Thursday, February 16, 2017


கலாச்சாரம் காக்க போராடிய இளைஞர்களும் பொதுமக்களும் இப்போது எங்கே ?


ஜல்லிக்கட்டுக்கு தடை என்றதும் நமது கலாச்சாரத்திற்கு ஏற்ப்பட்ட தடை என்று அரசாங்கத்தோடு மல்லுக்கட்டி போராடி அந்த தடையை நீக்கி ஜல்லிகட்டை நடத்த வழி செய்தது தமிழக இளைஞர்கள் மற்றும் பொதுமக்களும்தான். நமது கலாச்சாரம் காக்க இதுவரை இப்படி ஒரு போராட்டம் நடந்ததே இல்லை என்று சொல்லும் அளவிற்கு நடந்தது. உலகம் அதை பார்த்து பெருமை அடைந்ததுமட்டுமல்ல ஆதரவு கொடுத்து போற்றியும் புகழ்ந்தது.


அப்படி கலாச்சாரம் காக்க போராடியவர்கள் இப்போது தமிழகத்தில் நிலவும் அரசியல்களால் தமிழகமே அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. ஆனால் அதற்காக போராட வேண்டிய இளைஞர்களும் பொதுமக்களும் போராடமல் சமுகதளங்களில் மிம்ஸ்களை க்ரியேட் பண்ணி பார்த்து மகிழ்ந்து கொள்கிறார்கள் ப்ரேக்கிங்க் நீயூஸை நாள் முழுவதும் பார்த்தும் அதன் பின் விளைவுகளின் உண்மை தன்மையை உணராமல் இருக்கிறார்கள்

இவர்களின் மெளனம் அரசியல் தலைவர்களை அழிப்பதற்கு பதிலாக இவர்களின் வருங்கால நலன்களை அழித்து கொண்டிருப்பதை அறியாமல் இருக்கிறார்கள்

அதனால்தான் பன்னீர் செல்வமாகட்டும் அல்லது சசிகலா ஆதரவு பெற்றவர்களாக இருக்கட்டும் இருவரும் சொல்வது அம்மா விட்டு சென்ற பணிகளை நாங்கள் தொடர்வோம் என்று அம்மா சமாதியில் சென்று சூளுரைக்கிறார்கள். இந்த அம்மாக்கள் நாட்டை சுரண்டி நல்லவர்கள் போல வேஷம் போட்டு கொண்டிருந்தார்கள் அதைத்தான் இவர்களும் தொடரப் போகிறோம் என்று சொல்வது வெட்க கேடாக உங்களுக்கு இல்லையா?

இளைஞர்களே பொதுமக்களே புதிய தலைவர்களை தேடும் நேரம் வந்துவிட்டது அதை பொறுப்புடன் உணர்ந்து செயல்பட்டு தலைவரை தேர்ந்தெடுத்து தமிழகததை தலை நிமிரச் செய்யுங்கள் திராவிட எதிர்ப்பு ஆரிய ஆதிக்கம் என்று சொல்லிக் கொண்டு காலம் கழிக்காமல் தமிழர்கள் மூன்னேற வழி செய்யுங்கள்

அன்புடன்\
மதுரைத்தமிழன்

4 comments:

  1. நான் சி.எம் ஆக ரெடி நீங்க ஆதரவு திரட்டறிங்களா?

    ReplyDelete
    Replies

    1. பொது சொத்தை அபகரித்து இருக்கிறீர்களா? சாராய தொழிற்சாலை உண்டா? அடுத்தவர்களின் குடியை கெடுத்து இருக்கிறீர்களா? தலைவர்களின் சமாதியில் ஒங்கி அடித்து சத்திய சபதம் செய்ய உங்கள் கைகளுக்கு வலு இருக்கிறதா?இப்படிபட்ட முன் அனுபவம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் சி எம் ஆக நான் ஆதரவு திரட்ட ரெடி

      Delete
  2. மதுரைத் தமிழரே!
    சகோதரி உஷாவை பயமுறுத்தாதீர்கள், உற்சாகப்படுத்தி ஆதரியுங்கள்.
    மாறவேண்டிய காலம் கனிந்துள்ளது.பயன்படுத்துவார்களா இளைஞர்கள்?
    மீண்டும் அம்மாவின் ஆட்சியே என புளி கரைக்கிறார்கள்.

    ReplyDelete
  3. இதே கேள்வியைத்தான் கேட்க நினைத்தேன் மதுரைத் தமிழன் இருக்க!..கேட்டுட்டீங்க...நடப்பது எதுவும் நன்றாக இல்லை. வேதனையாகத்தான் இருக்கிறது. சேனல்கள் நிமிடத்திற்கு ஒரு பரபரப்புச் செய்தி, ஸ்கூப் நியூஸ் என்பது போய் அதுவும் எல்லா சேனல்களும் ஒரு சேர வெளியிடும் நிலையில் வந்து கொண்டிருக்கிறது..ஊடகங்களுக்கு நல்ல விற்பனைக் காலம்...

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.