Friday, December 22, 2017

avargalUnmaigal
அப்பாவி மனைவியும் அதிர்ஷ்டசாலி கணவனும் .


நேற்று வேலையில் இருந்து வீட்டிற்கு வந்ததும் என் மனைவி எனக்கு காபி போட்டு கையில் வந்து கொடுத்தாள்( ஆஹா பதிவு எழுதும் போதுதான் இப்படி எல்லாம் கனவு வருவது போல நினைத்து பார்த்து எழுத முடிகிறது,, இப்படிப்பட்ட கனவுகள் கண்டால் அது நிறைவேறுமா என்று நான் அப்துல் கலாமை நேரில் வந்து கேட்பதற்கு முன் அவர் போய் சேர்ந்துவிட்டார்... நல்ல மனுஷன் அதனாலதான் என்னை சந்திக்கும் முன்னே போய் சேர்ந்துவிட்டார்)

ஆ எங்க விட்டேன் என் மனைவி கையில் காபி கொண்டு வந்து கொடுத்த இடத்தில்தானே...


அப்படி காப்பி கொடுத்துவிட்டு அவள் எங்கிட்ட பேச ஆரம்பித்தாள் .அப்போது அவள் என்னங்க ....கடைசியாக நீங்க எப்ப என்னை மிக அழகாய் இருக்கிறாய் என்று சொன்னீங்க என்று கேட்டாள்..


அவள் கேள்வியை சீரியஸாக நினைத்து நானும் யோசிக்க ஆரம்பித்தேன்... நான் யோசிக்க நேரம் எடுத்து கொண்டதை பார்த்தது அவள் பொறுமை இல்லாமல், சரி.... சரி ....நீங்க யோசிப்பதை நிறுத்துங்க.... நானே சொல்லிடுறேன் நீங்க கல்யாணம் ஆன முதல் ஆண்டு சொன்னீங்க அதற்கு பின் நீங்க சொல்லவே இல்லை..


இல்லைம்மா நான் வந்து........

நிறுத்துங்க நிறுத்துங்க... உங்களை பற்றி எனக்கு நல்லா தெரியும் ...இத்தனை வருஷம் நான் உங்கிட்ட குடும்பம்  நடத்தின எனக்கு நீங்கள் என்ன சொல்ல வருவீங்க என நல்லாவே தெரியும்...


இல்லையம்மா நான் என்ன சொல்ல வறேன் என்றால்.....


நீங்க சொல்ல வருவதை நிறுத்துங்க.... இப்ப என் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லுங்க... இப்ப ரீசண்டா நீங்க யார்கிட்டே எந்த பெண்கிட்டே அழகாகா இருக்கிங்க என்று சொல்லி இருக்கீங்க(என் மைண்ட் வாய்ஸ் நிச்சயம் அதிரா மற்றும் ஏஞ்சல்கிட்டே சொல்லி இருக்கமாட்டேன் காரணம் அதிரா ஊஞ்சலில் ஆடும் பேய் ,,ஏஞ்சல் ஒரு காக்கா/சேவல் )

உம்ம்ம்ம் அது வா நான்.....


இங்க பாருங்க நீங்க பொய் சொன்னால் நான் எங்க அம்மாவீட்டிற்கு போய்விடுவேன் (என் மைண்ட் வாய்ஸ் நல்லவேளைடா  அம்மாவை நம்ம வீட்டிற்கு கூட்டி வந்திடுவேன் என்று சொல்லாத வரைக்கும் நல்லதுதான்)


இல்லைம்மா நான் உன்னைப் பார்த்துதான்.....

நிறுத்துங்க நீங்க என்கிட்ட பொய் சொல்ல வறீங்க... எனக்கு தெரியும் நீங்க நேற்று பேஸ்புக்கில்  ஒரு பெண்கிட்டே நீ ரொம்ப அழகாக இருக்கே அப்படின்னு என்ன என்னவோ சொல்லி வழிந்திருக்கீங்க.....

அடியே முதலில் என்னை பேச விடுடி.... நீ ரொம்ப அழகுதானடி ஆனால் அதை பலமுறை உன்னிடம் சொல்ல வந்தும் சொல்லாமல் இருந்துவிட்டேன் காரணம் அய்யா எதற்கு நம்மை புகழ்ந்து வழிகிறார்  என்று தப்பாய்  நினைத்து கொள்வாய் என்பதால் சொல்ல வாய் வந்தும் சொல்லாமல் இருந்துவிட்டேன். அதுதான் உண்மை.. அதுமட்டுமல்ல நேற்று அந்த பெண்னிடம் அழகாக இருப்பாய் என்று வழிந்து சொன்னதற்கு உண்மை காரணம் உன்னிடம் நேரில் சொல்ல முடியவில்லை. அதனால் பேஸ்புக் மூலமாவது மனதில் நினைப்பதை சொல்லிவிடுவோம் என்று சொல்லிவிட்டேன் அதுதான் உண்மை


சரிங்க என்னிடம் நேரில் சொல்ல பயந்து ஏன் அந்த பெண்னிடம் போய் சொல்லி இருக்கீங்க அது தப்புதானே

அட லூசு அந்த பெண் நீதான் என்று எனக்கு நல்லாவே தெரியும் நீதான் பேக் பேஸ்புக் ஐடி கரியேட் பண்ணி எனக்கு ரிக்வெஸ்ட் அனுப்பி இருக்கிற?


ஆமாம் அது எப்படி நான் கரியேட் பண்ணியது என்று கண்டுபிடிச்சீங்க..


அதுவா நீதான் சரியான அப்பாவி என்று எனக்கு தெரியுமே. நீ க்ரியேட் பண்ணிய ஐடிக்கு பெயர் மட்டும்தான் மாற்றி வைத்திருக்கிற ...ஆனால் அதில் உள்ள பிறந்த நாள் ,தொடர்பு போன் நம்பர் என்று எல்லாம் உன்னை பற்றிய தகவலை கொடுத்திருக்கிற


அதுமட்டுமல்லாமல் ஐடி கிரியேட் பண்ணி ரிக்வெஸ்ட் அனுப்பிவிட்டு அந்த அக்கவுண்டை லாக் அவுட் பண்ணாமல் திறந்தே வைச்சிருக்கிறதை நான் தற்செயலாக பார்த்திட்டேன்...


ஹீஹீ சாரி மன்னிச்சுங்கோங்க நான் எவ்வளவு முட்டாளா இருக்கிறேன் பாருங்க...

ஹீஹீ நீ முட்டாளா இருந்தாலும் அழகாகத்தான் இருக்கே...
(மைண்ட் வாய்ஸ்:அடியே நீ முட்டாள் என்பதை நான் என்ன் வாயால் சொன்னால் பூரிக்கட்டை பறக்குமே  : இப்படி முட்டாளா இருப்பதால்தானே நாம் இவளை கல்யாணம் பண்ணிக் கொண்டோம்

மதுரையானந்தா பொன் மொழி : ஏமாறும் பெண்களுக்கு ஏமாற்ற தெரியாது

அன்புடன்
மதுரைத்தமிழன்

20 comments:

  1. அழும் பெண்களுக்கு அழவைக்கத் தெரியாது. கோபப்படும் பெண்களுக்கு கோபப்படுத்தத் தெரியாது. சிரிக்கும் பெண்களுக்கு சிரிக்கவைக்கத் தெரியாது. எவ்வளவு சொல்லலாம்?!!

    ReplyDelete
    Replies
    1. நான் மூன்று பதிவா போட வைத்து இருந்த விஷயத்தை இப்படி ஒரே வரியில் சொல்லிட்டு போயிடீங்களே ஸ்ரீராம்

      Delete
  2. ஏதோ ஒரு அதிருஷ்டத்தில் மாட்டாம தப்பிச்சுட்டீங்க போல!

    ReplyDelete
    Replies
    1. அதிர்ஷடத்தில் தப்பி வந்தாலும் விடாமல் பிடிச்சு கொடுத்திடுவீங்க போல இருக்கே

      Delete
  3. அல்லது தெரியாத மாதிரி நடிப்பார்கள்! :)

    ReplyDelete
    Replies
    1. உஷ்ஷ் வெங்க்ட்ஜி அப்படி எல்லாம் பளிஸ் சென்று சொல்லிறக்கூடாது அப்புறம் அடுத்த வேளை சாப்பாட்டிற்கு கஷ்டப்படனும்

      Delete
  4. நேத்து பதிவை போடறேன்னு சொல்லி என்னை ராக்கோழி மாதிரி 1 மணிவரைக்கும் டாஷ்போர்ட் ஓடிஓடி பார்த்தேன் இப்படி பண்ணினத்துக்கு இவரை என்ன செய்யலாம் மாமி :)

    ReplyDelete
    Replies
    1. மாமியின் சார்பாக இந்த பதில் : அது என்னவோ ஒரு லண்டன் பொண்ணு ஏதோ ஒரு இட்லி செஞ்சாங்கண்ணு பேசிக்கிறாங்களே அதுல இரண்டு இட்லி வாங்கி கொடுத்துடும்மா இப்ப எல்லாம் யாரையாவது பழி வாங்கனும் என்றால் ராமசேரி இட்லிதான் வாங்கி கொடுப்பதுதான் இந்த கால டிரெண்ட்டாம்

      Delete
  5. வரலாறு முக்கியம் அமைச்சரே :) சேவல் கோழி புறா முயல் எலி ஆடு எல்லாத்தையும் தெளிவா சொல்லணும் :)

    ReplyDelete
    Replies
    1. அவ்வளவுதானா இல்லை இன்னும் இருக்கா?

      Delete
  6. ஹாஹா :) ஏமாளிகளுக்கு ஏமாற்றத்தெரியாது :) தப்பிச்சீங்க நீங்க

    ReplyDelete
    Replies
    1. இப்படி எல்லாம் சொல்லி ஏமாற்றவதினால்தானே பெண்களிடம் இருந்து தப்பிக்க முடியும்

      Delete
    2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எதுக்கு நீங்க பெண்களிடம் இருந்து தப்பிக்கோணும்?:).. நீங்க மாமியிடம் இருந்து மட்டும்தானே தப்பிக்கோணும்:)) பன்மையில் ஜொள்றீங்க பயம்ம்ம்ம்மாக்கிடக்கூஊஊஊஊஊ:))..

      Delete
    3. வாய் தவறி உண்மையை சொல்லிட்டேன்........அதை கண்டுபிடிச்சு ஊர் எல்லாம் தெரியும்படி செய்திட்டீங்களே அதிரா...

      உங்களுக்கு பொறாமை என்னடா இவன் எவ்வளவு அடி வாங்கினாலும் இப்படி ஜொள்ளிட்டு இருக்கானே என்று

      Delete
  7. பாவம் ட்றுத் நீங்க:)).. வீட்டில் ஏற்படும் பூரிக்கட்டை அடியின் வலியைப் போக்க.. :) இப்பூடி நம்மை வம்புக்கு இழுத்து.. பேய் சேவல் காகம் எனச் சொல்லி உங்கள் எரிச்சலைத்தீர்த்துக் கொள்றீங்க:) உங்கள் வலி புரிவதனால்:).. பேசாமல் விட்டு விடுகிறேன்:) ஹா ஹா ஹா:))..

    ReplyDelete
    Replies
    1. இது இது நட்புக்கு அழகு....

      Delete
  8. நீங்க செஞ்சது ஒண்டும் தப்பில்லை ட்றுத்:) பேஸ் புக்கில் அழகான பெண்ணைப்:) பார்த்துத்தானே.. நீ அழகூஉ எனச் சொன்னீங்க?:)).. நீங்க நேர்மையாத்தான் இருக்கிறீங்க அது மாமிக்குப் புரியமாட்டேன் என்கிறது போலும்:))

    ReplyDelete
  9. அதுசரி ஸ்ரீராம் சொன்னதிலிருந்து மீ உசாராகிட்டேன்ன்ன்ன்:)).. என் கொப்பி வலது சொற்கள் ஒவ்வொரு போஸ்ட்டிலும் வருதூஊஊஊஊஊஊ:).. இதோ புறப்படுறேன்ன்ன்ன் காண்ட் கோர்ட்டுக்கு:)).. நேக்கு நீதி வேணும்ம்ம்:)).. நேற்று கிட்னி:).. இன்று ஆ.. எங்கின விட்டேன்ன்ன்ன்:)) ஹா ஹா ஹா:)).. விடமாட்டமில்ல:))..

    போகிறபோக்கைப் பார்த்தால்.. பன்றியோடு சேர்ந்த பசுவின் கதையாகிடப்போகுது :)) உங்க கதை:)).. ஹா ஹா ஹா:)..

    ReplyDelete
  10. ஒரு அனுபவஸ்தன் சொல்வதைக் கேட்டுக் க்லொள்வதே நல்லது

    ReplyDelete
  11. இந்த அறியாமைதான் பொழைக்க வைக்குது உங்களையெல்லாம்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.