Friday, February 19, 2016



avargal unmaigal
தானத்தில் கர்ணணையும் மிஞ்சிய இளைஞர் 


இதிகாச கதைகளில் தானத்தில் சிறந்தவர் கர்ணன் என்றே குறிப்பிடபட்டு வந்து இருக்கிறது. ஆனால் அதை மாற்றி எழுத வேண்டிய சூழ்நிலை இப்பொழுது எழுந்திருக்கிறது என்பது கண்கூடா கண்ட உண்மை.கர்ணன் வாழ்ந்த காலத்தில் தன்னுயிர் காக்கும் கவச குண்டலங்கள் உட்பட, தான்செய்த புண்ணியங்கள் அனைத்தையும் தானம் கொடுத்தவன். தானத்திற்கே பெயர் பெற்றவன். தானம் என்றால் என்ன என்பதை உலகிற்கு காட்டியவன்.  ஆனால்  ஹரிஷ் என்பவர் பெங்களூரு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் தன் உடல் 2 துண்டுகளான நிலையிலும் வேறு எதைப்பற்றியும் சிந்திக்காமல் தனது உடல் உறுப்புகளை தானம் செய்ய உதவுங்கள் என சுற்றியிருந்தவர்களிடம் கோரியுள்ளார்
 



தன் உயிர் போகும் என்ற நிலையிலும் யாரையும் அந்த விபத்திற்காக சாபிக்காமல் இந்த எண்ணம் அவர் மனதில் ஊறியிருந்திருக்க வேண்டும் என்றால் அவர் பெற்றோர்கள் வளர்த்த முறையும் இவர் தான் படித்து அறிந்து வளர்ந்த முறையையும்தான் சொல்ல வேண்டும்.

 நாம் சில சமயங்களில் யாருக்காவது சிறு உதவி செய்துவிட்டு பெருமை கொள்வோம். ஏன் சில சமயங்களில் அதை நினைத்து கர்வம் கூட தலைக்கு ஏறும். அது போல சமுதாயத்திற்கு சேவை செய்ய வருகிறோம் என்று சொல்லிவிட்டு சமுக சொத்துக்களை கொள்ளையடித்து தமது வருங்கலா வாரிசுகளுக்கு பரம்பரை பரம்பரையா சொத்துகளை சேகரித்து அள்ளி குவித்து கொண்டு பொதுமக்களுக்கு செய்ய வேண்டியவைகளில் சிலவற்றை செய்து கொண்டு தாம்தான் இந்த சமுகத்தை காப்பாற்ற வந்த தலைவர்களாக கர்வம் கொண்டு ஏன் தங்களை கடவுளின் அவதாரமாகவே நினைத்து வாழும் நம் தலைவர்களுக்கிடையே இறக்கும் தருவாயில் கூட தன குடும்பத்தை பற்றி நினைக்காமல் பிற மக்களை பற்றி நினைத்த இந்த மாமனிதரைப் ஹரிசை பற்றி வேறுஎன்னதான் சொல்ல முடியும் அல்லது எழுத்தான் முடியும்.


இவர் இம்மண்ணை விட்டு மறைந்தாலும் இவரின் நல்ல எண்ணம் இம்மண்ணில் என்றென்றும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கும்...... என்ன தவம் செய்தனரோ இவரை மகனாக பெற்றதற்கு .................

 
avargal unmaigal
இந்த நிகழ்வு நடந்த அந்த இளைஞர்  வலியால் கதறி அழுத சமயத்தில்தான்  சில கேவலமான பிறவிகள்    அந்த நிகழ்வை போட்டோ பிடித்து வீடியோ எடுத்து கொண்டு இருந்தனரே தவிர உதவ முன் வரவில்லை. இந்த மாதிரியான சமயத்தில் நம்மால் வேறு ஒன்றும் செய்ய முடியாதுதான் ஆனால் அந்த நிகழ்வை முகநூல் அல்லது வாட்ஸ் அப்பில் வீடியோவை போட்டு "லைக்" பெறுவதில் தான் குறியாக இருப்பது சரியான செயலா. இப்படிதான் நம் குடும்பத்தில் யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டால் நாம் இப்படிதான் வீடியோ எடுத்து பேஸ்புக்கிலும் வாட்ஸ் அப்பிலும் போட்டு லைக் பெறுவோமா என்ன? இந்த வீடியோவை பார்க்க்கும் நமக்ககே இப்படி மனம் பதைபதைக்கிறதே அப்படியானால் அதை பார்க்கும் அந்த குடும்பத்திற்கு எப்படி இருக்கும் பாவிகளே கொஞ்சமாவது சிந்திக்கிறீர்களா?



இறுதியாக நம் தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள் இவரின் இறந்த நாளை தேசிய உடல் உறுப்பு தான நாளாக அறிவிக்க வேண்டும். அதற்காவது நீங்கள் சிறு முயற்சியை செய்வீர்களா? இவர் தமிழர் அல்லதான் ஆனால் இவர் ஒரு இந்தியர். அதனால் இவரின் நற்செயலை நாம் முன்னிலைபடுத்த வேண்டும். அது போல இந்தியாவில் இதுவரை யாருக்கும் தராத மிக உயரிய விருதை இவருக்கு வழங்கி இப்படி ஒரு நல்ல நிலையில் வளர்த்த அவரின் பெற்றோர்களை கவுரவப்படுத்த வேண்டும். இதை செய்யுமா நம் அரசாங்கம் அல்லது மோடி அரசாங்கம்


மிக வேதனையுடனும் கண்ணிருடனும்
மதுரைத்தமிழன்

டிஸ்கி: பீப் பாடலுக்கும் பாலாவின் கார்டுனுக்கும் பொங்கி எழுந்து பேஸ்புக்கில் கருத்துகளால் நிரப்பிய பெண்கள் இந்த இளைஞனை பாராட்டி பதிவு எழுதாமல் அமுங்கி கிடப்பதன் ரகசியம்தான் என்ன?

8 comments:

  1. செய்திகளில் வாசித்தேன்...
    தன்னோட உடல் துண்டாகி கிடந்த நிலையில் மற்றவருக்கு உதவ் நினைத்த கலியுக கர்ணனின் ஆத்மா சாந்தியடையட்டும்...

    ReplyDelete
  2. உண்மையான ஆதங்கம் ! நீங்கல் எழுதியிருப்பதே தோன்ரியது இந்த செய்தியைப்படித்தப்போது ! சற்று உரையவும் செய்தது அவர் செயல் ! மகத்தான செயல் , வையத்துள் அவர் வாழ்கிறார் !

    ReplyDelete
  3. நிச்சயமாக
    இந்த மாபெரும் வள்ளலின் நினைவையும்
    இந்த நாளையும் என்றும் நினைவுகூறத் தக்க
    நாளாக ஆக்க இது ஒன்றுதான் சிறந்த வழி

    ReplyDelete
  4. இப்படியும் ஒரு மனிதரா
    வியப்பாக இருக்கிறது நண்பரே
    இவர்போன்றோர் எல்லாம் இப்படி இறந்து போனால்,,,,

    ReplyDelete
  5. நெகிழ்வான பதிவு...உங்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படவேண்டியது....இவர்கள் கூட்டணிக்கனவுகளில் இருக்கிறார்கள்...நிச்சயம் இதனைப்பகிர்வோம்...

    ReplyDelete
  6. நேற்று இதை கண்டவுடன் மனதே சரியில்லை...

    கடந்து போகும் கார் ...

    சே...

    ReplyDelete
  7. மனம் தொட்ட இளைஞர்.

    அவர் இறக்கும் போதும் நற்செயல் புரிய, சுற்றி இருப்பவர்களோ செல்ஃபி எடுப்பதில் மும்மரமாயிந்தது கேவலம்...

    ReplyDelete
  8. மாபெரும் வள்ளல்! மனதை நெகிழவைத்துவிட்டார் ஹரிஷ். ச்சே என்ன ஜனங்கள். புகைப்படமும், வீடியோவும் இறக்கும் தருவாயில் ஓர் உயிர் இருக்கும் போது..கேடுகெட்ட ஜனங்கள். ஹரிஷ் வாழ்கிறார் இறந்த பிறகும்.!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.