Sunday, October 29, 2017

செய்தி :சேகர் ரெட்டியிடம் 34 கோடிக்கு புது 2000 ரூபாய் எப்படி வந்தது என்று RBI யால் கண்டுபிடிக்க இயலவில்லை.


சேகர் ரெட்டியிடம் மூன்று கட்டமாக விசாரணையை இப்படிதான் நடத்தி இருப்பாங்களோ?



ஐயா நாங்க சிபிஐ , வருமான வரி மற்றும் ரிசர்வ் பேங்க் டிபார்ட்மண்டில் இருந்து  வருகிறோம். உங்களிடம் எப்படி இந்த 2000 ரூபாய் புது நோட்கள் 34 கோடிக்கு வந்தது என்பது பற்றி உங்களை விசாரிக்க வந்து இருக்கிறோம்

சேகர் ரெட்டி : ஐயா எனக்கு இந்த பணத்தை யார் கொடுத்தார்கள் என்கிற  உண்மையை சொல்லிடுறேன். ஆனால் என்னை ஜெயிலில் மட்டும் போட்டுடாதீங்கய்யா. ஊரில் நான் மிகப் பெரிய மனிதன் என் மானம் மரியாதை எல்லாம் போயிடும் அதனால் என்னை மன்னிச்சு வீட்டுங்க.

சிபிஐ  விசாரணை டீம் : சேகர் ரெட்டி உங்களுக்கு பணம் கொடுத்தது யாருன்னு நீங்க சொல்லக் கூடாது. அதை கண்டுபிடிப்பதுதான் எங்க வேலை அதுல நீங்க தலையிட வேண்டாம் அது எங்களுக்கு பிடிக்காது.

சார் நீங்க கண்டுபிடிச்சா என்னை சிறையில்தானே போடுவிங்க அதனால நானே சொல்லிவிடுகிறேன் சார் என்னை மன்னித்துவிடுங்கள் சார்.

சேகர் ரெட்டி கவலைப்படாதீங்க... நாங்க விசாரனையைத்தான் துரிதப்படுத்த  போகிறோம் அவ்வளவுதான் அதற்காக நீங்கள் கவலைபடவெல்லாம் வேண்டாம் (ஆபீஸர் மைண்ட் வாய்ஸ் நாங்க என்ன சொன்னோம் கண்டுபிடித்தால்தான் சிறையில் போடுவோம் ஆனால் நாங்கதான் கண்டுபிடிக்கவே போறதில்லையே )

விசாரணை டீம் 2:

சேகர் ரெட்டி : ஐயா எனக்கு இந்த பணத்தை யார் கொடுத்தார்கள் என்கிற  உண்மையை சொல்லிடுறேன். ஆனால் என்னை அடிச்சு கிடிச்சு  ஜெயிலில் மட்டும் போட்டுடாதீங்கய்யா. ஊரில் நான் மிகப் பெரிய மனிதன் என் மானம் மரியாதை எல்லாம் போயிடும் அதனால் என்னை மன்னிச்சு வீட்டுங்க.

விசாரணை அதிகாரி: சார் நீங்கள் உண்மையை வெளியே சொல்லாமல்  இருந்தால்தான் உங்களுக்கு மன்னிப்பு

சேகர் ரெட்டி : எனக்கு ஒன்றும் புரியவில்லையே

அதிகாரி : சார் உங்களுக்கு பணத்தை கொடுத்தவர்தான் எங்களை விசாரனைக்கு போக சொன்னார். அவரை பற்றி மூச்சு ஏதும் வெளியிட்டால் உங்களை அடித்து உதைத்து ஜெயில் போடச்  சொன்னார்

விசாரனை டீம் 3

சேகர் ரெட்டி : சார் நீங்க கேட்கிற கேள்விக்கு எல்லாம் சரியாக பதில் சொல்லுறேன் என்னை விட்டுங்க சார்

அதிகாரி : சரி... இப்ப சொல்லுங்க உங்களின் நெருங்கிய நண்பர் யார்?

சேகர் ரெட்டி : பன்னீர் செல்வம்தான் என் நெருங்கிய நண்பர் சார்?

அதிகாரி : அவருக்கு பிடித்தவர்கள் யார் யார்?

சேகர் ரெட்டி :அவருக்கு முன்பு ஜெயலலிதாவை பிடிக்கும் இப்போது மோடியையும் அதற்கு அடுத்தபடியாக என்னையும் பிடிக்கும்.

அதிகாரி : மோடியை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.

சேகர் ரெட்டி : அவர் மிகப் பெரிய மகான். இந்தியாவை காப்பற்றும் மகான்.

அதிகாரி ; சரி சரி அவர் கொண்டு வந்த GST பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சேகர் ரெட்டி :  அது  மிக சிறப்பான திட்டம். அது இந்தியாவை வளர்ச்சிக்கு கொண்டு போகும்  திட்டம். அதை மிக சரியான முறையில் சரியான நேரத்தில் மோடி அவர்கள் அறிவித்து இருக்கிறார்கள். இதனால் இந்தியாவில் பாலாரும் தேனாறும் ஒடும் என்பது நிச்சயம்.

அதிகாரி : ரெட்டிகார் நீங்கள் விசாரணையின் போது மிக நன்றாக ஒத்துழைப்பு கொடுத்தீர்கள் உங்கள் பதில்களில் இருந்து நீங்கள் குற்றம் மற்றவர் என்று தெரிந்து கொண்டோம். நாங்கள் இந்த விசாரணையின் போது தெரிந்து கொண்ட தகவல்களை பிரதமரிடம் சொல்லி உங்களுக்கு தேசிய விருது கொடுக்க ஏற்பாடு செய்கிறோம் அதுமட்டுமல்ல உங்களை போன்றவர்கள்தான் தமிழக முதல்வராக ஆக வேண்டும் நாட்டை நல்ல வழிக்கு கொண்டு வர வேண்டும் என்றும் சிபாரிசுகள் செய்கிறோம். நன்றி


விசாரணை டீம் 4:

சேகர் ரெட்டி : சார் நான் உண்மையை சொல்லிவிடுகிறேன் என்னை ஒன்றும் பண்ணிவிடாதீர்கள்.

அதிகாரி: உங்களிடம் எவ்வளவு புது நோட்டுக்கள் இருந்தன? உண்மையை மறைக்காமல் சொல்லுங்கள்

சேகர் ரெட்டி : 34 கோடி ரூபாய்க்கு புது 2000 நோட்கள் இருந்தன.

அதிகாரி : 34 கோடியா சரி சரி நாங்க என்னமோ ஐம்பதினாயிரம் ரூபாய் கேஷாக வைத்திருந்தீர்கள் என்று கேள்விபட்டு தவறுதலாக வந்துவிட்டோம்... மன்னித்து கொள்ளுங்கள்


மக்களே இதுவரை நீங்கள் படித்தது சிரிக்க மட்டுமே... ஆனால் சிந்திக்க  சில விஷயங்கள்

மோடி அரசு கறுப்பு பணத்தை ஒழிக்கவே இந்த திட்டத்தை கொண்டு வந்தது என்றால் அதை பிரேக் பண்ணி இப்படி கோடி கோடியாக புதுப்பணத்தை பதுக்கியது மோடி அரசுக்கு எதிராக செயல்படுவதாகத்தானே அர்த்தம். அப்படி செயல்படுபவர்களை மோடி அரசு ஏன் பாதுகாக்கிறது? எதற்க்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்ககிறது. அப்படி இல்லையென்றால் இப்படி குற்றம் செய்பவர்களை அதற்கு உடந்தையாக இருப்பவர்களை கண்டு பிடிக்க முடியாமல் மோடி அரசு என்ன இவ்வளவு பலவீனமாகவா இருக்கிறது. ஆம் என்றால்   மிகவும் வெட்கப்பட வேண்டிய விஷயமல்லவா. ரிசர்வ் வங்கி,சிபிஐ  போன்றவைகள் யார் கையில் இருக்கிறது பிரதமர் கையிலா அல்லது அவரையும் மீறி வேறு பலமான சக்திகள் உள்ளதா? அடி உதவது போல அண்ணன் தம்பி உதவமாட்டார்கள் என்பார்கள் அப்படி இருக்க சிபி ஐயினால் முடியவில்லை என்றால் என்ன சிந்தாதரிப் பேட்டை போலீஸ்காரர்களிடமாவது  ஒப்படைத்தால் ஒரு மணிநேரத்தில் உண்மையை கக்க வைத்து விடுவார்களே?

ஜெயலலிதா ஹாஸ்பிடலில் முதலமைச்சாரக சிகிச்சை பெறும் போது மத்திய அரசையே உள்ளே நுழையவிடாமல் தடுத்த சக்தி எது அதுவும் பிரதமரைவிட பலமான சக்தியா என்ன?

எந்த சக்தி அவரை சரியான நடவடிக்கை எடுக்காமல் தடுக்கிறது என்பதை பக்தாஸுக்களாவது ஆதாரத்துடன் வெளியிடுவார்களா?


அன்புடன்
மதுரைத்தமிழன்

14 comments:

  1. Replies
    1. ஆண்டி இண்டியன் என்று சொல்லுறீங்க ஆனால் அந்த ஆண்டியை மட்டும் கண்ணுல காட்டமாட்டேங்கீறீங்களே விசு

      Delete
  2. இந்தியாவில் பாலாறும், தேனாறும் ஓடினால் ? பால் வியாபாரிகளும், தேன் வியாபாரிகளும் வியாபாரத்தில் நஷ்டப்பட்டால் அதற்கு அரசு பொருப்பேற்ருமா ?

    ReplyDelete
    Replies
    1. அவங்களுக்கு நஷ்டம் வாராது ஏன்னா? அந்த பாலாற் & தேனாறில் படகு விட்டு தொழில் நடத்த மாற்று ஏற்பாடு செய்யப்படும் ஹீஹீ

      Delete
  3. எதும் சொல்றதுக்கில்ல. கோடிக்கணக்குல பணத்தை வரவு செலவு வச்சிக்கலைன்னு சொன்னா. எல்.கே.ஜி பாப்பாக்கூட நம்பாது. இளிச்சவாயனுங்கன்னு நம்புறானுங்க. அதான்

    ReplyDelete
    Replies
    1. இங்க பாருங்க டவுசர் பாயை இளிச்ச வாயன் என்று சொன்னால் உங்களுக்கு மேலும் மைனஸ் வோட்டு போடப்படும் ஜாக்கிரதை

      Delete
  4. பொதுமக்களின் மனதில் இந்த சந்தேகம் வரும்தான். ஜி எஸ் டி மோசமான திட்டம் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. பொதுமக்களின் மனதில் மட்டுமல்ல மோடியை ஆதரிக்கும் கட்சிகாரர்களின் மனதிலும் இப்படி சந்தேகம் வரும்தான். ஆனால் என்ன இதை வெளிப்படையாக பேச முடியாது. ஜிஎஸ்டியை மோசமான திட்டம் என்று நான் சொல்லவில்லை ஆனால் அதை சரியான முறையில் சிந்தித்து திட்டமிடப்படாமல் ஏதோ அவசர அவசரமாக கொண்டு வந்தது போல தோன்றுகிறது.. நான் பதிவுகள் எழுதுவது ஊடகங்கள் மற்றும் சமுக வலைதளங்களில் வருவதை ஒட்டிதான் எழுதுகிறேன். ஆனாலும் ஊருக்கு போன் போட்டு பலரிடம் பேசும் போது பலரும் இது மிகவும் பாதித்து இருக்கிறது இதனால் பல சிறு தொழில்கள் பாதிக்கப்படுள்ளன பல மூடப்பட்டுள்ளன என்று சொல்லுகிறார்கள் எனக்கு தோன்றுவது எல்லாம் இந்த திட்டம் மோசமா அல்லது மக்கள் மோசமா என்றுதான்

      Delete
  5. ஜி.எஸ்.டி நல்ல திட்டம் தான், அவரசர கதியில் நிர்ணயிக்க பட்ட வரி சதவீதங்கள் தான் பாதிப்பை ஏற்படுதுகின்றன.

    ReplyDelete
    Replies
    1. நானும் அப்படித்தான் நினைக்கிறேன்

      Delete
  6. இதனால் தெரிவது என்னவென்றால் சேகர் ரெட்டி இன்னும் அரசின் குட் புக்சில் தான் இருக்கிறார்

    ReplyDelete
  7. எல்லாம் கண்துடைப்புக்காகத்தான் கடைசியா கேட்டீங்க பாருங்க கேள்வி சூப்பர் எது அது ?

    ReplyDelete
    Replies
    1. அந்த சக்தி எது என்று தெரிந்தால் நான் மோடியை பற்றி குறை கூறி எழுதுவதையே நிறுத்திவிடுவேன்...

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.