்புக்காக 3 அப்பாவி உயிர்கள் பலியானதே. அதற்கு உங்கள் பதில் என்ன?( இப்படி யாருவாது கேட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல சகோதரந்தான் என சொல்லி அவர் மீது சேற்றை வாரியிறைத்து நீங்கள் நல்ல பெயரை சம்பாதித்து கொள்ளுங்கள் என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார்கள் )

நீங்கள் 'நேர்மையானவர்' ( ஸ்டாலின் நேர்மையானவர் என்று மக்கள் மனதில் பதியவைக்கிறார்களாம் இந்த செய்தியாளர்கள் )என்றே வைத்துக் கொள்வோம். உங்கள் அமைச்சரவையில் இடம் பெற்றவர்களெல்லாம் கல்வித் தந்தையாக இப்போது திகழ, உங்கள் ஆட்சியும் ஒரு காரணம் என்பதையும் மறந்து விட முடியவில்லை.

உங்கள் ஆட்சியில் நடந்த விஷயங்களை விடுங்கள்.தமிழகத்தில் எதிர்க்கட்சியாக வேறு இருந்தாலும் உண்மையான எதிர்க்கட்சித் தலைவராக மக்கள் கருதுவது உங்களைத்தான்.(விஜயகாந்த் ஒரு டம்மீ பீஸ் என்று கிண்டல் அடித்து இருக்கிறார்கள் காமெடிக்காக) ஆனால் நீங்களும், துரைமுருகனும்  எந்த ஆக்கப்பூர்வமான செயலிலும் ஈடுபடாமல், வருவதும் போவதுமாகத்தானே இருந்தீர்கள் என்பதை மறுக்க முடியாதுதானே...( நீங்கள் இல்லாதபட்சத்தில் கலைஞரின் ஆதரவாளர் ஆன துரைமுருகன் ஆக்க பூர்வமாக என்ன செய்து கிழித்தார் என்று நக்கல் பண்ணி இருப்பது அப்பட்டமாக தெரிகிறது)

கடந்த 4 ஆண்டுகளாக மக்கள் குறைகளைத் தேடி நீங்கள் பயணிக்கவில்லை. இப்போது தேர்தல் நெருங்குகிறது. ராகுல்காந்தி போல வேடம் புனைகிறீர்கள்...உப்பளத் தொழிலாளியாக மாறுகிறீர்கள், மிகச் சாதாரண கடைகளில் டீ குடிக்கிறீர்கள், மரத்தடியில் அமர்ந்து சாதாரண மக்களிடையே உரையாடுகிறீர்கள். பார்க்கவே ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.(இப்படியே நடியுங்கள் அப்பதான் மக்களை ஏமாற்ற முடியும் என்று ஸ்டாலின் டீம் ஸ்டாலினுக்கு அட்வைஸ் பண்ணுகிறது ) உங்கள் ஆட்சியின் போது உங்கள் கட்சித் தொண்டர்களே உங்களை சாதாரணமாக அணுக முடியாத நிலை இருந்ததே. (கலைஞர் ஆட்சியில் சாமானியன் யாரும் கலைஞரை அணுகமுடியும் ஆனால் உங்களின் ஆதிக்கம் வந்தபோது சாமானியன் யாரும் உங்களை அணுக முடியாமல் இருக்கிறது அதை மாற்றினால் நல்லது என்று சொல்லாமல் சொல்லிகிறார்கள் உங்க இணையதள பிரச்சார குழு) ஒருவேளை அத்தகையை தவறுகளை களைந்து, இறங்கி வந்தால் ரொம்பவே சந்தோஷம். ராகுல் காந்திக்கு ஏற்பட்ட நிலை உங்களுக்கு ஏற்படாதிருக்கட்டும்.

  -இன்னமும் உங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கும் சாமானியன்( இங்கு சாமான்யன் என்று கையாளப்பட்டிருப்பது ஸ்டாலின் மருமகனும் அவரது குழுவினர்களை மட்டும் குறிக்கப்பட்டு இருக்கிறது)


அன்புடன்
கலைஞரிடம் அரசியல் பாடம் கற்ற
மதுரைத்தமிழன்

6 comments:

  1. ஏங்க மச்சான்
    அடங்க மாட்டீங்க போலருக்கே...
    பழனியப்பா பிரதர்ஸ் இதப் பார்த்தான் தமிழன் தமிழ் உரை ஒன்று கிடைக்கும் போல...
    தம +

    ReplyDelete
  2. உங்க பதிலோடு படித்தால்தான் விளங்குது
    அற்புதம்.பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நீங்க தானா அது,,,,,,
    இணைய தள,,,
    பகிர்வு அருமை.

    ReplyDelete
  4. ஆட்சியில் இருக்கும் போது சுகம் அனுபவிப்பதும் பின் வீதியில் நடிப்பதும் அரசியலில் சகஜம்))) வீட்டுக்குள்ளையே எதிரிகள் இருக்கும் போது முதல்வர் கனவு கானல் நீர்தான்.

    ReplyDelete
  5. தமிழக அரசியலை உங்களை போல தில்லாக எதிர்க்க யாராலும் முடியாது!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.