Saturday, January 14, 2012



'அந்த' ஐந்து நிமிட சந்தோஷம்......படிக்க தவறாதீர்கள் பெண்கள் ஒதுக்க வேண்டிய பதிவு அல்ல..


பார்க்கின் மர ஒரத்தில் இருந்த பெஞ்சில் ஒரு ஒரமாக ஒரு பெண்ணும் அதன் மறு ஒரத்தில்  ஒரு ஆணும் அமர்ந்து தன் குழந்தைகள் விளையாடுவதை  பார்த்து மகிழந்து கொண்டிருந்தனர். ஒரு சமயத்தில் அந்த இருவரின் கண்களும் ஓன்றை ஒன்று சந்தித்து கொண்டன.அவர்கள் இருவரும் புன்னகைத்து கொண்டனர். அப்போது அந்த பெண் அதோ அந்த ரெட்கலர் சட்டை போட்டு விளையாடுகிறானே அவந்தான் என் பையன் என்று சுட்டிகாட்டினாள். அந்த ஆணோ உங்கள் பையன் ரொம்ப ஹேண்ட்சம்மாக இருக்கிறான் என்று சொல்லியவாறே அதோ அந்த ஒயிட் கலர் கவுன் போட்டு சைக்கிள் ஓட்டிக் கொண்டிருக்கிறாளே அவள்தான் என் குழந்தை என்று சொன்னார். அதற்கு அந்த பெண் உங்கள் குழந்தை ரொம்ப க்யூட்டாக இருக்கிறது என்று சொன்னார்.

அதன் பின் இருவரும் அமைதியாக குழந்தைகள் விளையாடி  கொண்டிருப்பதை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது தன் கைக்கடிகாரத்தை பார்த்த அந்த ஆள் தன் குழந்தையை நோக்கி செல்லம் விட்டிற்கு செல்ல நேரமாகிவிட்டது. வா போகலாம். என்றார். அந்த குழந்தையோ அப்பா இன்னும் ஐந்து நிமிஷமப்பா என்றது ஒகே என்று சொன்னார் அவரும்.

ஐந்து நிமிடம் கழிந்ததும் கூப்பிட்ட போது இன்னும் ஒரு ஐந்து நிமிடமப்பா என்றது அவரும் ஒகே இதற்கு மேல் கேட்ககூடாது என்றார்.


இதையெல்லாம்  பார்த்து கொண்டிருந்த அந்த பெண் உங்களுக்கு மிகவும் ரொம்ப பொறுமை இருக்கிறது என்று பாராட்டினார்.

அதற்கு அவர் சொன்னார் கடந்த வருடம் என் மகன் இதே மாதிரி இங்கே விளையாடி கொண்டிருந்தான். அப்போது இப்படியெல்லாம் பொறுமையாக நான் டைம் செலவழித்தது கிடையாது அப்போது நான் அவசரப்படுத்தி என் மகனை வீட்டிற்கு அழைத்து சென்றேன்.அப்போது  அவனை நான் அவசரமாக அழைத்து சென்ற போது லாரி வந்து அவன் மீது மோதி அடித்து  சென்றது. அப்போது நான் அவன் கூட ஐந்து நிமிடம் செலவழித்து இருந்ததால் அப்படி நேர்ந்து இருக்காது அல்லவா?

அந்த நிமிடம் நான் உறுதி எடுத்தேன் அது மாதிரி இனிமேல் நடக்க மாட்டேன் என்று. என் மகள் ஐந்து நிமிடம் விளையாடி சந்தோஷம் அடைகிறாள். ஆனால் உண்மையில் நான் தான் அந்த ஐந்து நிமிடம்  அவள் விளையாடுவதை பார்த்து சந்தோசம் கொள்கிறேன்.

மக்காஸ் : வாழ்க்கையில் எதும் முக்கியமில்லை. நம்மால் எவ்வளவு நிமிடம் நம் குடும்பத்துடன் செலவழிக்க முடியுமோ செலவழியுங்கள். அதுதான் முக்கியம். இதை புரிந்தால் உங்கள் வாழ்க்கை இன்பமயம்.

நான் ஆங்கிலத்தில் படித்த கதையை நான் என் வழியில் வழங்கி இருக்கிறேன். நல்ல செய்தி நாலு பேரை அடைய வேண்டும் என்பதால்தான் இதை வழங்குகிறேன்

Life is all about making priorities, and family is one and only priority on top of all other, so spend all time you can with loved ones


18 comments:

  1. வாழ்க்கையில் எதும் முக்கியமில்லை. நம்மால் எவ்வளவு நிமிடம் நம் குடும்பத்துடன் செலவழிக்க முடியுமோ செலவழியுங்கள். அதுதான் முக்கியம். இதை புரிந்தால் உங்கள் வாழ்க்கை இன்பமயம்.

    அருமையான பகிர்வு..

    ReplyDelete
  2. நல்லா வைக்கிறாய்ங்கய்யா டைட்டிலு.

    ReplyDelete
  3. மனதை தொட்ட மிகவும் அருமையான கருத்துள்ள பகிர்வு .

    ReplyDelete
  4. ஆங்கில புத்தகங்கள் படிக்க இயலவில்லையே என்ற குறையைத்
    தீர்த்து வைக்கிறது உங்கள் சமீபத்திய இடுகைகள். தொடரவும்.

    ReplyDelete
  5. அருமையான விஷயங்களை அழகாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    தலைப்பு தான சிலரை ஆவலுடன் உள்ளே இழுக்கும், சிலரை தயக்கத்துடன் உள்ளே நுழையாமல் தடுக்கும்.

    //வாழ்க்கையில் எதும் முக்கியமில்லை. நம்மால் எவ்வளவு நிமிடம் நம் குடும்பத்துடன் செலவழிக்க முடியுமோ செலவழியுங்கள். அதுதான் முக்கியம். இதை புரிந்தால் உங்கள் வாழ்க்கை இன்பமயம்.//

    Very nice

    ReplyDelete
  6. @இராஜராஜேஸ்வரி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் பொங்கல் தின நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. @ஹாலிவுட் ரசிகன்
    இந்த காலத்துல இப்படி பட்ட தலைப்பை வைக்கலைன்னா யாருய்யா பதிவை எட்டி பார்க்குறாங்க
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் பொங்கல் தின நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. @ஏஞ்சலின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் பொங்கல் தின நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. @ ஸ்வராணி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    என்னதான் ஆங்கிலத்தில் படித்தாலும் அதை தமிழில் படிக்கும் போது கிடைக்கும் சுகமேதனிதான் அதனால்தான் இந்த முயற்சி

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் பொங்கல் தின நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. @வைகோ சார்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. எனது வலைத்தளத்திற்கு அடிக்கடி வருபவர்களுக்கு தெரியும் என் தளத்தின் தரம். நான் தரம் குறைந்த பதிவுகளை தருவதில்லை என்று. அதனால் அவர்கள் வருகை தர தயங்கமாட்டார்கள். தவறான எண்ணத்தில் வருபவர்களுக்கு நல்ல செய்தியை படிக்க வைப்பதுதான் எனது முயற்சி அதில் நான் வெற்றி பெறுவதாக நான் நினைக்கிறேன்


    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் பொங்கல் தின நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் நண்பரே......தொடருங்கள்............
    ta.ma3

    ReplyDelete
  12. /வாழ்க்கையில் எதும் முக்கியமில்லை. நம்மால் எவ்வளவு நிமிடம் நம் குடும்பத்துடன் செலவழிக்க முடியுமோ செலவழியுங்கள். அதுதான் முக்கியம். இதை புரிந்தால் உங்கள் வாழ்க்கை இன்பமயம்

    ReplyDelete
  13. @ இடி முழக்கம்
    @லக்ஷ்மி அம்மா
    @ சீனி

    அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!!!!!!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.