Monday, December 11, 2017

why did modi cry at gujarat election meeting? (satire)
@avargalunmaigal
குஜராத்தில் மோடி  உணர்ச்சி வசப்பட்டு அழுததற்கு காரணம் என்ன தெரியுமா?(நகைச்சுவை)


குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பல இடங்களுக்கு சென்று தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் போது அவருக்கு பசிக்க ஆரம்பித்ததாம் அப்போது அவர் அருகில் இருக்கும் ஹோட்டலுக்கு தனது காரை விட சொன்னார். அதுவும் ஸ்டார் ஹோட்டல் எல்லாம் வேண்டாம் நடுத்தர ஹோட்டலுக்கு அழைத்து சென்ரால் போது என்று சொல்லி அப்படி ஹோட்டலுக்கு செல்லும் போது அவர் அதிகாரிகளிடம்  ஹோட்டலில் நான் சாப்பிடுவதற்கு ஆகும் செலவை நான்தான் என் சொந்தப் பணத்தில் இருந்து கொடுப்பேன் என்று கண்டிப்பாக சொல்லிவிட்டார்.





மோடி சாப்பிட்டு முடித்ததும் ஹோட்டல்காரர் நீங்கள் எங்கள் பிரதமராக இருப்பதால் இதை என் பரிசாக நினைத்து கொள்ளுங்கள் என்றாராம். மோடிதான் ஸ்டண்டு மாஸ்டர் ஆச்சே அதனால் உடனே இல்லை இல்லை பரிசாக நான் யாரிடம் இருந்தும் ஏதும் பெற்றுக் கொள்ளமாட்டேன். அதுவும் இங்கு நான் சாப்பிட்டதற்கு  நான் உழைத்து சம்பாதித்த பணத்தில் இருந்துதான் தருவேன் என்று  சொல்லி பில்லை கொண்டு வரச் சொன்னார்.

இறுதியாக ஹோட்டல் ஒனர் வேறு வழியில்லாமல் பில்லை கொடுத்தார். அதை பார்த்ததும் மோடி அதிர்ந்துவிட்டாராம். என்னாப்பா விலை மிக அதிகமாக இருக்கிறதே என்று  காரணம்  கேட்டதற்கு ஆமாம் சார் GST வரிக்கு அப்புறம் எல்லாம் விலை ஏறிவிட்டது மேலும் நீங்கள் சாப்பிடதற்கும் GST வரி அதிகம் என்று சொன்னதும் மயக்கம் வராத குறையாக பில்லை செட்டில் செய்துவிட்டு வந்து மீட்டிங்கில் பேசும் போது தான் உழைத்து சம்பாதித்த பணத்தை இப்படி வரி போட்டு கொள்ளை அடிக்கிறார்களே என்று நினைத்த போது அவர் கண்களில் இருந்து கண்ணிர் வர ஆரம்பித்துவிட்டதாம்.(தனக்கு வந்தால் இரத்தம், மற்றவனுக்கு வந்தால் தக்காளி சட்னியா!)

அதுதான் குஜராத்தில் நடந்த மீட்டிங்களில் மோடி உணர்ச்சி வசப்பட்டு அழுததற்கு காரணமாம்........ இதை அமித்ஷா யோகியிடம் சொல்லி சிரித்த போது அங்கு  இருந்த அமெரிக்க உளவு துறை  இதை கேட்டு அமெரிக்காவில் சொல்லி சொல்லி சிரித்தது என்  காதில் விழுந்ததால் அதை இங்கே பகிர்ந்துவிட்டேன்

கொசுறு :
குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையிடுகிறது' - நரேந்திர மோடி

பவர் உம்ம கையில்தானே இருக்கிறது ரெண்டு தட்டு தட்ட வேண்டியதுதானே அதைவிட்டுட்டு இப்படி அழுகலாமா மோடிஜி

அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments:

  1. எனக்கென்னவோ அவரது கண்ணீருக்கு காரணம் நீங்கள் என்றே தோன்றுகிறது.
    த.ம.1

    ReplyDelete
  2. மான்போல வந்தவனை ... யாரடிச்சாரோ .... யாரடிச்சாரோ ....

    ReplyDelete
  3. அழ வச்சிட்டானுங்களேன்னு அவரு நொந்து போயிருப்பாரு... நீங்க காமெடி பண்ணுறீங்க....
    நடக்கட்டும்...
    அருமை.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.