Saturday, October 10, 2015



ஆச்சி மனோரம்மாவிற்கு மணிமண்டபம் கட்டப்படுமா அல்லது நடிகர் சங்க கட்டிடத்திற்கு அவர் பெயர் வைக்கப்படுமா?


ஜில்ஜில் ரமாமணி  என்று அழைக்கப்பட்ட  ஆச்சி மனோரம்மா இன்று காலமானார். மனோரமா  தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார்.  நடித்த திரைப் படங்களின் எண்ணிக்கை 1,300 -க்கு மேல். இதனால் `கின்னஸ்’ உலக சாதனையாளர் பட்டியலில் இடம்பெற்றார் .மனோரமா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் என ஆறு மொழிகளில் நடித்திருக்கிறார். எவ்வளவு பக்க வசனம் என்றாலும் ஒருமுறை சொல்லிக் காட்டினாலே பேசிவிடக் கூடிய வித்தகி!


இவர் தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர். அண்ணாதுரை, மு.கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். இது தவிர ஜெயலலிதா ஜெயராம் மற்றும் எம்.ஜி.இராமச்சந்திரன் இவருடன் தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும் என். டி. ராமராவ் தெலுங்கு படங்களில் இவருடன் நடித்திருக்கிறார்.

1952 -ல் மேடை ஏற்றப்பட்ட `யார் மகன் நாடகம்தான் ஆரம்பம். `அந்தமான் கைதி’ மனோரமா நடித்த புகழ்பெற்ற நாடகம், நடித்த நாடகங்கள் சுமார் 5,000-க்கும் மேல்! அறிஞர் அண்ணா எழுதிய `வேலைக்காரி நாடகத்திலும், அவரோடு `சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்’, `ஓர் இரவு’ நாடகங்களிலும் நடித்திருக்கிறார். தமிழக முதல்வர் கருணாநிதி எழுதிய `உதயசூரியன்’ நாடகத்தில் கருணாநிதி கதாநாயகனாகவும் மனோரமா கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்கள்!

பழம் பெறும் நடிகரில் ஆரம்பித்து இன்றைய இளம் நடிகர்கள் வரை மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்த ஓரே தமிழ்க் கலைஞர் இவர்தான்.


 நடிகர் சிவாஜியின் நடிப்புக்கு இணையாக நடிப்பு திறமை பெற்றவர் மனோரம்மா. அப்ப்டி இருக்கையில் நடிகர் சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டப்படும்போது நடிகை மனோரம்மாவிற்கும் மணிமண்டபம் கட்டப்படுவதும் அவசியம்தானே. அப்படி செய்ய தமிழக அரசு முடிவு எடுக்குமா?அப்படி செய்யவில்லை என்றால் தமிழக அரசு(அதிமுக) ஒரு ஜாதியினரை கவர மட்டுமே செய்த செயலாகத்தானே இருக்கும்.


ஒரு வேளை தமிழக அரசு மணிமண்டபம் கட்ட அனுமதி அளிக்கவில்லை  என்றால் தென் இந்திய திரைப்பட நடிகற் சங்கம் கட்டும் சங்க கட்டிடத்திற்கு மனோரம்மா பெயர் வைத்தாவது கெளரவிக்குமா?

மணிமண்டபமா அல்லது சங்க கட்டிடத்திற்கு மனோரம்மா பெயரா? யார் என்ன செய்யப் போகிறார்கள் என்று பொருத்து இருந்து பார்ப்போம்




மனோரம்மா ஆத்மா சாந்தி அடைய அனைவரும் வேண்டிக் கொள்வோம்..மனோரம்மா நம்மைவிட்டு மறைந்தாலும் அவர் நினைவுகள் நம்மை விட்டு மறையப்போவதில்லை


அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments:

  1. துயர் பகிருகிறேன்

    ReplyDelete
  2. அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்,

    ReplyDelete
  3. அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

    ReplyDelete
  4. சிறந்த நடிகை! ஆழ்ந்த இரங்கல்கள்!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.