Sunday, December 4, 2016



சின்ன சின்ன நையாண்டி ஸ்டேடஸ்

அரசாங்க அலுவலகத்தில் வேலை பார்த்து ரிட்டையர்டு ஆன ஒரு ஆண்மகனின் நிலைமைதான் மோடிக்கு இன்னும் சில ஆண்டுகளில் ஏற்படும் ரிட்டையர்ட் ஆனவர்களுக்கு வீட்டிலும் செல்வாக்கு இருக்காது வெளியிலும் இருக்காது


என்னதான் தன்னை வீரனாக மோடி காண்பித்து கொண்டாலும் அவர் அதானி அம்பானிக்கு  அடிமையாகத்தான் இருக்க வேண்டும் அது எழுதப்படாத சட்டம்

மோடி எப்போதும் அம்பானிக்கும் அதானிக்கும் மட்டுமே உதவிகிறார் என்பவர்களே உங்களுக்கு தெரியுமா ராகுல் காந்தி அடுத்த பிரதமராக வர மோடி இப்போது உழைக்க மற்றும் உதவ தொடங்கி இருக்கிறார் என்று



மோடி செய்யும் தவறுகளை கண்மூடிக் கொண்டு பிஜேபியினர் ஆதரிப்பதன் மூலம் தாங்களுக்கு தாங்களாவே அவர்கள் குழிப் பறித்து கொள்வது போலத்தான் எனக்கு தோன்றுகிறது

கறுப்பு பணத்தை ஒழிக்க நாட்டில் உள்ள தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளை அரசுமயமாக்கிவிட்டால் பாதி கறுப்புபணம் சம்பாதிக்கும் வழிகளை அடைத்த மாதிரிதான். மோடி தான் செய்த தவறுக்கு பிராயசித்தமாக இதை செய்ய முன்வருமா?

500 1000 மட்டுமல்ல பாஜாகவும் செல்லாக் காசாகத்தான் ஆகிகொண்டிருக்கிறது


தங்க கட்டுப்பாடு மக்களுக்கு மட்டும்தானா கோவிலில் இருக்கும் சாமிக்கு கிடையாதா?

மோடி படத்தை விளம்பரத்திற்காக உபயோகித்தற்கு 500 ரூபாய் அபராதமாம் அப்ப மோடியின் மதிப்பு 500 ரூபாதானா? எங்க வூரு வடிவேலுவின் மதிப்பு இதற்கும் மேலேதான்

Cash Less திட்டம் இந்தியாவில் Use  Less திட்டமாகத்தான் இருக்கும்


விளம்பரங்களில் பிரதமரின் படத்தை உபயோகப்படுத்தியதால் ரிலையன்சுக்கு 500 ரூபாய் அபராதம் தீர்ப்பை கேட்டதும் அம்பானி கதறி அழுதார் இனிமேலாவது அடிமையின் படத்தை உபயோகப் படுத்துவதில் அம்பானி ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்

படபிடிப்பில் காலில் அடிபட்ட ரஜினிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினார் இது வரலாற்று சிறப்பு மிக்க பரபரப்பு செய்தி
பணம் மாற்ற சென்ற முதியவர் மயங்கி விழுந்து பிணமாக வீட்டிற்கு சென்றார். மோடியின் கருப்பு பண ஒழிப்பு திட்டத்திற்காக இப்படி சில இழப்புகள் இருக்கத்தான் செய்யும் அதனால் இதெல்லாம் சாதராண செய்தி

தளபதி தலைவராக குடும்ப உறுப்பினர்களின் ஒப்புதல் வாங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.... #விகடன்...செய்தி..!
இதுதான் ஜனநாயக முறைப்படி நடத்து உட்கட்சி தேர்தலா?

கௌரி சங்கர் பேஸ்புக்கில் எழுதியது

ஊழல் பெருச்சாளிகளை அடையாளம் காணப்பட வேண்டும்-ஸ்டாலின்
இவரு ஒழிஞ்சுக்குவாராம் நாம கண்டுபுடிக்கனுமாம் ஐஸ் நெம்பர் வெளையாடர வயசாயா உனக்கு..!!



அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி : இவையெல்லாம் எனது பேஸ்புக் தளத்தில் என்னால் வெளியிடப்பட்டவை...விருப்பம் உள்ளவர்ள் எனது பேஸ்புக் கணக்கை தொடர இங்கே களிக் செய்யவும் https://www.facebook.com/avargal.unmaigal

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.