உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, July 31, 2015

சபதத்தை நிறைவேற்றிய தமிழக தலைவர்கள்

கலாமின் இறுதி சடங்கிற்கு ஏன் செல்லவில்லை தமிழக தலைவர்கள் சொல்லாமல் சொல்லும் காரணம்




மக்களுக்கு  தங்களைப் போல  நல்ல விதைகளை விதைக்காமல் கெட்ட பழக்கங்களை விதைத்து சென்ற அப்துல் கலாமே நீ செத்தாலும் உன்னை வந்து பார்க்கமாட்டோம் என்று சொன்னபடி சபதத்தை நிறைவேற்றிய தமிழக தலைவர்கள் இவர்கள்தான்


டிஸ்கி :மோடி செல்பி எடுக்காத ஒரே நிகழ்ச்சி கலாமின் இறுதி சடங்கின் போதுதான்


அன்புடன்
மதுரைத்தமிழன்

Wednesday, July 29, 2015

உங்கள் பதிவை அனைவரும் பார்க்க படிக்க செய்வது எப்படி?



உங்கள் பதிவை அனைவரும் பார்க்க படிக்க செய்வது எப்படி?

பழம் பெரும் பதிவர்களில் இருந்து புதிதாக வந்து பதிவு எழுதும் பதிவர்கள் வரை தினமும் பதிவுகள் எழுதி வெளியிடுகின்றனர். அப்படி எழுதும் ஒவ்வொருவருக்கும் ஒரு ஆசை இருக்கும். அதுதான் தான் எழுதிய பதிவுகள் அனைவராலும் படிக்கப் பட வேண்டும் என்பதுதான். அப்படி நினைப்பது தவறா என்று பார்த்தால் அது தவறில்லைதான் என்று நினைக்க தோன்றும். அப்படி நினப்பதும் ஒரு இயல்பான விஷயம்தானே .

Tuesday, July 28, 2015

டீச்சர் அடித்த கதை....... (குமுதத்தில் ஒரு பக்க கதை )



டீச்சர் அடித்த கதை....... (குமுதத்தில்               ஒரு பக்க கதை )

என்னங்க அந்த டீச்சரை சும்மாவிடக் கூடாதுங்க.. அவங்க மானத்தை வாங்கணுமுங்க ஆமாம்டி அந்த டீச்சருக்கு என்ன துணிச்சல் நம்ம பையனை அடிச்சு இருக்காங்க. நானும் இதை இப்படியே விடப் போவாதில்லை. என் நண்பர்களுக்கு இப்பவே போனை போட்டு அவர்களுடன் ஸ்கூலுக்கு போய் நியாயம் கேட்கப் போறேன் என்று சொல்லி நண்பர்களுக்கு போனை போட்டு நடந்த விஷயத்தை சொல்லி நாளை ஸ்கூலுக்கு வருமாறு சொல்லிவிட்டு படுக்கச் சென்றான்

Monday, July 27, 2015

அப்துல் கலாமை கெளரவிக்க தமிழக அரசு இதையாவது செய்யுமா?




avargal unmaigal
அப்துல் கலாமை கெளரவிக்க தமிழக அரசு இதையாவது செய்யுமா?

இந்தியர்களிடையே கனவை விதைத்த அப்துல்கலாம் மறைவு



avargal unmaigal
அப்துல் கலாம் மறைவு இந்திய மாணவர்களுக்கு பெரும் இழப்பு

முன்னாள் ஜனாதிபதியும் இந்திய விஞ்ஞானியுமான அப்துல் கலாம் Indian Institute of Management உரையாற்றிய போது மயங்கி விழுந்தார் அதன் பின் ஹாஸ்பிடலுக்கு சிகிச்சைக்காக எடுத்து சென்ற போது அவர் இவ்வுலகைவிட்டு மறைந்தார். அவரின் ஆத்மா சாந்தி அடைய நாம் பிரார்த்திப்பதைவிட வேறு ஒன்றும் நம்மால் செய்ய இயலாது. அவரின் இழப்பு இந்தியர்களுக்கு அதிலும் குறிப்பாக மாணவர்களுக்கு பெரும் இழப்புதான்

இந்திய பாராளுமன்றத்தின் எழுதப்படாத விதி முறைகள்



இந்திய பாராளுமன்றத்தின் எழுதப்படாத விதி முறைகள்

இந்திய பாராளுமன்றத்திற்கு வரும் தலைவர்கள் மற்றும் எம்பிக்கள் ஆரோக்கியமான வாத விவதாங்களில் ஈடுபடக் கூடாது. அவர்கள் அனைவரும் முதலில் வருகைக்கான பதிவேடுகளில் கையெழுத்து இட்ட பின் கூட்டம் ஆரம்பித்த பின் மேஜைகளை தட்ட வேண்டும் கத்தி கூச்சல் எழுப்ப வேண்டும் அதன் பின் சபை ஒத்தி வைக்கப்பட்ட பின்  அங்குள்ள கேண்டின்களில் மலிவு விலை உணவுகளை சாப்பிட்டு விட்டு  தங்களுக்கு வேண்டிய பெர்சன்ல் பேரங்களில் ஈடுபட்டு செல்ல வேண்டும்..

அன்புடன்
மதுரைத்தமிழன்

Sunday, July 26, 2015

ஜெஸிக்காவை வைத்து 'எமோஷனல்' நாடகமாடும் விஜய்டிவி



ஜெஸிக்காவை வைத்து எமோஷனல் நாடகமாடும் விஜய்டிவி

விஜய் டிவி நிறுவனத்தினருக்கு தமிழக தமிழர்களை விட புலம் பெயர்ந்து மேலை நாடுகளில் வாழும் இலங்கை தமிழர்களை மிக ரொம்ப பிடிக்கும் காரணம் அவர்களை போல இளிச்சவாய் தமிழர்கள் யாரும் கிடையாது. அதனால்தான் கனடா யுரோப்பா நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி அவர்கள் உழைத்து சம்பாதிக்கும் பணத்தை எளிதாக ஏமாற்றி பறித்து கொள்வார்கள். இதற்காகவே இப்போது இவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் யாரவது ஒரு இலங்கை தமிழர்களின் குழந்தைகளை சேர்த்து கொள்வார்கள்.

Friday, July 24, 2015

ஷர்மிலி மிஸ் அடிக்காதீங்க மிஸ்



ஷர்மிலி மிஸ் அடிக்காதீங்க மிஸ்

நண்பர் ஸ்கூல் பையன் சில நாட்களுக்கு முன்னால்  தனது சொந்த அனுபவத்தை  அடிப்படையாகக் கொண்டு ஒரு பதிவை சிறுகதை போல அற்புதமாக எழுதி இருந்தார். எப்போதுமே கலாய்த்து கருத்துகளை இடும் நான் அந்த கதையை படித்ததும்  உண்மையில் நெஞ்சம் நெகிழந்தது அதனால் அவரை பாராட்டி சென்றேன் அந்த கதையை படித்த நண்பர் முரளியின்  மனதில் அந்த கதை  ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி பல்வேறு எண்ண அலைகளை அவர் மனதில் ஏற்படுத்தியதன் விளைவாக இன்னொரு கற்பனை முடிவை கதையாக எழுதிவெளியிட்டார் அதை படித்த நான் இதே கதையை பலர் படித்து அதை  அவரவர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப ஒரு முடிவை எழுதிவிட்டால் நன்றாக இருக்குமே என்று சொல்லி அதை தொடராக எழுதி சில பேர்களுக்கு வேண்டு கோளை விடுவித்தேன் என் வேண்டு கோளுக்குகிணங்க கடமை கண்ணியம் கட்டுபாடு என்று கொள்கையை வாழ்க்கையில் கடை பிடித்து மதுரைத்தமிழனுக்கு இணையாக காலய்க்கும் காலாய்க்கும்  பள்ளி ஆசிரியரான நம்ம சகோ மைதிலி  எனது வேண்டு கோளுக்கிணங்க அந்த கதை முடிவை மிக  அற்புதமாக எழுதி வெளியிட்டு இருக்கிறார்.அதுமட்டுமல்லாமல நம்ம வாத்தியார் கணேஸும்  வழக்கமாக தனது நகைச்சுவை பாணியிலும் மற்றும் சகோ கிரேஸும் தனது பாணியில் எழுதி வெளியிட்டு இருக்கிறார்

Thursday, July 23, 2015

அரசியல் களம் : அனைத்து அரசியல் கட்சிகள் பற்றிய நையாண்டித்தனம்.



avargal unmaigal
அரசியல் களம் : அனைத்து அரசியல் கட்சிகள் பற்றிய நையாண்டித்தனம்.

          கிண்டல் கேலிகள் இங்கு மிக மலிவாக கிடைக்கும்.


Tuesday, July 21, 2015

நீங்க பண்ணுவது தப்பா தப்பு இல்லையா என்பதை அறிந்து கொள்ள இதைப்படிங்க



நீங்க பண்ணுவது தப்பா தப்பு இல்லையா என்பதை அறிந்து கொள்ள இதைப்படிங்க


சாப்பிடுவது தப்பு அல்ல ஆனால் அளவிற்கு அதிகமாக சாப்பிடுவது தப்பு
விளையாடுவது தப்பு இல்லை ஆனால் படிக்காமல் இருப்பதுதான் தப்பு.
ஊரு சுற்றுவதுதப்பு அல்ல ஆனால் வேலைக்கு போகாமல் ஊர் சுற்றுவதுதான் தப்பு
காதலிப்பது தப்பு அல்ல ஆனால் காதலித்தவளை கல்யாணம் பண்ணாமல் இருப்பதுதான் தப்பு

Monday, July 20, 2015

வலியின் வேதனையிலும் டுவிட்டரில் நான் படித்து ரசித்தவை



வலியின் வேதனையிலும்  டுவிட்டரில் நான் படித்து ரசித்தவை

முதலில் நான் இட்ட டுவிட்ஸும் ஸ்டேடஸும் அதன் பின்னால் நான் படித்து ரசித்தவையும்

@மதுரைத்தமிழன் அடுத்த சாதிக்கார பையன் வேண்டாமுன்னு சொல்லுறவங்க தனக்கு ரத்தம் தேவைப்படும் போது தங்க சாதிக்காரன் ரத்தம் இருந்தா மட்டும் ஏத்துங்கன்னு சொல்ல கெத்து வேணும்

@மதுரைதமிழன் சாதி சாதின்னு அடிச்சுகிறவங்க அடுத்த சாதிக்காரன் கிழேமட்டும் வேலை செய்யலாமா என்ன?

Sunday, July 19, 2015

உங்கள் குழந்தை இன்ஸ்பயர்' விருதுக்கு விண்ணப்பித்துவிட்டனரா? ( ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் கவனத்திற்கு )



உங்கள் குழந்தை இன்ஸ்பயர்' விருதுக்கு விண்ணப்பித்துவிட்டனரா? ( ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் கவனத்திற்கு ) Innovation in Science Pursuit for Inspired Research


இன்ஸ்பயர்' Innovation in Science Pursuit for Inspired Research (INSPIRE) மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இந்திய பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை துாண்டுவதோடு அதனை வெளிக்கொணர்ந்து அவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் வண்ணம்  அறிவியல் ஆய்வு விருதை வழங்குகிறது

அரசியல் சமுகதளங்களில் மிக சிறந்த வரவேற்பு பெற்ற போட்டோடூன்கள்




avargal unmaigal

அரசியல் சமுகதளங்களில் மிக சிறந்த வரவேற்பு பெற்ற  போட்டோடூன்கள்



கடந்த வாரத்தில் அரசியல் சமுகதளங்களில் எனது போட்டோடூன் மிக சிறந்த வரவேற்பை பெற்று இருக்கிறது. அது உங்களின் பார்வைக்காக இங்கே பதியப்படுகிறது.அதுதோடு அரசியல் தளங்களில் மிக சிறந்த வரவேற்பை மற்றவர்களால் இடப்பட்ட கார்டூன் களும் உங்கள் பார்வைக்காக

avargal unmaigal


avargal unmaigal


avargal unmaigal


avargal unmaigalavargal unmaigal


 ---------------------------------------------------
avargal unmaigal


avargal unmaigal
அன்புமணி பண்ணுற காமெடி எல்லாம் விஜயகாந்த களம் இறங்குகிற வரைக்கும்தான் அவர் இறங்கிட்டா அன்புமணி காமெடிக்கு கூட லாயக்கு இல்லாம போய்டுவார்,

அன்புமணியை முதல்வர் ஆக்குவதே இலக்கு என பா.ம.க., பொதுக்குழுவில் தீர்மானம்.!
ஆனால் பொதுமக்களின் தீர்மானத்தை வைத்துதான் முதல்வர் ஆக முடியும் என்று இந்த கட்சிகாரர்களுக்கு இன்னும் கூட புரியவில்லையே


டிஸ்கி : எனது தளத்தில் எப்போதும் கட்சிபாகுபாடுகள் இன்றி கால ஒட்டத்திற்கு மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்ற அரசியல் நையாண்டி பதிவுகள் மற்றும் போட்டோடூன்களும் வருவதை எல்லா கட்சியினரும் அறிவார்கள். அதைபடிக்கும் சிலர் அதை பார்த்து ரசித்து சிரித்து செல்வார்கள். யாரும் இதுவரை தரக் குறைவாக கருத்துகள் இட்டதில்லை .ஆனால்  முதன் முறையாக தன்னை  வருங்கால சிஎம் என்று அறிவித்து கொண்ட அன்புமணி கட்சியினர் நான் இடும் போட்டோடூன்களை புரிந்தது கொள்ள கூட முடியாத அறிவிலிகளாக இருந்து தரக் குறைவாக கருத்துகளை இட்டு தங்களின் தரத்தை வெளியுலகுக்கு காட்டி கொண்டிருக்கின்றனர். அவர்கள் அப்படி தரக் குறைவாக இடும் கருத்துகளை கண்டு நான் பதிவுகள் போடாமல் பயந்து விலகிவிடுவேன் என்று நினைத்துவிட்டார்கள் போல .....பாவம் அவர்கள்... அவர்கள் மரங்களை வெட்டலாம் மனிதர்களை வெட்டலாம் ஆனால் இந்த மதுரைத்தமிழனின் சிறு ஹேரை கூட அவர்கள் வெட்ட இயலாது என்பதை தெரிவித்து கொள்கிறேன்



அன்புடன்
மதுரைத்தமிழன்

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog