Friday, October 30, 2015



avargal unmaigal
தெய்வீக காதல் தெய்வீக வாழ்க்கையாய் மாறுவது இப்படிதான்


மதுரைத்தமிழன் வாழ்க்கை கல்யாணத்திற்கு முன்பும் பின்பும்

மதுரைத்தமிழன் கல்யாணத்திற்கு முன்பு காதலியை பார்க்க போகும் போதெல்லாம்  ஊதுபத்தி ,கற்பூரம், வாழைப்பழம், தேங்காய் ,பூ எல்லாம் வாங்கிட்டு போனாராம் அது ஏதற்கு என்று கேட்டவர்கள்கிட்ட என் காதல் தெய்வீக காதல் அதனால்தான் என்று சொல்லி திரிந்தாராம்


இப்ப எப்படி இருக்குதுன்னு அவரிடம் கேட்டா அப்படியே தலைகிழா மாறி தெய்வீக வாழ்க்கையாய் மாறிவிட்டது என்றார் .அது என்ன தெய்வீக வாழ்க்கை என்று கேட்டதற்கு

அது ஒன்றும் இல்லை. இப்ப என் மனைவி என்னை தெய்வமாக கருதி தினமும் பல வேளைகள் அர்ச்சனைகள்  செய்து, பூரிக்கட்டையால் பூஜையும் செய்துவிடுகிறார் என்கிறார்.

அதைதான் அந்த மதுரைத்தமிழன் தெய்வீக வாழ்க்கை என்று பெருமையாக சொல்லி திரிந்து கொண்டிருக்கிறார்.

ஹீஹீ (உங்க மைண்ட் வாய்ஸ் :  எப்படிதான் இப்படி எல்லாம் இந்த மதுரைத்தமிழன் அடிவாங்குவதையும் திட்டு வாங்குவதையும் அழகாக பூசி மொழுகுகிறான் என்றுதானே நீனைக்கிறீர்கள் )

இப்படி என் தெய்வீக காதல் மற்றும் மணவாழ்க்கையை பற்றி  திண்டுக்கல் தனபாலனிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் , காதலித்த பெண்ணை கல்யாணம் பண்ணுகிறவன் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்துகிறான். அது போல கல்யாணம் ஆனவளை காதலிப்பவன் மிக மிக மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்துகிறான் என்றார். அதை கேட்ட நான் தனபாலன் நீங்கள் சொன்னால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும். அதனால் கல்யாணம் ஆன பெண் யாரும் இருந்தால் சொல்லுங்க... நான் மிக மிக மகிழ்ச்சியாக இருக்கணும் என்று சொன்னேன். அதற்கு அவர் பக்கத்தில் இருந்த கல்லை தூக்கி என்னை அடித்துவிட்டு உங்களிடம் சேர்ந்து இருந்தால் நானும் கெட்டுப் போய்விடுவேன் என்று சொல்லி பறந்துவிட்டார்,

எதற்கு  அவர் அப்படி பறந்து போனார் என்று யோசித்த போதுதான்,  காதலித்து கல்யாணம் செய்த பெண்ணை கல்யாணம் ஆன பின்னும் காதலிப்பவன் தான் மிக மிக மகிழ்ச்சியாக இருப்பான் என்று அவர் சொல்ல வந்தது புரிந்தது.

இப்ப போய் அவரிடம் நான் ட்யூப் லைட் மாதிரி கொஞ்சம் மெதுவாகத்தான் நான் எல்லாத்தையும் புரிஞ்சுக்குவேன் என்று சொன்னால் அவர் என்ன நம்பவா போகிறார்.

அன்புடன்
மதுரைதமிழன்

8 comments:

  1. என்னய்யா ? நக்கலா ? காதலாவது கத்திரிக்காயாவது. கண்ணாலம்ன்னு ஒன்னு ஆய்ட்டா.. அப்புறம் எல்லாருக்கும் ஒரே ட்ரீட்மெண்ட்தான். உள்காயமா .வெளிகாயமா.. அதுமட்டும் தான் வித்தியாசம்.

    ReplyDelete
  2. ஹஹஹஹ வயிறு வீங்கிவிட்டது தமிழா....

    தலைப்பைப் பார்த்ததுமே ஏதோ வில்லங்கம் இருக்கே என்று நினைத்து வந்ததை நீங்கள் ஏமாற்றவில்லை...

    உங்கள் மைன்ட் வாய்ஸ் சத்தியமா எங்க மைன்ட்ல வந்துச்சுன்னு சொன்னா நீங்க நம்பவா போறீங்க..ஹும் இருந்தாலும் சொல்லுறோம்..

    கடைசில சிவப்பு மையில எழுதிருக்கீங்க பாருங்க "அது!!! " திண்டுக்கல்லாரை லேட்டாகப் புரிஞ்சுக்கிட்டதுக்கு உங்க வீட்டுல பூரிக்கட்டை பறக்குதாமே....

    ReplyDelete
  3. ட்ரீட்மெண்ட் இப்போது சரியாக கொடுப்பதில்லை போல..

    ReplyDelete
  4. தெய்வீக காதலுக்கும் தெய்வீக வாழ்க்கைக்கும் சொன்ன ஒப்புமை அட்டகாசம்!

    ReplyDelete
  5. தங்களின் காதல் அனுபவமும் கல்யாணத்திற்கு பிந்திய அனுபவமும் படிக்க நன்றாக இருக்கிறது. தொடருங்கள்!

    ReplyDelete
  6. அவரு நம்புராரோ இல்லையோ நான் நம்பிட்டேன்!!!!!!!

    ReplyDelete
  7. இவரு ரொம்ப நல்லவரா இருக்ககாறே? ஆங்

    ReplyDelete
  8. ஹா.ஹா.... ரசித்தேன் மதுரைத் தமிழா..

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.