ஜெயலலிதா செய்த அற்புதமும் ஒபாமாவின் பாராட்டும்
எதிலும் வித்தியாசமாக செயல்படுபவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள். அவர் செய்த அற்புதம் அமெரிக்காவையே முக்கில் விரலை வைக்க வைத்துவிட்டது.
உலகெங்கும் உள்ளவர்களுக்கு, மின்சாரம் இருந்து ,அதை தொட்டால்தான் ஷாக் அடிக்கும் என்று நேற்றுவரை நினைத்து இருந்தார்கள். அந்த நினைப்பை தூக்கி ஏறியச் செய்தவர் நமது தமிழக முதல்வர். அதை மின்சாரத்திற்கு விலையை ஏற்றியதன் மூலம் தமிழக மக்களுக்கு மின்சாரம் இல்லாமல் " ஷாக்" டீரிட்மெண்ட் கொடுத்துள்ளார்.
சங்கரன் கோவில் இடைத்தேர்தலின் போது எனது நல்லாட்சியை புரிந்து கொண்டு என்னை சங்கரன் கோவில் மக்கள் மீண்டும் அதிக வாக்களித்து வெற்றி பெறச் செய்வார்கள் என்பது எனக்கு தெரியும். அப்படி அவர்கள் செய்தால் அவர்களுக்கு நான் தொடர்ந்து நல்லதை செய்வேன் என்று வாக்குறுதி அளித்தார்.
அவர் சொன்னபடி செய்த தமிழக "புத்திசாலி" மக்களுக்கு ஒரு நல்ல "ஷாக்" டீரிட்மெண்டை கொடுத்து ஆரம்பித்துள்ளார்.
என்ன மக்காஸ் டீரிட்மெண்ட் எப்படி இருக்கிறது? இது போல பல டீரிட்மெண்ட் வரும் நான்கு ஆண்டுகளுக்கு தொடரும்..இதுக்கே இப்படி அசந்துட்டா எப்படி?
ஆமா இந்த ஷாக் டீரிட்மெண்ட் ஒகே இதுக்கு ஒபாமா பாராட்டினரா ? எப்படி என்று கேட்கிறீர்களா?
ஆமாம் மக்காஸ் பொருளாதார தியரியை நிறுபவித்து காட்டியதால் அமெரிக்க அதிபர் ஒபாமா அவரை மிக சிறந்த பொருளாதார நிபுணர் என்று பாராட்டி விரைவில் அமெரிக்காவிற்கு அழைத்து பாராட்ட போகிறார்.
தியரி புரியாதவற்களுக்கு : எங்கே டிமாண்ட் அதிகம் இருந்து அங்கே சப்ளை மிக கம்மியாக இருந்தால் விலை அதிகரிக்கும் என்பது தியரி அதை ஜெயலலிதா அவர்கள் நிறுபவித்து காட்டியுள்ளார்...
ஜெயலலிதா நன்றாக படித்த அரசியல் வாதிதானே இதில் உங்களுக்கு ஏதும் சந்தேகம் இருந்தால் அவருக்கு மெயில் அனுப்பி விசாரித்து கொள்ளவும்.
பதிவாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை:
நீங்கள் ஜெயலலிதாவை ரொம்ப நக்கல் பண்ணி பதிவு போடுவதாலும் மேலும் இந்த பவர் கட்டை வைத்து நிறைய ஜோக்குகள் போட்டு அவரை கிண்டல் செய்வதால் அதை குறைக்கும் வண்ணம் லேப்டாப் வைத்து பதிவு போடுபவர்களின் வீட்டிற்கான மின்சாரகட்டணம் மற்றவர்களின் கட்டணத்தைவிட 10 % அதிகம் என்று அறிவிக்க போவதாக செய்திகள் எனக்கு வந்து சேர்ந்துள்ளன. அது மட்டுமல்லாமல் நீங்கள் வைத்திருக்கும் கம்பியூட்டருக்கு ஒவ்வொருவரும் பதிவு கட்டணம் செலுத்தி லைசன்ஸ் எடுக்க வேண்டுமென்றும் நீங்கள் போடும் பதிவுகளின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு வரிகள் விதிக்க வேண்டுமென்றும் ஆனால் அவரை பற்றி புகழ்ந்து எழுதும் பதிவுகளுக்கு மட்டும் கேளிக்கை வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கபடும் என்று திர்மானித்திருக்கிறார் என்று நம்பகத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஜாக்கிரதை மக்காஸ்
அன்புடன்
மதுரைத்தமிழன்