Tuesday, September 18, 2012


 படித்ததில் பிடித்தது.....

எனக்கு பிடித்த, ரசித்த பதிவுகளை பதிவிட்டவர் அனுமதியுடன் எந்து தளத்தில் வெளியிடுகிறேன். காரணம் எதிர்காலத்தில் நான் அதை மீண்டும் படிக்க வேண்டுமென்றால் அதை தேடி அலையத் தேவையில்லை. மேலும் இது பலர் கண்ணில் பட வேண்டும் என்று இதை மீண்டும் அளிக்கிறேன். இதை பதிய அனுமதி அளித்த திரு.பழனி.கந்தசாமி அவர்களுக்கு எனது நன்றிகள்



  கடவுளைப் பார்த்தவர்கள் யாரும் இல்லை.


Jayadev Das29 July 2012 12:06 AM

கடவுளைப் பார்த்தவர்கள் யாரும் இல்லை. \\ இந்த பிரபஞ்சத்தில் உள்ளதில் கண்ணாலோ, அறிவியல் உபகரணங்களைப் பயன்படுத்தியோ அறியக் கூடியது வெறும் 4 % மட்டுமே, மீதமுள்ள 96 % [ Dark Energy, Dark Matter] நம்மிடமுள்ள எதற்கும் சிக்காது என்று இன்றைய விஞ்ஞானமே சொல்கிறது. நிலைமை இப்படி இருக்க, கண்ணால் பார்த்தால் தான் நம்புவேன் என்று அடம் பிடிப்பது நியாயமா சார்??!! அப்ப, எதற்கும் சிக்காத Dark Energy , Dark Matter இருப்பதாக எப்படி சொல்கிறார்கள்? Galaxy - களில் உள்ள நட்சத்திரங்கள் அதன் மையத்தை கொண்டு சுற்றி வருகின்றன, Galaxy - யின் மையப் பகுதியில் இருந்து வெளியே செல்லச் செல்ல அவற்றின் வேகம் குறைய வேண்டும், ஆனால் எல்லாம் ஒரே வேகத்தில் சுற்றுவதைப் பார்த்தார்கள், கண்ணுக்குத் தெரிந்து எல்லாத்தையும் கூட்டிப் பார்த்தாலும் கணக்கு வரவில்லை, ஆகையால் Dark Matter இருப்பதாக முடிவுக்கு வந்தார்கள். ஆக, நேரடியாக 'பார்க்க' முடியாவிட்டாலும், விளைவை வைத்து பின்னால் சென்று அதற்க்கான root cause கண்டு பிடிப்பதும் அறிவியல்தான். அப்படியானால், இங்கே கடவுள் இருப்பதாக முடிவுக்கு வருவது எதை வைத்து என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு ஒன்று செய்யுங்கள், ஒரு மண் சட்டியை எடுத்துக் கொள்ளுங்கள், உங்கள் நண்பர்கள் எத்தனை பேர் உள்ளார்களோ அவர்கள் எல்லோரிடமும் காட்டி இதை யாரும் செய்யவில்லை தானாகவே களிமண் மீது நெருப்பு பிடித்து பானையாகி விட்டது என்று சொல்லுங்கள். லட்சம் பேரிடம் வேண்டுமானாலும் சொல்லுங்கள். ஒருத்தராவது, [அவர் மனநிலை தவறியவராக இருக்கக் கூடாது] நீங்கள் சொல்வதை நம்புகிறாரா என்று பாருங்கள். மண் சட்டியின் Complexity எவ்வளவு என்று பாருங்கள், அப்படியே மனிதனின் கண்கள், இதயம், கிட்னி, மூளை இதெல்லாம் எப்படி வடிவமைக்கப் பட்டுள்ளது, செயல் படுகிறது என்று பாருங்கள், அவற்றின் Complexity யையும் பாருங்கள். ஒரு மண் சட்டியே தானாக வந்ததாக யாரும் நம்பவில்லை அதன் பின்னால் ஒரு குயவன் இருந்தே தீருவான் என்றால் இவ்வளவு Complexity யையும் கொண்ட உடலுறுப்புகள் தானாக வருமா, அவை ஒருங்கிணைத்து செயல் படுமா, இவற்றின் பின்னால் யாரும் இருக்க வேண்டியதில்லையா என்று நீங்களாகவே கேள்வி கேட்டு ஒரு முடிவுக்கு வாருங்கள். உடலுறுப்புகள் மட்டுமல்ல, ஒரு செல்லை எடுத்துக் கொண்டால் கூட அதன் complexity அது நீங்கள் வசிக்கும் நகரின் complexity யை விட அதிகம். அணுவில் இருந்து, பேரண்டம் வரைக்கும் ஒவ்வொன்றும் அதிசயம், அற்ப்புதம், தானாக வர வாய்ப்பே இல்லை. படைப்பு என்ற ஒன்று இருந்தால் நிச்சயம் படைத்தவன் ஒருத்தன் இருந்தே தீருவான். It is as simple as that.

மேலே உள்ளது நண்பர் ஜெயதேவ் தாஸ் அவர்கள் என்னுடைய "கடவுள் இருக்கிறாரா இல்லையா" http://swamysmusings.blogspot.com/2012/07/blog-post_28.htmlஎன்ற பதிவிற்குப் போட்ட பின்னூட்டம். இதில் நல்ல கருத்துகள் இருப்பதால் அது பின்னூட்டத்தில் மட்டுமே இருந்தால் பலருடைய கவனத்திற்கு வராது என்பதால் ஒரு தனிப் பதிவாக வெளியிடுகிறேன்.

இதை நான் அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். ஏனென்றால் இதில் மாற்றுக் கருத்து சொல்வதற்கு இடமே இல்லை.

ஒன்று மட்டும் சொல்லிக்கொள்ள ஆசைப் படுகிறேன். தத்துவ விசாரணை அதாவது ஆராய்ச்சிக்கு என்றும் முடிவு இல்லை.

நன்றி, வணக்கம்.

========

படிக்காதவர்கள் படிக்கவே நான் படித்து ரசித்த இந்த பதிவு


அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்

35 comments:

  1. அவர் சொல்வதில் மாற்றுக்கருத்தில்லை.அந்த சக்தியை இனங்கண்டு வணங்கலாம்.ஆனால் எதற்கும் பொருந்தாத பொருளில்லாதா உருவத்தை எப்படி வணங்குவது?அப்படியானால் எம்மததைதையும் சாராமல் எந்த உருவ வழிபாடும் கொள்ளாமல்..ஏதோ ஒரு சக்தி நம்மை ஆட்டி வைக்குதே..அந்த சக்தியை சத்தமில்லாமல் வணங்கலாம் அதில் தவறேயில்லை.

    ReplyDelete
    Replies
    1. நமக்குமேல் ஒரு சக்தி உண்டு என்பதுதான் எனது நம்பிக்கை. அதை நம்புவதும் நம்பாமல் இருப்பதும் வணங்குவது வணங்காவது இருப்பது அவரவர் இஷ்டம்,இதுதான் என் கருத்து

      Delete
  2. நச்சென்ற கருத்துப்பதிவுக்கு நன்றி...வணங்குவது வணங்காமல் போவதும் அவரவர் தனிப்பட்ட விருப்பங்களே...என்னைபொருத்தவரை இதில் ஆராச்சி செய்து எதை நிரூபிக்கப்போகிறோம் என்பதே...இப்பல்லாம் இது ஒரு ஸ்டைலா பூட்ச்சிபா!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் கருதுவதும் நான் கருதுவதும் ஒன்றுதான். நன்றி

      Delete
  3. இந்தப் பதிவை நான் பழனி கந்தசாமி அய்யாவின் தளத்திலும் படித்துள்ளேன்.. ஏற்றுக்கொள்ளக் கொடிய கருத்துக்கள்... சக பதிவர்களை உற்சாகப்படுத்தும் உங்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  4. ///அந்த சக்தியை சத்தமில்லாமல் வணங்கலாம் அதில் தவறேயில்லை.///

    எதற்கு வணங்க வேண்டும்? வணங்காவிட்டால் சாமி கண்ணைக் குத்திவிடுமா!

    என்னுடைய experience...
    நான் என் அப்பா அம்மாவை வணங்குவதில்லை; என் பெற்றோர்கள் என்னை அதற்க்காக தண்டிப்பதில்லை; அதே மாதிரித்தான் என் குழந்தைகளும்; என்னை என் மனைவியை வணங்குவதில்லை; அதற்க்காக தண்டிப்பதில்லை! இந்த வணங்குற "சில்லறை" விஷயத்திர்க்காக யாரும் யாரையும் தண்டிப்பதில்லை..

    கடவுள் இருந்தால், அப்படி ஒருவர் இருந்தால், யாரும் கும்பிடத் தேவையில்லை; என் அவர் நல்லவர்; அப்படி கும்பிடாமல் இருப்பவர்களை தண்டித்தால், அந்தக் கடவுள் ஒரு சில்லரையே!
    அதற்கு என் பெற்றோர்களே எவ்வளோவோ மேல்...தண்டிக்க மாட்டார்கள்...

    ReplyDelete
    Replies
    1. ஜெயதேவ் இங்கு சொல்லி இருப்பது "படைப்பு என்ற ஒன்று இருந்தால் நிச்சயம் படைத்தவன் ஒருத்தன் இருந்தே தீருவான்" என்றுதான் அவர் கும்பிடு என்றோ கும்பிடாதே என்றோ சொல்லவில்லை. கும்பிடாதாவர்களுக்கு தண்டிப்பார் என்று இந்த பதிவில் எங்கும் கூறவில்லையே

      Delete
  5. //கடவுளைப் பார்த்தவர்கள் யாரும் இல்லை.//

    இருந்தாத் தானே பார்க்க முடியும்?

    ReplyDelete
    Replies
    1. காற்றை யாராலும் பார்க்க முடியாது அதனை அனுபவிக்கதான் முடியும் உணர்த்தான் முடியும் அது போலதான். நீங்கள் காற்று புகாத அறையில் இருந்துகொண்டு காற்றே இந்த உலகில் இல்லை என்று சொல்வது போலிருக்கிறது நண்பரே

      Delete
  6. சிந்திக்கும்விதமான கருத்து..

    கூடு கெடின் மற்று ஓர் கூடு செய்வான் உளன்
    நாடு கெடினும் நமர் கெடுவார் இல்லை
    வீடு கெடின் மற்று ஓர் வீடு புக்கால் ஒக்கும்
    பாடது நந்தி பரிசு அறிவார்க்கே. ஒன்பதாம் தந்திரம்

    என்ற பாடல்தான் நினைவுக்கு வந்தது..

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் தரமிக்க கருத்துக்கும் நன்றி

      Delete
  7. சரி நீங்க சொன்னா கேட்டுகிறோம் இருக்கின்றிங்களா இல்லங்கிறீங்களா ?

    ReplyDelete
    Replies
    1. மீண்டும் ஒரு முறை படித்துவிட்டு இருக்கிறாரா இல்லையா என்று நீங்களே சொல்லுங்களேன்

      Delete
  8. வாவ்........... what a surprise!! நீங்க நெத்தி அமேரிக்கா படிக்க போவது குறித்து எழுதியிருந்தீங்க.... பத்திட்டு சும்மா போயிட்டேன். சரி இன்னைக்கு ஏதோ எழுதியிருக்கீங்கன்னு பார்க்க வந்தேன்........... என்னை திக்கு முக்காட வச்சிட்டீங்க!! நன்றி நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. கருத்து நீங்கள் சொன்னவிதம் நன்றாக இருந்தது அதனால்தான் பழனிச்சாமி அவர்கள் பதிவாக இட்டுள்ளார் நானும் அது நாலு ப்றுக்கு சென்று அடைய வேண்டுமென்று போட்டு இருக்கிறேன். அவ்வளவுதான் நண்பா

      Delete
  9. அருமையாக இருந்தது நீங்க தேர்ந்தெடுத்த பதிவு மிக்க நன்றி சகோ எங்க பக்கமும் வந்து எதாவது சொல்லிட்டு போங்க

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கண்டிப்பாக உங்கள் தளம் வருகிறேன். முடிந்தால் வலைதள முகவரி அனுப்பவும்

      Delete
  10. இருக்கிறாரா ... இல்லையா... - அவரவர் நம்பிக்கை... அறிந்து தெரிந்து புரிந்தவர்கள் இதைப்பற்றி மேலும் ஆராய்வதில்லை...

    உண்மையான ஆன்மீகம் : தன்னை பிறரிடம் காண்பதே...

    சக பதிவரின் கருத்தையே பதிவாகிப் பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் தரமிக்க கருத்துக்கும் நன்றி

      Delete
  11. சொல்வது உண்மை ஆனால்

    ReplyDelete
  12. எனக்கு கூட நம்மை மீறிய சக்தி ஒன்றிருப்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால், அது எல்லாமே செய்துடும் என்பதில்தான் மாற்றுக்கருத்து

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி

      Delete
  13. நல்ல பதிவை
    பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி

      Delete
  14. //கடவுளைப் பார்த்தவர்கள் யாரும் இல்லை.//

    இருந்தாத் தானே பார்க்க முடியும்?
    ------


    தெரிந்தால் தானே பார்க்க முடியும்?

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி

      Delete
  15. நமக்கு மீறிய சக்தி உள்ளது .

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி

      Delete
  16. இதைப் படித்தவுடன் ஜபம் செய்தேன். ஜபத்துக்கு இவ்வளவு மகிமையா! இந்த பின்னூட்டங்களைப் படித்த உடன் போற வழிக்கு புண்ணியம் தேடிக்க் கொள்ளலாம் என்று ஜபம் செய்தேன்.

    என்ன அதிசயம்! உலகத்தின் எட்டாவது அதிசயம்! எந்தன் ஏசு இப்போ என்னுடன் பேசினார். ஏசு சொன்னார், “உலகத்தைப் படைத்து நான் தான், "ஆதாம் ஏவாள் மூலம் தான் எல்லா மதக் கடவுள்களையும் நான் தான் படைத்தேன்,” என்று சொன்னார். கடவுள் என்றும் பொய் சொல்லமாட்டார்! அதுவும் ஏசு கடவுள் என்றும் பொய் சொல்லமாட்டார்!

    மீதி மதத்தை பின்பற்றுபவர்கள் அறில்லாமல் பேசுவார்கள். அவர்களுக்கு ஜபம் செய்து ஸ்தோத்ரம் சொல்லி அவர்களை நீ தான் மன்னிக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்று என்னிடம் ஏசு ஒரு ஆணை இட்டார். உலகத்தின் ஒரே கடவுளின் ஆணையை இந்த “நம்பள்கி” அடிமை எப்படி மீறமுடியும். கடவுளை நம்பினார் கைவிடப்படார்; நான் மறைத் தீர்ப்பு!

    கடவுள் இல்லை இல்லை என்று நான் சொன்ன அறியாமையை நினைத்து நினைத்து நான் வெட்கப்படுகிறேன்; என்னை எல்லோரும் மன்னிக்கவேண்டும்; கடவுள் உண்டு கடவுள் உண்டு! அந்த ஒரே கடவுள் ஏசு தான்!

    இந்த உலகத்தில் உள்ள ஒரே ஒரு கடவுள் ஏசு மட்டும் தான்; மீதி எல்லாம் டுபாக்கூர் கடவுள்கள் என்று ஏசு என்னிடம் சொன்னார்.

    நாத்திகவதியான் என்னை ஆத்திகவாதியாக மாற்றிய ஏசு மற்றும் அவர் புகழ் வாழ்க.. எல்லா மதமும் சம்மதம்; அதனால், ஏசு உருவாக்கின இதர மதக் கடவுள்களும் வாழ்க!

    ReplyDelete
    Replies
    1. ஜெயதேவ் சொன்னதற்க்கும் நீங்கள் இங்கு சொல்வதற்கும் சம்பந்தம் ஏதுமில்லை... இருந்தாலும் உங்க ஆசையை கெடுப்பானே என்று உங்கள் கருத்தையும் இங்கு வெளியிட்டு உள்ளேன். சந்தோசம்தானே நண்பரே

      Delete
  17. உங்கள் வருகைக்கும் தரமிக்க கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  18. I cannot understand the NAMMILIKI WORDS. because Hindu region is medically support and support with our life style.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.