Monday, October 23, 2017

@avargal unmaigal
மனிதம் மரணித்து போனதன் அடையாளம்தான் கந்துவட்டியால் 4 பேர் தீக்குளிப்பு


நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பு  கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட ஒருவர் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன்  தீக்குளித்தனர் இதில் 3 பேர் இறந்தும் குடும்ப தலைவரின் உடல் ஹாஸ்பிடலில் ஊசலாடுகிறது என்றும் தகவல் வந்திருக்கிறது. இந்த குடும்ப தலைவர் பல முறை ஆட்சியாளர் மற்றும் காவல் துறை அதிகாரிகளிடம் இது குறித்து ரிப்போர்ட் செய்தும்  பலன் ஏதுமில்லாததால் கந்துவட்டிக் கொடுத்தவரின் அடாவடித்தனத்தால் இறுதியில் வேறு வழி தெரியாமல் இப்படி ஒரு தீக் குளிப்பு முடிவிற்கு வந்து இருக்கிறார்.


அப்படி அவர் தீக்குளிப்பதை படமாக எடுத்து சமுக வலைதளங்களில் வைரலாக வந்து இருக்கிறது, அதை  பார்க்க பார்க்க மனம்  பதை பதைக்கதான் செய்கிறது.. எந்த அளவிற்கு அந்த குடும்பம் பாதித்து இருந்தால் இந்த முடிவிற்கு அவர்கள் வந்திருப்பார்கள்..தனக்கு தானே தீ வைத்து கொள்ள எவ்வளவு தைரியம் வேண்டும்? அதுவும் தான் நேசித்த மனைவி மற்றும்  ஆருயிர் பச்சிளம் குழந்தைகளுக்கு தீ வைக்க வேண்டுமானல் எந்த அளவிற்கு மனம் வெந்து கல்லாகி இருக்க வேண்டும்.ஒரு நொடி யோசித்து பார்த்தால்  அடிவயிறு பிசைகிறது..


இப்படி கந்துவட்டி வாங்குபவர்கள் யார் என்று பார்த்தால் சாதாரண கூலித் தொழிலாளிகளும் தனியார் கம்பெனிகளில் வேலை பார்ப்பவர்களும்தான்...இவர்கள் தங்களின் அவசர தேவைகளுக்கு கொஞ்சமுv யோசிக்காமல் அல்லது புரியாமல் கந்துவட்டிகாரர்களிடம் பணத்தை கடனாக வாங்கி இறுதியில் கடன் தொகையைவிட நான்கு ஐந்து மடங்கு தொகையை வட்டியாக கொடுத்திருந்தாலும் அந்த கடன் முடிவடைவதில்லை , அந்த கடனை முழுமையாக ஒருவர் அடைக்க வேண்டுமென்றால் லாட்டரியில் கிடைக்கும் பரிசு மூலமோ அல்லது கடவுளே கூறையை பிய்த்து கொண்டு கொடுத்தால்தான் அவரால அந்த கந்துவட்டியில் இருந்து திரும்ப முடியும் .இல்லையென்றால் கேன்ஸரை போல அது நம்மை அழித்துவிடும். இது பற்றி விழிப்புணர்வு இல்லாததால்தான் இப்படி ஒரு சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.


இவர்களை போன்று வாங்கிய கடனை மானத்திற்கு அடைக்கும் இவர்களை போன்றவர்களுக்கு உழைக்கும் வர்க்கத்திற்கு பேங்குகளில் லோன் தரமாட்டார்கள். அவர்கள் எல்லாம் படித்து மானம் மரியாதை பற்றி கவலைப்பாடத கோட்டு சூட்டு போட்ட ஆட்களுக்கு கோடிக் கணக்கில் வாராக் கணக்கில் கடன் கொடுப்பார்கள் அதுதான் உண்மையான நிலமை.


இப்படி நடப்பதற்காக அரசியல் தலைவர்களையோ அரசு அதிகாரிகளையோ அல்லது சமுக காவலர்களையோ குறை சொல்ல முடியாது காரணம் அவர்கள் மிகவும் சுயநலவாதிகள் அவர்களுக்கு தங்களின் நலமும் தங்களின் மதமும்தான் முக்கியம்..

இப்படி ஒரு நிலை இருக்கும் பொழுது  தீக்குளித்தவர்களைக் காப்பாற்றாமல் படம் பிடித்த மனிதர்களை மனிதம் மரணித்து போனதன் அடையாளம், வேதனை- என்று சொல்லி காறி துப்புகிறது...  அவர்களை காறித்துப்புவதை நான் இங்கு தவறு என்று சொல்லவில்லை அது சரிதான்...எப்படி இவர்களால் இப்படி நடக்க முடிகிறது என்று நினைக்கும் போது மனதில் வேதனை வருகிறது இவர்கள் குடும்பதினர் இப்பிடி ஒரு செயலில் இறங்கும் போது இவர்களால் இப்படி போட்டோக்களை எடுக்க முடியுமா? அவர்களால் என்றும் கேள்வி எழுகிறது.

இப்படி போட்டோ எடுப்பது தவறுதான் என்றாலும் அதிலும் சில நன்மைகள் இருக்கத்தான் செய்கின்றன. அவர்கள் அப்படி எடுத்தால்தான் இந்த விஷயம் இவ்வளவு பரபரப்பாக ஊடகங்களிலும் சமுக வலைதளங்களிலும் பேசப்படுகின்றது. அப்படி இல்லையென்றால் செய்திதாள்களின் எங்கோ ஒரு முளையில் சிறு  செய்திகளாக வந்து நம் கண்ணில் படாமல் ஒரு சாதாரண செய்தியாக போய் இருக்கும் . நாமும் இப்படி எழுதி சமுக உணர்வை வெளிப்படுத்தாமல் சென்று இருப்போம்.


@avargal unmaigal
இவ்வளவு பேசுகிறோமே அப்படி போட்டோ எடுத்தவர்களை பற்றி, கடன் கொடுத்தவர்களைப் பற்றி ஆனால் இந்த ஊடகமோ அல்லது சமுக ஊடகங்களிலோ தீக்குளிப்பு சம்பவத்தின் போது அந்த குடும்பத்தை காப்பாற்ற  பலரும் முயற்சித்திருக்கிறார்கள் அவரைப் பற்றி யாரவது ஒருவரியில் பாராட்டி இருக்கிறார்களா என்று பார்த்தால் ஒருத்தர் கூட இருக்கமாட்டார் என்பதுதான் உண்மை. அப்படி காப்பாற்ர சென்ரவர்களின் படத்தை ஊடகங்கள் வெளியிட்டு அவர்களை பாராட்டி இருக்கலாமே அல்லது அவர்களை பேட்டி எடுத்து வெளியிட்டு பாசிட்டாவ்வாக ஏதாவது ஒரு செய்தியை வெளியிட்டு இருக்கலாமே? அப்படி எல்லாம் செய்யமாட்டர்கள் இவர்கள் அதுதான் இவர்களின் மனித நேயம்



இப்போது இந்த குடும்பத்திற்காக பரிதாபப்படுபவர்கள் அவர்கள் கடன் வாங்கி கஷ்டப்படும் போது அவர்களை சுற்றி உள்ளவர்கள் எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும் அவர்களில் சிலராவது முயற்சி செய்து அவர் கடனை அடைக்க முயற்சி செய்திருக்கலாமே அல்லது மிக குறைந்த வட்டியில் நீண்ட கால கடனைகாக கொடுத்து அவர்களை காப்பாற்றி இருக்கலாமே? அதை யாரும் செய்ய முன் வராதது என்?


இந்த குடும்பம் மட்டுமல்ல எத்தனை குடும்பங்கள் பல நியாயமாக உழைத்து சம்பாதித்து மானத்துடன் வாழ்கிறார்கள் அவர்களுக்கு ஒரு கஷ்டம் என்ரு வரும் போது அருகில் இருக்கும் நம்மால் உதவ முடியாது பிரச்சனை பெரிதான சமயத்தில் இப்படி சமுக தளங்களில் பொங்குகிறோம்..


நண்பர்களே இப்படிபட்ட கூலித் தொழிலாலிகள் உங்க வீட்டில் வேலை செய்யலாம் அல்லது உங்கள் அலுவலகத்தில் வேலை செய்யலாம் அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களிடம் வேலை செய்யலாம் இப்படி பல இடங்களில் வேலை செய்யலாம். அப்படிபட்டவர்கள் உங்கள் பார்வையில் பட்டால் அவர்களுக்கு கடன் கொடுத்து அவர்களை தூக்கிவிடலாமே.. எவ்வளவோ நாம் சினிமா மற்றும் கேளிக்கைகளுக்காக செலவழிக்கிறோம் அல்லது கோயில் அல்லது கட்சிகளுக்கு நன்கொடையாக தருகிறோம் ஆனால் இப்படிபட்டவர்களுக்கு நாம் உதவாமல் இருப்பது சரிதானா என்பதை சமுக வலைதளங்களில் பொங்கி பதிவிடுவதற்கு முன்னால் சிறிது யோசியுங்கள்.

நீங்களும் யோசியுங்கள் நானும் யோசிக்கிறேன்... நம்மால முடிந்ததை நம் சமுகத்திற்கு செய்வோம் அரசியல் தலைவர்களையோ அல்லது அதிகாரிகளையோ நம்பி பிரயோசனமில்லை..








சாவுக்கு காரணமான கந்துவட்டி கொடுத்தவங்களை முதலில்  கைது பண்ணுறதை விட  புகார் கொடுத்தும்  நடவடிக்கை எடுக்காத  கலெக்டர் மீதும் கலெக்டர் அலுவலகம் மீதும்  முதலில் சட்டபூர்வமான  நடவடிக்கை எடுக்கணும்...இதை செய்ய மக்கள் சட்டரீதியாக போராடனும்


டிஸ்கி : தமிழகத்தில் டெங்குவால் தமிழக அரசு முடங்கி போய் மக்களிடம் கேவலப்பட்டு இருக்கிறது அதில் இருந்து திசை திருப்ப மெர்ஷல் வந்துள்ளது. ஆனால் அந்த மெர்ஷல் படத்தால் தமிழக் பாஜக தலைவர்களால் மத்திய அரசு அசிங்கப்பட்டு இருக்கிறது. எனக்கென்னவோ மத்திய அரசு தன் மீது ஏற்பட்டு இருக்கும் அசிங்கததை திசை திருப்ப இங்கே லோக்கல் ஆட்களால் இந்த தொழிலாளி முளைச்சலவைச் செய்யப்பட்டு இப்படி ஒரு நிகழ்விற்கு தூண்டப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது. இப்படி ஒரு நிகழ்வு ஏற்பாட்டால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் அடிமையாக இருக்கும் மீடியாக்கள் இந்த செய்தியை பெரிதாக்கி மத்திய அரசுக்கு ஏற்பட்ட களங்கத்தை துடைக்க உதவுகிறதோ என்று நினைக்க தோன்றுகிறது






அன்புடன்
மதுரைத்தமிழன்

12 comments:

  1. மனம் மிகவும் அடைகிறது.

    கந்து வட்டிக்காரர்கள் என்ன அரசு நிதி துறையால் அங்கீகரிக்கப்பட்டு உரிமம் வழங்கப்பட்டவர்களா?

    மனிதாபிமானமற்ற இந்த தொழில் சார்ந்தவர்களின் குடும்பமும் பிற்கால சந்ததியினரும் சுபிட்சமாக வழுவதற்காக இன்றைய ஏழை சந்ததியினரை ஏமாற்றி சுரண்டி வாழும் வட்டி பேய்களை எந்த வேப்ப மரத்தில் அறைவது?
    மற்றவர் வேதனையை தீர்க்க உதவாமல் படம் எடுக்கும் மனப்போக்கு என்னை பொறுத்தவரை கண்டிக்கத்தக்கது.

    கோ.

    ReplyDelete
    Replies
    1. நந்தன் ஸ்ரீதரன் பேஸ்புக்கில் பகிர்ந்த கருத்தை இங்கே பதிகிறேன்


      வியட்நாம் போர் நடந்தது. அமெரிக்கா அதில் அக்கிரமமான ஆட்டம் ஆடியது. அத்தனை மக்கள் மடிந்தார்கள். ஒரே ஒரு புகைப்படம்.. அமெரிக்க மக்களின் மனநிலையை மாற்றியது..

      சோமாலியா கடும் பஞ்சத்தில் உழன்றது. லட்சக்கணக்கில் மக்கள் இறந்தார்கள். ஒரே ஒரு குழந்தையின் சாவுக்காக காத்திருநத கழுகு சேர்ந்த புகைப்படம் சோமாலிய மக்களின் வலியை உலகுக்கு உணர்த்தியது. உலகம் முழுக்க சோமாலியாவுக்கு உதவிகள குவிந்தன..

      அதே மாதிரிதான் இங்கேயும். ஒரே குடும்பத்தின் நாக்கு பேர் மட்டும் அல்ல.. எங்கள் ஏரியாவில் ஏழு பேர் ஒரே நேரம் விஷம் தின்று இறந்திருக்கிறார்கள். அதுவும் செய்தியிலும் டிவி நியூசிலும் வந்தது. இப்போது கொதிக்கும் யாரும் அந்த செய்தியை திரும்பிக் கூட பார்க்கவில்லை..

      ஆனால் இன்று ஒரு குடும்பத்தில் நான்கு பேர் இறந்த செய்தியின் படம் வந்ததும் மொத்த சமூகமும் கொதிக்கிறது. ஆயிரம் வார்த்தைகளால் எழுதும் கட்டுரையின் வலிமையை விட ஒரு புகைப்படம் எழுப்பும் தாக்கம் மிக வலியது..

      அதனாலேயே இந்த மாதிரி புகைப்படங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன


      இது மாதிரி புகைப்படங்களைப் பகிராதீர்கள் என்று சொல்பவர்கள் அனைவரையும் .. என்ன அநியாயம் நடந்தாலும் என் மனம் பாதிக்கப் படக் கூடாது என்று விரும்புபவர்களாகவே அவர்களை நான் பார்க்கிறேன்..

      இந்த விஷயம் சென்று சேரும் வரை அந்தப் புகைப்படங்களைப் பகிரலாம் என்றே நான் இருக்கிறேன். உங்களது elite மனங்களை கேள்வி கேட்கும் என்றால் அந்தப் புகைப்படங்களை நான் பகிர்வதில் தவறே இல்லை நண்பர்களே..

      வணக்கம்..

      Delete
  2. மனம் பதறுகிறது நண்பரே...
    என்று தீரும் இந்நிலை ???

    ReplyDelete
  3. ஐயோ :( என்னால் படங்கள் எதையும் பார்க்க மனம் பதறுது ..

    நடவடிக்கை எடுக்கத்தவறிய அதிகாரிகள் உயிர் தின்ற பாவிகள்

    ReplyDelete
  4. மிக கொடுமையான நிகழ்வு..கடன் சில வேளைகளில் என்னையும் படுத்துவதுண்டு..அசலைக்க்காட்டிலும் 4 மடங்கு வட்டிகொடுத்தும் வாயைத்திறந்துகொண்டுவரும் பிசாசாய் அவர்களின் கொள்ளிப்பேச்சுகள் காதுகொடுக்க முடியாது...பிரசவ வைராக்கியமாய் இருந்தாலும் பிரச்சனைகள் எனில் அவர்காலையே நாடும் கொடுமை..கொஞ்சம் கொஞ்சமாய் மீளப்பார்க்கிறேன்..

    ReplyDelete
  5. கண்ணால் காண இயலா காட்சிகள்...

    மனம் பதைக்கிறது..

    உண்மை ...

    நம்மால் முடிந்தை நம் சமுகத்திற்கு செய்ய வேண்டும்..

    ReplyDelete
  6. My deepest condolences for the family ( where is the family ...all gone )

    Oh what a logic..central govt induced the person and family to do this so that they can divert attention of the public ( see your disky) ...what an wonderful person you are .

    Modi has introduced Mudra programme to give loans without any surety or mortgages , it has sanctioned I think few crore loans under this scheme . It means at least that many people has not borrowed money from private financiers , there are so many micro finance banking companies in the field , which extents loans to the small time traders . You have not written anything about it but you have the guts to say BJP has played a role , or that is what you suspect .

    ReplyDelete
  7. மிக வேதனையான சம்பவம். நான்கு உயிர்கள் அநியாயமாகப் போய்விட்டதே..அதிலும் இரண்டு தளிர்கள்.. :((((((((((((

    ReplyDelete
  8. மனம் பதற வைத்த நிகழ்வு அடாவடித்தனத்துக்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது பைனான்சில் வாங்கினாலும் இப்படித்தான் போல கடனை கொடுக்க முடியாமல் ஒரு இளைஞ்சன் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அவனை தொல்லை கொடுத்திருக்கிறார்கள் தெரிந்தவரின் தெரிந்தவர் பாவம். நானெல்லாம் சுய உதவிக்கு வைத்திருக்கிறோம் முடியாதவர்களுக்குத்தான் முதலில் உதவி பாதி பேர் வாங்கவே மாட்டோம் எங்கள் பெயரை போட்டு அவர்களுக்கே உதவி நடக்கிறது

    ReplyDelete
  9. வெட்கப்படவேண்டிய, வேதனைப்படவேண்டிய நிகழ்வு.

    ReplyDelete
  10. மனம் பதறுகிறது.
    மனிதம் மரித்துவிட்டது.
    கொடுமை.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.