Thursday, September 15, 2016




கேளுங்க நல்லா  கேளுங்க நாக்கை புடுங்கிற மாதிரி கேளுங்க


தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் வணிகர் நடத்தும் பந்திற்கு கலைஞர் ஆதரவாம், இனி விளங்கினால் போலத்தான் ஹும்ம்ம்ம்



அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு கருணாநிதி வலியுறுத்தல்
ஆமாங்கய்யா அப்படியே அம்மா கூட்டினாலும் நீங்க போய் நல்ல ஐடியாவாக சொல்லிடுவீங்க அதை கேட்ட அம்மாவும் நீங்க சொன்னதை அப்படியே கேட்டு செய்துடப் போறாங்க?இப்படி லோலோன்னு கத்துவதற்கு பதிலாக நடிகர்கள் சங்க தலைவர்கள் சொன்னது போல நீங்களும் காவிரி பிரச்சனை சார்பாக அம்மா எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் ஆதரவு என்று சொல்லிட்டு போங்களேன்

கன்னட வெறியர்கள் அப்பாவித் தமிழர்களை தாக்குவதற்கு பதிலடியாக அப்பாவி கன்னடர்களை தாக்குவதே தமிழுணர்வு என்பவர்களே..ஆண்மை என்பவர்களே உண்மையில் உங்களுக்கு ஆண்மை இருந்தால் கர்நாடகாவிற்கு போய் கன்னடர்களை தாக்க வேண்டாம் அல்லது அப்பாவி கன்னடர்களை தாக்க வேண்டாம் அதற்கு  பதிலாக தமிழகத்தில் வாழும் சூப்பர் ஸ்டாரின் வீட்டை நோக்கி ஒரு சிறு கல்லையாவது  எறிய உங்களுக்கு ஆண்மை உண்டா?


காவேரி விசயத்தில் ரஜினிகாந்த் தலையிட வேண்டும்.-தமிழிசை 
ஆமாம் ரஜினிகாந்த சார் இந்த காவிரி பிரச்சனையில் தலையிடுவதற்கு முன்பு மோடியின் குடும்ப பிரச்சனையில் தலையிட்டு மோடியையும் அவரது மனைவியையும் ஒன்றாக சேருங்கள். இல்லையென்றால் நீங்கள் பிரதமாராக ஆகிவிடுங்கள்

16ம் தேதி போராட்டத்திற்கு பாஜக ஆதரவு அளிக்காது#தமிழிசை
கன்னட போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்து வளர்த்த இவர்களிடம் இருந்து ஆதரவையா நாம் எதிர் பார்க்க முடியும்

காவிரி தண்ணீர் பிரச்சனையில் முதல்வர் தலையிடாமல் எங்கே இருக்கிறார் என பலர் கேட்கிறார்கள் அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வதெல்லாம் அம்மா காவிரி  பிரச்சனையில் தலையிடப் போய் அதனால டாஸ்மாக் தண்ணி பிரச்சனைக்கு தட்டுபாடு வந்துருச்சுன்னா என்ன பண்ணுகிறது என்பதால் தமிழகத்திற்கு வருமானம் தரக் கூடிய தண்ணியில் கவனம் செலுத்தி கொண்டு இருக்கிறார் பாவம் காவிரி பிரச்சனையை எல்லாம் கவனிக்க அவருக்கு எங்க நேரம் இருக்கிறது

அதிமுகவில் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிய விரும்புவோர் வருகிற 16 ஆம் தேதி முதல் விண்ணபிக்கலாம் ஜெயலலிதா அறிவிப்பு
அந்த அம்மாவிற்கு இருக்கும் தைரியத்தை பாராட்டுவதா அல்லது தமிழர்களின் முட்டாள் தனத்தை எண்ணி வெட்கப்படுவதா  ஒன்றுமே புரியவில்லை. இவ்வளவு நடந்தும் ஒன்றும் நடக்காதது மாதிரி என் வழி தனிவழி என நடக்கிறாரே ஹும்ம்ம்ம் பேசாம திமுக வேற மாநிலத்தில் போய் அரசியல் நடத்த வேண்டியதுதான்....

பக்ரீத் பண்டிகைக்கு #ஒட்டகம் அறுக்க தடை - உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கவுல்
ஆமாம் ஒட்டகம் எப்போது ஹிந்து மதத்தின் வழிபாடும் விலங்காக மாறியது?

கர்நாடக பிரச்சனையில் வாய் திறக்காமல் அறிக்கை ஏதும் விடாமல் இருந்த ஜெயலலிதா அவர்களின்  ஆட்சி செயலைப் பாராட்டி மாற்று கட்சிகளை சேர்ந்த எழுபதாயிரத்திற்கு மேலானவர்கள் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில்  இணைந்தனர்...# இனிமேல் திமுக வேற மாநிலத்தில் போய்தான் அரசியல் செய்ய்ய வேண்டும் என்ன நான் சொல்லுறது சரிதானே?

தமிழர்கள் மேல் கலவரத்தை நிகழ்த்திய காங்கிரஸ் கட்சியுடன் ஏன் திமுக இன்னும் கூட்டணியில் உள்ளது. கலைஞர் காங்கிரஸ் கட்சியையும் சோனியா காந்தியையும் கண்டித்து அறிக்கை குடுக்காதது ஏன்?


சுதந்திர தினம் கொண்டாடிய கன்னடர்களின் கையில் இருந்த கொடிக்கு பதிலாக இப்போது தடிகளும் தீப்பந்தங்களும் இருக்கின்றன, இப்போது அவர்கள் பறிப்பது தமிழர்களின் சுதந்திரத்தை


வசதியான மற்றும் மிடில் கிளாஸ் மக்கள் தாங்களுக்கு தாங்களாகவே எடுத்து கொள்ளும் விடுமுறைக்கு பெயர்தான் பந்த் இந்த நல்ல நாளில் குடும்பத்தினர் நண்பர்கள் அனைவரும் வீட்டில் ஒன்று கூடி மகிழ்வார்கள்.இப்படி இந்த மக்கள் கொண்டாட தினக் கூலி  மக்கள் தங்கள் தினக் கூலியை தியாகம் செய்து பட்டினியோட இருப்பார்கள். அப்படிபட்ட இந்த தினத்திற்கு நாம் கண்டிப்பாக ஆதரவு தர வேண்டும் இல்லையென்றால் தமிழின துரோகிகள் என முத்திரைக் குத்தப்படுவார்கள் என்பதை இங்கே சொல்ல கடமைபட்டு இருக்கிறேன்


காவிரி பிரச்சனையில் தமிழக அரசு செயல்படாமல் இருக்கிறது என்று சொல்லி வந்த எதிர்ப்பாளர்களை அப்படியே மத்திய அரசுக்கு எதிராக மாற்றிவிட்டார் என்பதை நாளைய பந்த் அறிவிப்பாளர்கள் மூலம் மாற்றிவிட்டார் ஜெயலலிதா அவர்கள்...அப்புறம் என்ன உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவை ஜெயிக்க வைக்க வேண்டியது நம் தமிழர்களின் கடமைதானே



காவிரி பிரச்சனை காரணமாக போராடிய நம் தமிழர்கள் கட்சியை சார்ந்தவர் தீக்குளித்து இருக்கிறார். இப்படி அவர் செய்வதற்கு பதிலாக காவிரி பிரச்சனைக்கு காரணமானவர்களில் சில பேரையாவது கொன்று அதனால் தூக்குதண்டனை பெற்று இருந்தால் அவரைப்பாராட்டலாம் ஆனால் இப்படி வீணா உயிரை மாய்த்து கொள்வது முட்டாள்தனம்தான்

அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

  1. நாளைய பந்த் தில் அர்த்தம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

    ReplyDelete
  2. இன்றைய பந்த் வேஸ்ட்.....சும்மா இதெல்லாம்

    கீதா

    ReplyDelete
  3. காவிரி பிரச்சனை - அரசியல்வாதிகளுக்கு இத்தனை காலமாக போராட்டம் நடத்த ஒரு வசதி.... தீர்ந்து விட்டால் போராட முடியாது....

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.