Tuesday, November 14, 2017


avargal unmaigal
 செய்திகளை முந்தித்தருவது அவர்கள்....உண்மைகள் வலைத்தளமே ஹீஹீ

மோடியை நயன்தாரா சந்தித்தது ஏதற்காக? தமிழக கட்சி தலைவர் பொறுப்பேற்க்கவா?

டில்லி: அறம் பட வெற்றியை அறிந்த மோடி நயன்தாரவை சந்திக்க விரும்பியதால் நயன்தாரா மோடியை டில்லியில் சென்று சந்தித்தார். இந்த சந்திப்பில் அறம் படம் பற்றி மட்டும் பேசியதாக  அரசு தரப்பில் கூறப்பட்டாலும் அவரிடம் தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்க மோடி அழைப்பு விட்டதாக அதிகார வட்டத்தில் பேசப்படுகிறாதாம்


அறம் பட டைரக்டர் கோபி நையினார் மீது கமலுக்கு அப்படி என்ன கோபம்?




சென்னை :அறம் பட டைரக்டர் கோபி நையினார் மீது கமலுக்கு சிறிது கோபமாம். காரணம் என்னவென்று கோடம்பாக்கத்தில் விசாரித்த போது இப்படி ஒரு கதை இருப்பதை தன்னிடம் தெரிவித்து இருந்தால் அவ்வை சண்முகியில் பெண் வேடம் போட்டு நடித்ததை போல அறம் படத்திலும் நடித்து கொடுத்து இருப்பேன். அப்படி நான் நடித்து இருந்தால் ஹாலிவுட் அளவில் பேசப்பட்டு கோபிக்கு ஹாலிவுட்டில் பட வாய்ப்பும் தனக்கு தமிழக முதல்வர் ஆவதற்கு நல்ல வாய்ப்பும் கிடைத்திருக்கும். அது தெரியாமல் இப்படி பண்ணிட்டாரே என்று கோபி மீது கமலுக்கு வருத்தமாம். ஹும்ம்




நயன்தாராவுடன் அடுத்த படத்தில் நடிக்க ஆசை- ரஜினிகாந்த

நடிகர் ரஜினிகாந்த அடுத்த படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடிக்க விருப்பம் தெரிவித்து தன் மேனேஜர் மூலம் நயன்தாராவிற்கு செய்தி அனுப்பினாராம். அதற்கு நயன்தாரா அவருக்கு பேத்தியாக வேண்டுமென்றால் நான் நடிக்க தயார் என்று பதில் சொல்லி  அனுப்பி இருக்கிறாராம். அதை கேட்ட பின் ரஜினி இமயமலைக்கு துறவறம் பூண்டு செல்ல முடிவு செய்துவிட்டாராம்


கோபி நையினார் தன்னை ஏமாற்றிவிட்டார்.


கத்தி படக் கதையை நம்மிடம் டிஸ்கஸ் பண்ணிய கோபி இந்த அறம் படக்கதையை டிஸ்கஸ் பண்ணாமல் நம்மை ஏமாற்றிட்டானே? சரியான கல்லுளி மங்கண்தான் இந்த கோபி


அன்புடன்
மதுரைத்தமிழன்

5 comments:

  1. எப்புடீங்க,இப்புடீல்லாம்.............///அருமை.ஆனாலும்,அறம் படத்துக்கு எந்த ஒரு ரூபத்திலாவது விருது கிடைக்க வாய்ப்பிருக்கிறது...........கூடவே, நயனுக்கும்......

    ReplyDelete
  2. காலக்கெரகமடி கருமாரி.

    ReplyDelete
  3. ஹான் !!
    படம் பற்றி கேள்வி பட்டேன் ரொம்ப நல்ல இருக்குனு பார்க்கணும்

    ReplyDelete
  4. நானும் உண்மைன்னு நினைச்சு வந்துட்டேன். சாரி

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.