Friday, September 9, 2016



காவிரி என்ன செஞ்சிகிட்டு இருக்கோம் ...என்ன செய்ய போறோம் Sharing River Cauvery


நமது முன்னோர்கள்  காலத்தில் இருந்த நீர் நிலைகள்( ஆறுகள் குளங்கள் ) பல இன்று பல மடங்கு சுருங்கி குறைந்து இருக்கும் இடம் தெரியாது காணாமல் போய்விட்டது. அன்றைய காலகட்டதில் இருந்த நீர் மேலாண்மை அறிவு இன்றைய விஞ்ஞான யுகத்தில் சாத்தியப்படாமல் போனதற்கு யார் காரணம். என்று பார்த்தால் தமிழகத்தை ஆண்ட இந்த திராவிட கட்சிகளை சொல்லலாம். இந்த 50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியில் சொல்லிக்கொள்ளும்படி அணைகள் ஏதும் கட்டியதுண்டா?எதுக்கெடுத்தாலும் திராவிட கட்சிகளால் மட்டுமே தமிழகம் இந்த நல்ல நிலைமைக்கு வந்தது என்று சொல்லுபவர்கள் மனதை தொட்டு சொல்லுங்கள் இந்த நீர் மேலாண்மை திட்டத்தில் கோட்டை விட்டது யார்?


தண்ணிரை மிக குறைந்த விலைக்கு தன் போட்டோவை போட்டு விற்கும் ஜெயலலிதா ஒரு அணையை கட்டி நகரம் கிராமம் தோறும் குளங்களை வெட்டி அதற்கு அம்மா குளம் என்று பெயர் சூட்டலாமே அல்லது அணையை கட்டி அம்மா அணை என்று பெயர் வைத்தால் கரிகாலன் கட்டிய அணையை போல அம்மா கட்டிய அணை என்று வருங்கால சந்ததிகள் வரலாற்று பாடங்களில் படித்து போற்றுவார்களே அதை எல்லாம் செய்யவில்லை என்றால் இப்படி ஒரு இளைஞர் தமிழர்களின் செவிட்டில்மட்டுமல்ல தலைவர்களின் செவிட்டிலும் இதைவிட வேறு யாராலும் அறைய முடியாது


தமிழன் என்று நாம் சொல்ல ஒவ்வொருவரும் வெட்கி தலை குனிய வேண்டும் !


இனிமேலும் இப்படியே இருந்தால் காவிரியில் அல்ல தமிழர்களின் கண்களில்தான் நீர் வரும் நிலை ஏற்படும்


இதை கர்நாடகா தமிழநாடு பிரச்சனை என்று கருதாமல் இந்தியர்களின் பிரச்சனை என்று கருதி ஒற்றுமையாக இருந்து பிரச்சனையை தீர்க்க வேண்டும்


https://www.youtube.com/watch?v=NYtPf7PEKNM
அன்புடன்
மதுரைத்தமிழன்

5 comments:

  1. bro your efforts should bear fruits best wishes

    ReplyDelete
  2. நல்லதோர் காணொளி. நானும் பகிர்ந்து இருக்கிறேன்.

    ReplyDelete
  3. மிக மிக நல்ல கருத்துகளை முன் வைக்கும் காணொளி!!! இதைப் பகிர்ந்து கொள்கின்றோம்! முகப்புத்தகத்தில்....பகிர்விற்கு மிக்க நன்றி தமிழா.

    ReplyDelete
  4. அருமையான கருத்துகள்...காவிரி மட்டுமல்ல இந்திய நதிகள் அனைத்துமே துன்பமான நிலையில் தான் இருக்கின்றன. அவ்வளவு ஏன் ப்ரிட்டிஷ் காலத்தில் உருவான பக்கிங்க்ஹாம் கனால் நன்றாகப் பேணப்பட்டிருந்தால் சமீபத்தில் சென்னையில் வெள்ளம் என்று சொல்லப்பட்டதைத் தடுத்திருக்கலாம். கூவம் உட்பட பேணப்பட்டிருந்தால்....பக்கிங்க் ஹாம் கால்வாயினால் வருவாய் பெருக்கியிருக்கலாம். எவ்வளவோ எவ்வளவோ....ஆனால் இதற்கெல்லாம் ஒவ்வொரு வருடமும் இறக்கப்படும் பணம் எங்கு செல்கிறது? எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்...யாருக்குப் போயிருக்கும் என்பது. நாம் தான் நமது அடுத்த தலைமுறையிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    கீதா

    ReplyDelete
  5. உண்மைதான்....
    இதில் இந்தியராய் இருந்து முடிவு எடுப்பதே சிறப்பு...
    காணொளி அருமை...
    நானும் முகநூலிலும் வெங்கட் அண்ணா பகிர்விலும் பார்த்தேன்...
    உண்மையை உள்ளபடி பேசியிருக்கிறார்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.